Pages

Saturday, October 29, 2016

கிறுக்கல்கள் -176





சீடர் விடேன் தொடேன் என்று அதே கேள்வியை கேட்டுக்கொண்டு இருந்தார்.
சாவுக்கு அப்புறம் வாழ்வு இருக்கா?
மாஸ்டர் சொன்னார்: “நீ இந்த கேள்வியிலேயே நிக்கறது ஆச்சரியமா இருக்கு!”
ஆச்சரியம் என்ன இதில?”
ஜன்னலுக்கு வெளியே கையை காட்டி சொன்னார்: “இதோ பாரேன்! உன் எதிரே அருமையான வசந்த கால நாள் இருக்கு. இதமான வெயில்; பறவைகளின் பாட்டு;

மலரும் பூக்கள். இயற்கையை ரசிக்கறதை விட்டுட்டு நாளைக்கு என்ன கிடைக்குமோன்னு இருக்கியே! இப்ப கிடைக்கற சுவையான சாப்பாட்டை சாப்பிட மாட்டேன்னு சொல்ற குழந்தை மாதிரி இருக்கே! முதல்ல உனக்கு தினமும் கிடைக்கற உணவை சாப்பிடு!”

Friday, October 28, 2016

கிறுக்கல்கள் -175





 சாவுக்கு பிறகு வாழ்கை இருக்கிறதா என்பதே ஒரு பெண்ணுக்கு தீராத கேள்வியாக இருந்தது.
மாஸ்டர், சிலர் சாவுக்கு பிறகு வாழ்க்கையே இல்லைன்னு சொல்றாங்க!”
ஓஹோ அப்படியா!” என்றார் மாஸ்டர்.
அப்ப செத்துப்போறது எவ்வளவு கொடுமை! ஒண்ணும் பேச முடியாம, பார்க்க முடியாம, கேட்க முடியாம, யார் மீதும் அன்பு செலுத்த முடியாம….”

ஏன்? இப்பவே பலரும் அப்படித்தானே இருக்காங்க?” என்றார் மாஸ்டர்.
----

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

Thursday, October 27, 2016

கிறுக்கல்கள் -174





போஸ்ட் ஆஃபீஸுக்கு ஒரு பார்சல் பைபிள் புத்தகங்கள் வந்து சேர்ந்தது. அதை சரியாக கட்டி இருக்கவில்லை; அதனால் அது கிழிந்து விட்டது. அழகான பொன்னிற ஓரங்கள் கொண்ட தோல் அட்டையுடன் கூடிய புத்தகங்கள் ஆஃபீஸ் முழுதும் சிதறின. போஸ்ட்மேன் ஒருவருக்கு சபலம் தாங்கவில்லை. தான் அதில் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டார்.
இது பற்றி பின்னால் ஒரு விசாரணை நடந்தது. போஸ்ட் மாஸ்டர் கேட்டார் : ஏன்பா பைபிளைப்போய் திருடின?

பதில் வந்தது: ஏன்னா என் மத நம்பிக்கை!

Wednesday, October 26, 2016

கிறுக்கல்கள் -173





என் மதம் சொல்லும் நல்ல சேதியை உங்களுக்குச் சொல்ல ஆசைப்படுகிறேன்.”
ஆஹா! சொல்லுங்க!”
கடவுள் அன்பே வடிவானவர். அவரது கட்டளைகள் அனைத்தையும் கடைப்பிடித்தால் அவர் நமக்கு வெகுமதிகள் தருவார்!”

கடைப்பிடித்தால் மட்டுமா? அப்ப அது அவ்ளோ நல்ல சேதியா தோணலையே!”

Tuesday, October 25, 2016

கிறுக்கல்கள் -172





கடவுள் மனிதன் வாழ்க்கையை கற்றுக்கொள்ள வானில் பறவைகளையும் வயலில் பூக்களையும் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள் என்றார் மாஸ்டர். அதை அவரும் கடைப்பிடிக்க முயல்வார். மடாலயத்துக்கு அருகில் வசித்த ஒரு பணக்காரர் பறவைகளுக்கு நீர் வைக்கும் அழகான தொட்டி ஒன்றை மடாலய தோட்டத்துக்கு அன்பளிப்பாக கொடுத்தார். சில நாட்களுக்குப்பிறகு ஒரு கடிதம் வந்தது. இது நான் மடாலய தோட்டத்துக்கு கொடுத்த பறவைகளுக்கான நீர் தொட்டி பற்றியது. அது குருவிகள் நீர் அருந்த பயன்படக்கூடாது என்று அறிவிக்கிறேன்!

Monday, October 10, 2016

ஸரஸ்வதி பூஜை





நிறைய பேர் ஸரஸ்வதி பூஜை அன்னிக்கு படிக்கக்கூடாதுன்னு நினைக்கிறாங்க. நண்பர் மோஹனரங்கன் படிக்கறதுதான் நிஜமா சரஸ்வதிக்கு செய்யற பூஜைன்னு வருஷா வருஷம் கட்சி கட்டுவார். ஆனா யாரும் ஒத்துக்கறா மாதிரி தெரியலை! இந்த ’படிக்ககூடாது’ கதை ஸ்கூல் பசங்களுக்காக யாரோ கட்டிவிட்ட கதைன்னு சந்தேகம்!

பின்ன என்னதான் சமாசாரம்? சரஸ்வதி படம் வைக்கிறோம். இவள் வாக் - படிப்புக்கும் - அதிபதி என்கிறதால புத்தகங்களையும் வைக்கிறோம். இதில் தேவதா ஆவாஹனம் செய்கிறோம். - அஸ்மின் புஸ்தக மண்டலே சரஸ்வதிம் த்யாயாமி.... ரைட். இப்ப பூஜை செய்கிறோம். சாதாரணமா யாரும் புனர் பூஜை இன்னைக்கு செய்யறதில்லை. மத்த பூஜைகள் மாதிரி பூஜை முடிந்த உடனே யதாஸ்தானம் செய்யறதும் இல்லை. அடுத்த நாள் புனர் பூஜை செய்துவிட்டுத்தான் யதாஸ்தானம் செய்வார்கள்.

தேவதா ஆவாஹனம் ஆகி இருக்கும் வரை அதை டிஸ்டர்ப் செய்யக்கூடாது இல்லையா? அதனால இந்த புத்தகங்களை இப்ப எடுத்து படிக்கக்கூடாது. மத்த புத்தகங்களை படிக்க தடை எதுவும் இல்லை. இல்லவே இல்லை!

ஸ்கூல் பசங்களை எனக்கு எதிரா யாரும் கிளப்பி விடாதீங்கப்பா

விஜய தசமி.




ஸரஸ்வதி / ஆயுத பூஜை வாழ்த்துகள்!
நாளை விஜய தசமி.
முன் காலத்தில் அரசர்கள் ஒரு பழக்கம் வைத்து இருந்தார்கள். விஜயதசமி அன்று பக்கத்து நாட்டுக்குள் கொஞ்ச தூரமாவது ஆக்கிரமித்துவிட்டு திரும்புவார்களாம். சாதாரணமாக முடியாததை சாதிக்க முயற்சி செய்ய வேண்டும் என்ற பழக்கம் விட்டுப்போகக்கூடாது என்று கோட்பாடு!

நம்மில் பலரும் கூட ஆன்மீகம் எல்லாம் பெரிய விஷயம். நமக்கெல்லாம் சரிப்படாது என்று நினைக்கிறோம். அப்படி இல்லை. ஆன்மா இருக்கும் அனைவருக்கும் ஆன்மீகம் அவசியம்தானே! இன்றைக்கு அதை கொஞ்சமாவது புரிந்துக்கொள்ள ஒரு முயற்சியை செய்யலாம்!

ஆன்மீகம் இல்லைன்னாலும் வேறு எதையாவது முயற்சி செய்யலாம். இது வரை இது நமக்கு சரிப்படாது என்று நினைத்த ஒன்றை முயற்சி செய்யலாம்!

முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!

Saturday, October 8, 2016

கிறுக்கல்கள் -171




விருந்தினர் ஒருவர் தன் மதத்தைப்பற்றி விளக்கிக்கொண்டு இருந்தார்.
நாங்கள்தான் கடவுளின் தேர்ந்தெடுத்த பிள்ளைகள்!”
அதென்ன?”
“உலகில் உள்ள எல்லா மக்களிலும் எங்களைத்தான் கடவுள் தன் தேர்ந்தெடுத்த பிள்ளைகளாக கருதுகிறார்!” என்றார்.

ம்ம்ம்ம் அப்படி யார் கண்டு பிடிச்சு இருப்பாங்கன்னு நான் சுலபமா சொல்லிடுவேன்!”

Friday, October 7, 2016

கிறுக்கல்கள் -170




மாஸ்டரை ஞானம் குறித்து யாரோ கேட்டார்கள்.
அது ஒரு விழிப்பு என்றார்.
இப்போ நீ தூங்கிகிட்டு இருக்கே; அதனால அது தெரியலை, புரியலை!”
மேலும் புதிதாக திருமணம் செய்து கொண்ட பெண்மணி தன் கணவனின் குடிப்பழக்கத்தைப்பற்றி புகார் சொன்னதைப் பற்றி சொன்னார்.
அது சரி! அவர் குடிக்கிறார்ன்னா நீ ஏன் அவரை கல்யாணம் செஞ்சு கொண்டே?”

அவருக்கு அந்த பழக்கம் இருக்கறது தெரியாது! ஒரு நாள் ராத்திரி குடிக்காம அவர் வீட்டுக்கு வந்தப்பத்தான் தெரியும்!”

Thursday, October 6, 2016

கிறுக்கல்கள் -169





என்னை வாழ்த்துங்கள் மாஸ்டர்!
எதுக்கு?
கடேசியா எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சாச்சு; முன்னேற்றத்துக்கு நல்ல வாய்ப்புகளோட!
ஹும்! நேத்து வரை நீ தூக்கத்தில நடந்து கொண்டு இருந்தே. இன்னைக்கும் தூக்கத்தில நடக்கிறே! நாளைக்கும் தூக்கத்தில நடப்பே. உன் கடைசி நாள் வரை தூக்கத்தில நடந்து கொண்டு இருப்பே. அது என்ன முன்னேற்றம்?
நான் ஆன்மீக முன்னேற்றத்தைப்பத்தி சொல்லலை மாஸ்டர்; பொருளாதார முன்னேற்றத்தைப்பத்தி சொன்னேன்!
! ஒரு பேங்க் அக்கவுண்ட்டோட தூக்கத்தில நடக்கிற மனுஷன்! முழிச்சுகொண்டு இருந்தாத்தானே அதையும் அனுபவிக்க முடியும்