Pages

Monday, August 8, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - 1





என்னடா தலைப்பு இதுன்னு குழம்பாதீங்க. வாழ்க்கையில நடக்கற பல விஷயங்களையும் சயன்ஸ் அடிப்படையில் புரிஞ்சுக்கறதுல சில பல லாபங்கள் இருக்கு. ஆன்மீகம் ஆன்மாவை சார்ந்தது; ஆனாலும் அதன் வழில பயன்படற பல விஷயங்களை அறிவியல் ரீதியில புரிஞ்சு கொண்டா சில லாபங்கள் இருக்கு. இப்படிப்பட்ட சில விஷயங்களை இந்த தலைப்பில பார்க்கலாம்.
இப்படி எழுத உடனடி காரணமா இருக்கறது என் வீட்டில ஒத்தர் செய்த ஒரு தவறு.
பலரும் கடையில் விளக்கு வாங்கி பயன்படுத்தறோம். தப்பில்லை. தப்பு அதை ரிப்பேர் செய்யறேன்னு இறங்கறதுதான். படத்தை பாருங்க


இந்த விளக்கோட நடுவில இருந்த வளைவான தண்டை நிமித்திட்டாங்க. ஆப்டர் ஆல் இதை வடிவமைச்சவங்க யோசிச்சோ அல்லது அனுபவத்தாலேயோ ஒரு வடிவம் கொடுத்து இருக்காங்க. அதை மாத்த ரொம்பவே யோசிக்கணும். இதுக்கப்பறம் விளக்கு எண்ணை இருக்கும்போதே அடிக்கடி அணைந்து போக ஆரம்பிச்சது. நல்லாவும் எரியலை. ஏன்? பதிலை அடுத்த பதிவில பார்க்கலாம். உங்களுக்கு விடை தோணினா கமெண்ட்ல எழுதுங்க!


இது தண்டை பழையபடி நிமிர்த்தப் பாத்தது. வளைவு முன்ன மாதிரி ஸ்மூத்தா வரலை.

விளக்கில பயன்படற திரி சுத்த பஞ்சால செய்திருக்கணும். இப்ப கடையில் கிடைக்கிற பலதும் செயற்கை இழை கலந்ததுதான். நல்ல பஞ்சு திரி வளைச்சப்படி வளையும். செயற்கை இழை சேர்த்ததுக்கு கொஞ்சம் மெமரி உண்டு. வளைச்சா பழைய வடிவத்துக்கு போகப்பார்க்கும். இதனால திரி விளக்கில சரியா நிக்காது.
இப்ப எல்லா துணியும் செயற்கை இழை சேர்த்த காட்டனில செய்யறதுதான். ஆமாம், 100% காட்டன்னு சொன்னாக்கூட அது சந்தேகமே. நூற்பாலைகளில கிடைக்கிற காட்டன் வேஸ்ட் என்கிறதால திரியை செய்யறதால மோசமான திரியே கடையில கிடைக்குது. சிரத்தை இருக்கறவங்க சுத்த பஞ்சா வாங்கி அப்பப்ப நூலா திரிச்சு பயன்படுத்துங்க. இந்த தலைமுறையில இதை பார்க்கறது அரிதாப்போச்சு!

எண்ணை திரியோட இடுக்குகளால உறிஞ்சப்பட்டு (கேப்பிலரி ஆக்‌ஷன்) திரி முழுதும் பரவும். திரியோட நுனில இருக்கிற தழல் இதை ஆகாரமாகக் கொண்டு எரியும். இதனால் மேலும் கொஞ்சம் எண்ணை உறிஞ்சப்படும். இப்படி உறிஞ்சப்படுகிற எண்ணை எரிகிற தேவைக்கு அதிகமா இருந்தா அது புவி ஈர்ப்பு விசையால கீழே சொட்டும்! இதுக்காகத்தான் விளக்குகளில மையத்தில தண்டு அமைப்பாங்க அல்லது கீழே அடிப்பகுதி விளக்குத்தட்டைவிட கொஞ்சம் பெரிசா அமைப்பாங்க!




ஆதர்சமா ஒரு முறை பயன்படுத்திய திரியை அடுத்த முறைக்கு பயன்படுத்தக்கூடாது. எவ்வளவு எரிஞ்சு இருந்தாலும் அதை தூக்கி எரிய வேண்டியதுதான். எரிகிற விளக்கை அப்படி எரிந்து அணையட்டும்ன்னு விடக்கூடாது. அடெண்ட் பண்ணாத நெருப்பு இருக்ககூடாது என்கிறதுக்காக இருக்கலாம்.
ஆண்கள் இதை அணைக்கக்கூடாது. பெண்கள் சொட்டு பாலையோ ஒரு பூவையோ கொண்டு திரியை எண்ணையில் இழுத்துவிட்டு ‘குளிர’ ச்செய்யணும். இது அறிவியல் இல்லை; நடைமுறை! :-)
கேள்விகள்: 1. திரி நுனி மட்டும் ஏன் எரியுது? முழுக்க ஏன் எரியலை? எப்ப ஏன் முழுக்க எரியும்?

2. எண்ணை ஏன் பத்திக்கலை?

No comments: