Pages

Thursday, August 3, 2017

புஷ்கரம்




என் மகனிடமிருந்து.... மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி போஸ்ட்க்கு மெடீரியல் கொடுத்தல்!
---
நம்மூரில் மஹாமகம் இருப்பதால் போலும் புஷ்கரம் பிரசித்தி அடையவில்லை . ஆனால் புராண ப்ரமாணங்கள் இதற்கும் இருப்பதாலும் லோகத்தில் தர்மங்கள் நாளுக்கு நாள் க்ஷீணித்துக்கொண்டு போவதாலும் இயன்றவரை எளிய தர்மங்களையாவது நடத்தவேண்டியிருப்பதாலும் ஶ்ரீ பெரியவாள் ஆந்த்ர தேசத்தில் வழக்கத்தில் உள்ள இதனை நாமும் செய்யலாமே என்று நமக்கு போதிக்கிறார்கள்.

மஹாமகம் குறிப்பிட்ட குளத்தில் குறிப்பிட்ட லக்னத்தில் தான் பலன் அளிக்கும். புஷ்கரமோ ப்ருஹஸ்பதி ஒரு ராசியில் ஸஞ்சரிக்கும் முதல் மற்றும் கடைசி 12+12=24 நாட்கள் முழுதும். தவிர இடைப்பட்ட நாட்களிலும் நடுப்பகலில். ஆகையால் இது மஹாமகத்தை விட அதிக புண்ய லாபம் தருகிறது எனலாம்.

இதையடுத்து இதன் ப்ரமாண வாக்யங்களைப் பதிவிடுகிறேன். இவை கடந்த வருடம் விஜயவாடா சாதுர்மாஸ்ய சமயத்தில் சேகரித்தவை. - நெரூர் ஶ்ரீரமண சர்மா.

ப்ரஹ்மாவின் கமண்டலுவில் ஸர்வ தீர்த்த ராஜாவான புஷ்கரர் என்பவர் இருந்தார். 3½ கோடி தீர்த்தங்கள் உலகில் இருப்பதாகவும் இவைகளுக்கு இவரே அதிபதி என்றும் சொல்லப்படுகிறது. அவ்வண்ணம் இருக்க ப்ருஹஸ்பதி ப்ரஹ்மாவை வேண்டினார் “க்ரஹங்களுக்கு நான் அதிபதியாகவேண்டும், ஸர்வஜ்ஞத்வம் வேண்டும், பூஜிக்கத்தகுந்த ஸ்தானம் வேண்டும், மேலும் உமது கமண்டலுவில் உள்ள இந்த புஷ்கரர் என்னிடம் வரவேண்டும்” என்று. புஷ்கரர் ப்ரஹ்மாவிடம் “நான் உம்மை விட்டுச் செல்லமாட்டேன்” என்றார்.

ப்ரஹ்மாவோ “நான் வரம் அளித்தமையால் என உத்தரவுபடி குறிப்பிட்ட காலமாவது நீர் அவ்வாறு இருக்கவேண்டும். அவர் ஒவ்வொரு ராஶியிலும் ப்ரவேசித்தவுடன் 12 நாளும் அந்த ராஶியிலிருந்து விலகுவதற்கு முன் 12 நாளும் இடையில் உள்ள நாட்களில் நடுப்பகலில் 2 முஹூர்த்தங்களும் (4 நாழிகை = 96 நிமிடங்கள்) இருக்கவேண்டும்”. ப்ருஹஸ்பதி ஒவ்வொரு ராஶியில் ப்ரவேஶிக்கும்பொழுதும் அவருக்கும் ஒவ்வொரு நதிக்கும் ஸம்பந்தம் ஏற்படுவதாக ஐதிஹ்யம். ஆகவே அந்த நதியில் புஷ்கரர் 3½ கோடி தீர்த்தங்களோடு அங்கு வருவதால் (தீபாவளியன்று அனைத்து ஜலத்திலும் கங்கையின் ஸாந்நித்யம் ஏற்படுவதுபோல) அதில் ஸ்நானம் செய்வது மிகவும் சிறப்பாகவும் அநேக பாபங்களைப் போக்கக் கூடியதாகவும் சொல்லப்படுகிறது.

எந்த ராஶியில் ப்ருஹஸ்பதி ப்ரவேஶிக்கையில் எந்த நதியில் விஶேஷம் என்பது கீழ்கண்டவாறு சொல்லப்படுகிறது - மேஷம் கங்கை, வ்ருஷபம் நர்மதை, மிதுனம் ஸரஸ்வதி (இந்த நதியை மீண்டும் பூமியிலிருந்து மீட்க நமது தற்சமய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகக் கேள்வி), கடகம் யமுனை, ஸிம்ஹம் கோதாவரீ, கந்யா க்ருஷ்ணை, துலா- காவிரி, வ்ருஶ்சிகம் தாம்ரபர்ணி (பீமா என்பர் சிலர்), தனுஸ் ஸிந்து (தபதி என்று சிலர் ப்ரஹ்மபுத்ரர் என்று வேறு சிலர்), மகரம் துங்கபத்ரை, கும்பம் பீமா (ஸிந்து என்பர் சிலர்), மீனம் ப்ராணஹிதா (இது கோதாவரியின் மிகப் பெரிய துணை நதி https://en.wikipedia.org/wiki/Pranhita_River).

காவிரி புஷ்கரம் செப்டம்பர் பன்னிரண்டு முதல் பன்னிரண்டு நாட்கள். அடுத்த வருஷம் செப்டம்பர் முப்பது முதல் பன்னிரண்டு நாட்கள். தமிழ் பதிவில் விடுபட்டு போனதாக பையர்! மடத்துப் பஞ்சாங்கத்தில் போட்டிருக்கு.

No comments: