Pages

Monday, August 21, 2017

வேதம் -1





எஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி
இப்படி ஒத்தரோட பேருரை கண்ணுல பட்டுது. மடை திறந்த வெள்ளம்ன்னா அது ஒரு உதாரணம். என்ன ஒரு எனர்ஜி! அவர் பேசின விஷயமும் ரொம்ப நாளா எழுத நினைச்ச விஷயமே. ரைட். இனி எழுதறது அவரோட உரை எளிமைப்படுத்தி என் போக்கிலே.. (கருத்து அவரோடது.) ஏன்னா பிரமிப்புல நாம பாட்டுக்கு வாய பொளந்துண்டு உக்காந்துண்டு இருப்போம். ஒவ்வொரு வாக்கியத்திலேயும் இருக்கிற நுணுக்கங்கள் பிடி படாம போயிடும்!
இவருடைய பயோடேட்டாவை இங்கே பார்க்கலாம்: http://sarpvchaturvedibiodata.blogspot.in/
இது உடான்ஸ்ன்னு தோணும் அளவுக்கு இருக்கு!
உரை தலைப்பு: வேதம், ஸ்வரம், அர்த்தம், மந்திரம்.
--
உலகங்கள் எல்லாம் பிரளயத்தில் மீண்டும் ஒன்றாகி ஒரே வஸ்துவாக ஒடுங்கிப்போறது, (பிர +லயம் ) பல ஆயிரம் லட்சம் வருடங்கள் சென்ற பிறகு பிரளயத்தில இருந்து உலகம் திருப்பியும் தோன்றுகிறது. ஒன்றாக இருந்த அந்த வஸ்துவில இருந்து பஞ்ச பூதங்கள் என்கிற ஐந்து பெரும் பருப்பொருட்கள் தோன்றும், இவை அனைத்தும் அவற்றுடைய பண்புகளாக இருக்கின்ற தன் மாத்திரை என்று சாஸ்திரங்களில சொல்லுகிற உணர்வுகளும் எப்படி உண்டாச்சு? இவை பரந்து விரிந்து பல வேறு உலகங்களாக ஆகி இருக்கின்றன இல்லையா? இதிலதான் நாம வாழ்ந்து கொண்டு இருக்கோம். ஆனால் இவற்றின் தோற்றுவாய் என்ன? இவை வளர்ந்த விதம் என்ன? இவற்றின் இயக்கம் எப்படி நடக்கிறது? நுணுக்கங்கள் என்ன? ஊழிக்காலத்தில் எப்படி ஒடுங்குகின்றன? எப்படி மீண்டும் தோன்றுகின்றன
 
இவை எல்லாம் விடை காணாத கேள்விகள்
 
இது போன்ற மனிதனும் அவன் சார்ந்து இருக்கின்ற எல்லா பொருட்களும் எங்கிருந்து தோன்றினவோ அந்த மூல அறிவை, மனிதன் தன் இயல்பான அறிவால தெரிந்துகொள்ள முடியாது. புலன்களாலே ஏற்படும் உணர்வினாலேயும் தெரிந்து கொள்ள முடியாது. நேரிடையா தெரிகிற சான்றுகளுக்கு அப்பாற்பட்டது. இப்படி மனித அறிவு, உணர்வுக்கு அப்பாற்பட்டு இருக்கும் அதை தெரிஞ்சுக்க ஒரே வழி மறை என்கிற வேதம்தான். இதுதான் ஒரு டெலஸ்கோப் மாதிரியும் அதே சமயம் ஒரு மைக்ராஸ்கோப் மாதிரியும் எட்டாத ஒன்றை அணுகிப்பார்க்க வழி செய்யறது.

No comments: