Pages

Thursday, November 2, 2017

அந்தணர் ஆசாரம் - 20 ஔபாசனம் தொடர்ச்சி.




நெல் யவை ஆகியன நூறு கொண்டது ஒரு ஆஹுதி பரிமாணம். அன்னமானால் இரண்டு மடங்கு, மயில் முட்டை அளவு. கோழிமுட்டை அளவு பிண்டம் எனப்படும். அவதானம் என்பது பெருவிரல் கணு அளவாகும். ஸ்விஷ்டக்ருத் அவதானத்தை விட அதிகமாக இருக்க வேண்டும். அது அவதானத்தைவிட பெரியதாக இருக்க வேண்டும். அது நான்கு கணு அளவாகும். ஔபாசன ஹோமம் நுனி விரல்களால் செய்யக்கூடியது. விரல்களின் வடபுறமாக ஹோமம் செய்க. நிமிர்த்திய கையால் பெருவிரலின் நுனியால் பிடிக்கப்பட்ட ஹவிஸை விரல்கள் அனைத்தையும் சேர்த்த வண்ணம் மௌனமாக ஹோமம் செய்ய வேண்டும். மௌனம் என்பது மந்திரம் தவிர எதையும் பேசாமல் என்பதே.
வஸ்திரம், இலை, கை, முறம், வாய், கட்டை,விசிறி இவற்றால் அக்னியை ஜ்வலிக்க செய்யக்கூடாது.
ஊது குழாய், புல், கட்டை இவற்றில் ஒன்றை மத்தியில் வைத்துக்கொண்டு முகத்தால் (வாயால் ஊத்தி) ஜ்வலிக்க செய்ய வேண்டும். அதாவது வாயால் நேரடியாக ஊதக்கூடாது.
காய்ந்த கட்டைகளால் ஜ்வலிக்கிற, புகை இல்லாத. சின்ன சின்ன ஜ்வாலைகளுடன் சாந்தமாக இருக்கும் அக்னியில் ஹோமம் செய்ய வேண்டும்.
அக்னியில் உள்ள தணல்கள் மெல்லியதான சாம்பலுடன் சேரும்போது நீல ஜ்வாலை உண்டாகும். இதில் ஹோமம் செய்வது பிரம்மத்திடம் ஹோமம் செய்வதாகிறது.
எல்லா அக்னி காரியங்களையும் அவரவர் க்ருஹ்ய சூத்திரத்தை அனுசரித்தே செய்ய வேண்டும்.
குளிக்கும்போது பேசினால் வருணன் அழகை அபகரிப்பான், ஹோமம் செய்கையில் பேசினால் அக்னி தனத்தை அபகரிப்பான். சாப்பிடும்போது பேசினால் ம்ருத்யு ஆயுசை அபகரிப்பான். ஆகையால் இந்த மூன்றையும் மௌனமாகவே செய்ய வேண்டும்.

No comments: