Pages

Wednesday, May 31, 2017

கிறுக்கல்கள் - 215






எனக்கு ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கற விஷயம் என்னன்னா என் வாழ்கை ரொம்பவே சாதாரணமா இருக்கு. உலகம் எழுந்து உக்காந்து பார்க்கக்கூடிய ஒரு முக்கியமான விஷயத்தையும் நான் செய்யலை.”
உலகம் பார்க்கிறதுதான் ஒரு செயலோட முக்கியத்துவத்தை நிர்ணயிக்கிறதுன்னு நினைக்கிறது தப்பு!”
சில நிமிடங்கள் கனத்த மௌனத்தில் கழிந்தன.
ம்ம்ம் நான் யாரையும் நல்ல வழியிலோ கெட்ட வழியிலோ செலுத்தக்கூடியபடி தூண்டும் எதையும் செய்யலை.”
"மத்தவங்களை தூண்டுவதுதான் ஒரு செயலோட முக்கியத்துவத்தை நிர்ணயிக்கிறதுன்னு நினைக்கிறது தப்பு!”
பின்னே எதுதான் ஒரு செயலோட முக்கியத்துவத்தை நிர்ணயம் செய்யுது?”
அதை செய்யணும் என்கிறதுக்காகவே முழு ஈடுபாட்டோட செய்யறது! அப்ப அது லாபமில்லாம, கடவுள் செய்யற வேலை போல ஆயிடும்!"

No comments: