Pages

Tuesday, June 6, 2017

அந்தணர் ஆசாரம் - 15 - தர்ப்பங்கள்:




தர்ப்பங்கள்:
விஶ்வாமித்ரம், குசம், நாணல், அருகம்புல், நெல்பயிர், பல்பஜம் (ஒட்டுப்புல்), யவை புல் ஆகிய ஏழும் தர்ப்பம் எனப்படும்.
குசம் ப்ரம்மாவுக்கும் நாணல் ருத்திரனுக்கும் அருகு ரிஷிகளுக்கும் விஶ்வாமித்ரம் விஷ்ணுவுக்கும் பிரியமானவை.
ப்ராம்ஹணர்களுக்கு ஶ்ருதி ஶ்ம்ருதி விஹிதமான கர்மாக்களுக்கு மித்திரனாக இருப்பதாலும் பாபங்களுக்கு சத்ருவாக இருப்பதாலும் விஶ்வாமித்ரம் என்ற பெயர் ஏற்பட்டது.
குசத்தின் மூலத்தில் (அடிப்பாகத்தில்) ப்ரம்மாவும் நடுவில் கேசவனும் அக்ரத்தில் (நுனியில்) ங்கரனும் மற்ற பாகங்களில் இதர தேவதைகளும் இருக்கிறார்கள். ஆகையால் கர்மாக்களில் குசத்தை பயன்படுத்துவது சிறந்தது என்கிறார் கோபிலர். குசத்தை கையில் பவித்ரம் முதலியதாக தரித்து செய்யும் ஜபம், தானம், போஜனம் செய்வித்தல் ஆகிய அளவு கடந்த புண்ணியத்தை கொடுக்கும்.
குச ஆசனம் மிகவும் பவித்ரமானது. சன்னியாசிகளுக்கு சிறந்தது. இதில் மர்ந்து ஜபம் செய்ய யோக ஸித்தி ஏற்படும்.
குசம் கிடைக்காத போது நாணலால் தர்ப்பணம் முதலான வைதிக கர்மாக்களை செய்யலாம். அவை குசங்களுக்கு சமமானவை. குசம், தங்கம், வெள்ளி இவற்றால் செய்யப்பட்ட பவித்ரத்தை வலது கையில் தரிக்கலாம். இவை புனிதமானவை.
குசம் நாணல் ஆகியன கிடைக்காத போது மற்ற தர்ப்பங்களை பயன்படுத்தலாம்.
எந்த நாளும் அன்றைக்கு க்ரஹித்த தர்ப்பத்தை பயன்படுத்தலாம். அமாவாசை அன்று க்ரஹித்த தர்ப்பத்தை அந்த மாதம் முழுதும் பயன்படுத்தலாம். மாக/ ஶ்ராவண அமாவாசை அன்று க்ரஹித்த தர்ப்பத்தை வருடம் முழுதும் பயன்படுத்தலாம்.
தர்ப்பங்கள், புஷ்பங்கள். ஸமித்துகள் ஆகியவற்றை ப்ராஹ்மணன் தானே க்ரஹித்து பயன்படுத்த வேண்டும். மற்றவர் க்ரஹித்தது சிலாக்கியமில்லை.

No comments: