Pages

Tuesday, April 4, 2017

கிறுக்கல்கள் - 191





'போட்டி என்பது கொடியது; தீமையானது' என்றார் மாஸ்டர்.

"ஏன்? போட்டி நம்மில் இருந்து அதிக பட்ச திறமையை வெளிக்கொண்டு வருவதில்லையா?"
"அது வெளிக்கொண்டு வருவதெல்லாம் நமது மோசமான பக்கத்தைத்தான்! ஏனென்றால் அது வெறுப்பை வெளிக்கொண்டு வருகிறது!"
"யாரிடம் வெறுப்பை?"
"முதலில் உன்னிடமே! உனது செயலை உன் போட்டியாளர் நிர்ணயிக்கிறார் இல்லையா? உன் தேவையோ உன் ஆற்றலோ உன் முனைப்போ இல்லை. இரண்டாவது மற்றவர்களிடம். ஏனென்றால் அவர்களை விஞ்ச நீ நினைக்கிறாய். அதற்கு இடமில்லையானால் வெறுப்பு ஏற்படுகிறது."
"ஆனால் நீங்கள் சொல்வது மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் சாவு மணி அடித்துவிடும்!"

"வளர்ச்சி இருக்க வேண்டியது அன்பால் மட்டுமே. தேவையான மாற்றம் நம் இதயத்தில் மட்டுமே! "

No comments: