Pages

Tuesday, August 30, 2016

டீக்கடை பெஞ்ச் கதைகள் - 12





மிகுந்த குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் அந்த இளைஞன்.
”என்னப்பா அப்படி குழப்பம்?” என்று கேட்டவாரே டீக்கடைகாரருக்கு ஜாடை காட்டினார் பெரியவர்.
நீண்ட மூச்சு விட்டான் இளைஞன்.
”அடுத்த வாரம் குல தெய்வத்தோட கோவிலுக்கு போகணும். அத நினைச்சு குழப்பமா இருக்கு.”
அட! இதுல என்ன குழப்பம்?’
எங்க வீட்டுப்பழக்கம் அங்கே போய் கிடா வெட்டி படைச்சுட்டு வரது.”
சரிதான். போய் வாயேன்?”
என்ன இவ்வளோ சுலபமா சொல்லிட்டீங்க? அது பாபம் இல்லையா? எங்க தாத்தா எல்லாம் அசைவம் சாப்டுகிட்டு இருந்தாலும் எங்க அப்பா சைவத்துக்கு மாறிட்டாரு. எங்க வீட்டில அசைவம் சமைக்கறதும் இல்லே; சாப்பிடறதும் இல்லே! கிடா வெட்டறது பாபம் இல்லையா?”
கடைக்காரர் கொடுத்த டீயை சற்று நிதானமாகவே உறிஞ்சினார் பெரியவர்.
இல்ல!”
என்னது? இல்லையா? என்னங்க பெரியவர் நீங்க போய் இப்படி சொன்னா…...”
என்ன தப்புன்னு நீ சொல்லேன்!”
உசிரு போயிரும்!”
ஆமா!”
என்ன ஆமா? அது தப்பில்லையா?”
ஆமா, உங்க வீட்டில நாய் வளக்கறயோ?”
ஆமா”
அதுக்கு சாப்ட என்ன போடறே?”
சோறு மட்டும்தான்”
அது மாமிசம் சாப்டாதா?”
போடறதில்லே! போட்டாக்கூட சாப்டாது!”
பூனை வளக்கறயோ?”
இல்ல. ஆனா ரெண்டு பூனைங்க அது பாட்டுக்கு வரும் போகும். ஏதாவது எப்பவாவது யாரான்னா போட்டா தின்னுட்டுப்போகும்”
அது அசைவம் சாப்பிடுமோ?’
சாப்பிடுமே! வீட்டில இருக்கற எலி எல்லாத்தையும் அதுக பிடிச்சிட்டு போய் சாப்டும். அதுக்குத்தானே வீட்டுக்குள்ள அனுமதிக்கறோம்.”
சரி. சிலர் - ரொம்பவே அரிதா - புலி சிங்கம் வளப்பாங்க. அவங்க மிருகங்கள் மேல ரொம்பவே அன்பு செலுத்தறவங்க. எதேனும் ஜூ ல வேலை பாத்துகிட்டு இருக்கலாம்.”
ஆமா. அந்த மாதிரி சிலர் பத்தி பத்திரிகைல படிச்சு இருக்கேன்.”
அவங்க அந்த புலிக்கோ சிங்கத்துக்கோ என்ன போடுவாங்க? தயிர் சாதமா?”
உரக்கச்சிரித்தான் இளைஞன். “தயிர் சாதமா? ஹாஹ்ஹாஹ்ஹா! நிச்சயமா இல்லே. மாமிசம்தான் போடுவாங்க.”
ஏன்?”
அதுங்களுக்கு அதுதான் பழக்கம்.”
அதே மாதிரிதான் உங்க குல தெய்வத்துக்கும் பழக்கம்!”
திகைத்துப்போய் அமர்ந்திருந்தான் இளைஞன்!
நம்ம கற்பனை ப்ரம்ம லெவலுக்கு போகலை. நம்ம கால் இந்த பூமிலத்தானே இருக்கு? அப்ப இந்த பூமியோட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்கணும். இந்த குல தெய்வங்கள் காவல் தெய்வங்கள் எல்லாம் எங்கும் நிறைந்த, முக்காலத்திலும் இருக்கும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் இல்லை. தேவதைகள். இவங்க நம்ம மாதிரி இன்னொரு படைப்பு. இவங்களுக்கு கோப தாபங்கள் உண்டு. அதனால கருணை வாய்ந்த தெய்வம் ஏன் இப்படி கேக்குதுன்னு கேள்வி கேக்க முடியாது! இவங்களுக்கு நம்மை விட அதிக சக்தி உண்டு. ஒவ்வொரு தேவதையையும்வழி பட ஒவ்வொரு ரூல்! தேவதைகளை நம்பி அவற்றுக்கான சட்ட திட்டங்களை கடை பிடிச்சுத்தான் வழிபாடு செய்யணும். குல வழிபாடுகளை அவ்வளோ சுலபமா விட்டுடக்கூடாது. இன்னைக்கு நிறைய பேருக்கு வர பிரச்சினைகள் எல்லாம் முன்னோர்களுக்கு சரியா திதி கொடுக்காததாலேயும் குல தெய்வ வழிபாடு செய்யாததாலேயும்தான் வருது. நீயும் அதுல மாட்டிக்காதே”

சற்று நேரத்தில் இளைஞனின் திகைப்பு நீங்கி அவன் சுற்றும் முற்றும் பார்க்கும் போது பெரியவர் எப்போதோ கிளம்பி விட்டு இருந்தார்.

Monday, August 29, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - பச்சை கற்பூரம்




அப்படியே இந்த பச்ச கற்பூரத்தையும் பாத்துடலாம். பச்ச கற்பூரம் என்கிறதால பச்சையா இருக்காதுன்னு ஜோக் அடிச்சா திட்டுவீங்க. அதனால….
கற்பூரத்துக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்?
அபாரண்ட்லி ஒண்ணுமே இல்ல!
ஆனா நிச்சயமா வாசனைல வித்தியாசம் இருக்கு.
நெட்ல தேடிப்பாத்தா குழப்பமே மிச்சம். இருந்தாலும் கிடைக்கிற தகவல் ரெண்டுமே ஒண்ணுன்னு சொல்லுது.
edible camphor ந்னு தேடிப்பாத்தா அமேசான்லயும் கிடைக்குது.
Cinnamomum camphora என்கிற சுகந்த மரத்துலேந்து இது கிடைக்கிறதா இங்கே http://senthuherbals.blogspot.in/2014/08/cinnamomum-camphora-chukantamaram.html சொல்றாங்க.
https://en.wikipedia.org/wiki/Camphor பாத்தா இதே மாதிரிதான் இருக்கு. எதுலேந்து தயாரிக்கறாங்க என்கிறதைப்பொருத்து வாசனை இருக்கும்போல இருக்கு.
இயற்கையா கிடைக்கிறது ஆர் இனாடியமராம். ரசாயன் தொழிற்சாலையில செய்யறது எல் இனாடியமர். இனாடியமர்? ஆப்டிகல் ஐஸோமர்.
மூலக்கூறுல வித்தியாசங்கள் வரலாம். ஒரே கெமிக்கலா இருந்தாலும் பௌதிக அளவில அதோட அமைப்பு வித்தியாசமா இருக்கும். சில சமயம் கண்ணாடி பிம்பம் போல இருக்கும். ஆர்வமிருந்தா அது பத்தி தேடி படிங்க!
ஊசியிலை மரங்களில் இதுக்கான மூலப்பொருள் நிறையவே கிடைக்குதாம்.
கற்பூரம் பத்தி சொல்லறப்ப சப்லிமேஷன்னு சொன்னேன் இல்லையா? இதுல அதை நல்லாவே பார்க்கலாம். கொஞ்சமே கொஞ்சம் திறந்து வெச்சாக்கூட காத்தில காணாமப்போகும். உணவுப்பொருட்களுக்கு நறுமணம் கூட்ட காலங்காலமா நம் நாட்டில பயன்படுத்தறாங்களாம். குறிப்பா அரபு நாட்டு ரெசிப்பில எல்லாம் இது நிச்சயம் இருக்குமாம். திருப்பதி லட்டுல கூட சுவைச்சு இருக்கோமில்ல?
பிஜி முடிச்சுட்டு வந்தவுடன் ஒரு வருஷம் தனியார் மருத்துவ மனை ஒண்ணுல வேலை பார்த்தேன். அப்ப அங்கே இருந்த சின்ன கோவில்ல தினசரி பூஜை பண்ண ஒரு குருக்கள் வருவார். கூடவே ஜோசியம் பாக்கிறது. ஹோமங்கள் செஞ்சு கொடுக்கிறது….
இவரோட வயித்து வலியை சரி செஞ்சதால எனக்கு ஃப்ரெண்ட் ஆயிட்டார். பேச்சுவாக்கில எம்ஜிஆருக்காக ஹோமம் செஞ்சதை சொன்னார். தேவதா ஆவாஹணம் செஞ்சு இருந்த ஜலத்தை பிரசாதமா எம்ஜிஆருக்கு கொடுக்க அப்போலோ டாக்டர்கள் ஒத்துக்கலையாம்.
எம்ஜிஆருக்கு கிட்னி மாத்தி இருந்தது இல்லையா? அப்ப இம்யூன் சப்ரசண்ட் மருந்து கொடுத்து இருந்தாங்க. அதனால இன்பெக்‌ஷன் வந்துடும்ன்னு தயக்கம். இவரோ இதுல ஒரு சாம்பிள் எடுத்துண்டு போய் என்ன வேண்ணா டெஸ்ட் செய்யுங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லைன்னு உறுதி செஞ்சுண்டு கொடுங்கன்னு கான்ஃபிடெண்டா சொன்னாராம். அவங்களும் டெஸ்ட் பண்ணி பாத்துட்டு பிரச்சினை இல்லைன்னு கொடுத்ததா சொன்னார்.
அது பிரச்சினை இல்லைன்னு எப்படி அவ்வளோ உறுதியா சொன்னீங்கன்னு கேட்டேன். அவர் “ அதுல பாக்டீரியா எப்படி இருக்கும்? நாதான் பச்ச கற்பூரம் போட்டுட்டேனே?” ந்னார்.
ஆமாம். ஹோமங்களில தேவதா ஆவாஹனம் செய்கிற குடத்தில தண்ணீரோட இதை கலக்கிறது வழக்கம்தான். ஒஹோ அதுவும் அப்படியா ந்னு நினைச்சுண்டேன். அதுலேந்து பயணம் செய்யறப்ப ஒரு சின்ன டப்பால பச்ச கற்பூரம் எடுத்துண்டு போய் கிடைக்கிற தண்ணில கலந்து பயன்படுத்த ஆரம்பிச்சேன்.
தினசரி செய்யற பூஜையில பயன்படுத்தற தண்ணீர்ல இதை கொஞ்சமே கொஞ்சம் கலப்போம். கம கமன்னு இருக்கும். பெருமாள் கோவில்ல கொடுக்கிற தீர்த்தத்திலும் இது இருக்குமில்ல?
அதே போல சந்தனம் அரைக்கவும் இதை கொஞ்சம் - சில கிரிஸ்டல்ஸ்- பயன்படுத்துவோம். அது தண்ணில இங்கேயும் அங்கேயும் அலையறதை வேடிக்கைக்கூட பார்க்கலாம். சந்தனம் அரைக்கும்போது இதை பயன்படுத்த சந்தனம் சட்டுன்னு நிறைய கிடைக்கும். குங்குமப்பூ சேர்க்க அது உடனே நீரை உறிஞ்சுண்டு திரளும். இது ரெண்டுத்தையும் போட்டு அரைக்கற சந்தனம் நல்ல வாசனையோடவே இருக்கும்.

 

Thursday, August 25, 2016

பயத்தங்கா - reducing poonool length.





நேயர் விருப்பத்துக்கு இணங்க பயத்தங்கா முடிச்சு போடறத ஒரு நகர்படமா எடுத்து போட்டிருக்கேன். இன்னும் இறுக்கமாவே முறுக்கலாம். இது டெமோ என்கிறதால அவ்வளவா முறுக்கலை.
நான் முண முணகறது காதில விழலைன்னா...
பயத்தங்கா முடிச்சு போடறதை பார்க்கலாம். நாபி வரை அளந்துக்கொண்டு,
அந்த புள்ளி வரை முறுக்கணும். பிறகு அதையே மீதி பூணூல் மேல முறுக்கணும். கடைசில முடிச்சு போடணும்.
இது சத்தியமா புரியாது. ஆனா நகர்படத்தை இப்ப பாத்தா புரிஞ்சுடும்!

கிறுக்கல்கள் - 158




நடை பயிற்சியில் இருந்த ஒரு ரொம்ப வயசான அக்கம்பக்கத்து வீட்டுக்காரரை மாஸ்டர் சந்தித்தார்,
குட் மார்ணிங்! எப்படி இருக்கீங்க?”

பலஹீனமான குரலில் பதில் வந்தது. “ஹும்! அவ்ளோ சுகமில்ல. முன்னே எல்லாம் இந்த குடி இருப்பை முழுக்கவே சுத்தி வந்துடுவேன். இப்பலாம் முடிலை. பாதி சுத்திட்டு, முடியாம போன வழியே திரும்பி வரதா இருக்கு!”

Wednesday, August 24, 2016

கிறுக்கல்கள் - 157





ஒரு சீடன் புகார் செய்தான்: “காலாகாலமாக போற்றி வெச்சு இருக்கிற என் நம்பிக்கைகள் எல்லாத்தையும் உடைக்கறீங்க!”

மாஸ்டர் சொன்னார்: ஆமா. உன் கோவில்களை தீயிட்டு கொளுத்துகிறேன். அப்போதான் உன்னால தடையில்லாம எல்லையில்லாத பெருவெளியான நிர்மலமான ஆகாசத்தை பார்க்க முடியும்!” 

Tuesday, August 23, 2016

கிறுக்கல்கள் - 156





இன்னும் ஆச்சரியமானது மாஸ்டர் நூலகத்தில் வைத்து இருந்த எச்சரிக்கை பலகைகள். மண்டை ஓடும் எலும்புகளும் வரைந்து இருந்த அவற்றில் அதில் எழுதி இருந்தது “புத்தகங்கள் கொல்கின்றன!”
யாரோ கேட்டார்கள் “ஏன்?”
ஏன்னா, புத்தகங்களை படிச்சா எண்ணங்கள் வரும்; அதனால மனசு இறுகி உண்மையை சரியா பார்க்க முடியாதபடிக்கு திரிச்சுக்காட்டும்!” 

Monday, August 22, 2016

கிறுக்கல்கள் - 155





மடாலய நூலகத்தில் பல விதமான புத்தகங்களையும் மாஸ்டர் வங்கி வைத்து இருந்தார். அரசியல், கட்டுமானக்கலை, தத்துவம், கவிதை, வேளாண்மை, வரலாறு, அறிவியல், மனோதத்துவம், கலை மற்றும் அவர் அடிக்கடி பயன்படுத்திய …. புனைவு!
அவர் அடிக்கடி சொல்லுவது “யோசி யோசி யோசி… யோசிக்காதவங்ககிட்டேந்து மக்களை கடவுள்தான் காப்பாத்தணும்!
ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு அதை மட்டுமே பின்பற்றும் குறுகிய மனசுக்குத்தான் அவர் மிகவும் பயப்படுவதாக சொல்லுவார்.
இது அவருடைய சீடர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர் சிலாகிப்பதோ யோசிக்காமல் உணர்வது; கோட்பாடு இல்லாத விழிப்புணர்வு! இவையே அவரது முக்கிய உபதேசங்கள்.
இந்த முரண்பாடு பற்றி ஒரு சீடன் நேரடியாகவே கேட்டுவிட்டான்,
பூடகமான பதில் வந்தது : “முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்?” 

Friday, August 19, 2016

கிறுக்கல்கள் - 154





மாஸ்டர் எவ்ளோ சந்தோஷமா இருக்கார்!” என்றார் ஒரு விருந்தாளி.
ஆமாம். அகங்காரம் என்கிற மூட்டையை இறக்கி வெச்சுட்டா ஒத்தர் சந்தோஷமாகவே இருக்கலாம்” என்றார் ஒரு சீடர்! 

Thursday, August 18, 2016

உபாகர்மா - பயதங்கா.




இன்னைக்கு சிலர் உபாகர்மா செய்து இருப்பாங்க. இதுல ஒரு முக்கிய அங்கம் புதுசா பூணூல் போட்டுக்கறது. முன்னே எல்லாம் பல அளவில பூணூல் தயார் செய்வாங்க. அவரவர் கையில கட்டை விரல் நீங்கலா மத்த 4 விரல்களில 96 சுத்து சுத்தி அதை மூணு பிரி பூணூலாக்கினா அவங்களுக்கு சரியா இருக்கும். இப்பல்லாம் அப்படி யார் செய்கிறாங்க? கடையில் நூலை வாங்கி செய்கிறதுதான் அதிகம். அத்தோட இப்ப எல்லாமே யூனிவர்சல் சைஸ்தான். அதுவும் ஒன்னரை ஜோடி என்கிற மூணு பூணூல் தொகுப்புதான். தேவையான அளவுக்கு பிரிச்சுக்கோங்கன்னு அலட்சியமா பதில் வரும்.

கிடக்கட்டும். பலருக்கும் பிரச்சினை இது ரொம்ப நீளமா இருக்கறதுதான். நாபிக்கு சமமா இருக்கணும். அதிகமானாலோ குறைச்சலானாலோ தோஷம்ன்னு சாஸ்த்ரம். என்ன செய்ய?
நீளத்தை குறைக்க வழி பயத்தங்கா போடறது. அதாவது பூணூலை சரியான அளவை பாத்துண்டு அங்க பிஞ்ச் பண்ணிக்கோங்க. இப்ப அதை முறுக்கணும். தேவையான நீளத்துக்கு முறுக்கினதும் அதை மடக்கி முறுக்கினதை மீதி பூணூலோட சேர்த்து திருப்பியும் முறுக்கணும். கடைசியில முடிச்சு போடணும்.
படங்களை பார்த்து புரிஞ்சுக்கோங்க.
மேல் படத்தில  கீழே பார்க்கிற ஜங்ஷந்தான் அடுத்த படத்துல மேலே இருக்கு 





கிறுக்கல்கள் - 155




நவீன தொழிற்நுட்பம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மாஸ்டரை கேட்டார்கள்.
வழக்கம் போல இதுதான் பதில்:
ஞாபகமறதி பேராசிரியருக்கு திடீரென்று தான் எடுக்க வேண்டிய வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று நினைவுக்கு வந்தது. அவசரம் அவசரமாக வெளியே போய் ஒரு டாக்ஸியை பிடித்தார்.
சீக்கிரம்! சீக்கிரமாகப்போ!”
டாக்ஸி உடனே கிளம்பி வேகமாக போக ஆரம்பித்தது.
ஐந்து நிமிடங்கள் கழித்தே எங்கே போக வேண்டும் என்று சொல்லவில்லை என்பது அவருக்கு நினைவுக்கு வந்தது. பின்னே டாக்ஸி எங்கே போகிறது?
ஏன்பா, நான் எங்கே போகணும்ன்னு உனக்கு தெரியுமா?”
தெரியாதுங்க. ஆனா நீங்க சொன்னபடி நா வேகமா போய்கிட்டு இருக்கேன்!” 

Wednesday, August 17, 2016

க்ருஷ்ண யஜுர் வேத உபாகர்மா - 2016




நாளை யஜுர் வேத உபாகர்மா.
தேவைப் படுவோருக்கு திருத்திய சங்கல்பங்கள்; மஹா சங்கல்பம் ஆகியன பிடிஎஃப் ஆக இங்கே.
தர்பணாதிகளில் மாற்றம் இராது என்பதால் தரவில்லை; அவை எல்லா சந்தியாவந்தன புத்தகங்களிலும் உள்ளன.
பிற்சேர்க்கை: தேதிகள் தவறாக உள்ளன. உபாகர்மா 18 ஆகஸ்ட், ஜபம் 19 ஆகஸ்ட். தவறுக்கு வருந்துகிறேன். திருத்திய பதிப்பு இங்கே 

https://drive.google.com/file/d/0B0hsZOLFx-HfS0h6WXVNejg0eDA/view?usp=sharing

கிறுக்கல்கள் - 156





மாஸ்டருக்கு 90 வயது பூர்த்தி ஆயிற்று என்று நண்பர்களும் சீடர்களும் விழா கொண்டாடினார்கள். கடைசியில் மாஸ்டர் எழுந்து சொன்னார்:
வாழ்க்கையை எப்படி வாழ்ந்தோம் என்பதை வைத்து மதிப்பிட வேண்டும்; எவ்வளவு வருஷம் என்பதை வைத்து அல்ல!” 

Tuesday, August 16, 2016

கிறுக்கல்கள் - 157




அணுகுண்டுக்கு எதிராக பெரிய கூட்டம் நடந்தது. மாஸ்டரும் அவரது சீடர்களும் அதில் பங்கு கொண்டனர்.
ப்ரசங்கி “அணுகுண்டுகள் மனிதர்களை கொல்லுகின்றன!” என்று முழங்கினார். பலரும் இதற்கு கை தட்டினார்கள். மாஸ்டர் தலை ஆட்டி “இல்லை. அது உண்மை இல்லை. மனிதர்கள் மனிதர்களை கொல்லுகிறார்கள்!” என்றார்.

பக்கத்தில் இருந்தவர் இவரை முறைத்துப்பார்த்தார். உடனே மாஸ்டர் “சரி சரி! அதை திருத்திக்கொள்கிறேன். எண்ணங்கள் மனிதர்களை கொல்லுகின்றன!” என்றார்.

Monday, August 15, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - கற்பூரம்





ரைட், இப்பபதிவிலே விளக்குத்தண்டை வடிவம் மாத்தினது பத்தி பாத்துடலாம்.
எண்ணை கேப்பிலரி ஆக்‌ஷனால உரியப்பட்டு எரியுதுன்னு பாத்தோம். இந்த கேப்பிலரி ஆக்‌ஷனுக்கு ஒரு லிமிட் இருக்கு. அதாவது கொஞ்சம் உயரம்தான் இதால எண்ணையை தூக்கிவிட முடியும். அதுக்கு மேலே முடியாது. எவ்வளோ உயரம் என்கிறது அந்த எண்ணை, திரி இழைகள் நடுவில இருக்கிற இடைவெளி எவ்வளவு குறுகலானது போன்றவற்றால நிர்ணயிக்கப்படும். இதை கணக்கு போடத்தெரியாத காலத்திலேயே அனுபவத்தால் இவ்வளவு உயரம்தான் எண்ணை இழுக்கப்படும்ன்னு தெரிஞ்சு விளக்கை வடிவமைச்சு இருக்காங்க. அதனாலத்தான் விளக்கு பெரிசா ஆனா அது இன்னும் அகலமாகுமே தவிர ரொம்ப ஆழமாகாது. எங்க வீட்டில் இதை மறு வடிவமைச்சப்ப விளக்குத்தண்டு இந்த உயரத்தை ஏறத்தாழ தொட்டுடுத்து. அதனால எண்ணைக்கு பதிலா திரியே அதிகமா எரியும்; அதனால சீக்கிரம் அணைஞ்சும் போகும்.

அடுத்து எரியற இன்னொரு சமாசாரமான கற்பூரத்தை பாத்துடலாம். முன்னே இதை கற்பூரமரத்தில இருந்து - அதன் மரம், பட்டை - டிஸ்டில் பண்ணி எடுத்தாங்க. இப்ப டர்பெண்டைன் எண்ணையிலேந்து தயார் செய்யறாங்க. முன்னே கடையிலேந்து வாங்கி வந்த உடனே பயன்படுத்தினா ஆச்சு. இல்லைன்னா காத்திலேயே கரஞ்சுடும். இத ஆங்கிலத்தில சப்ளிமேஷன்னு சொல்வாங்க. அதாவது அது அறை சூட்டிலேயே நிறைய ஆவியாகுது. வேப்பர் ப்ரஷர் அதிகமா இருக்கும். இந்த சுட்டில ‘கூல்’ எக்ஸ்பெரிமெண்ட் ஒண்ணை பாருங்க. அப்படியே அது எந்த மொழின்னு கண்டுபிடிங்க! (மொழி தெரியாட்டாலும் பார்க்கலாம்.) https://www.youtube.com/watch?v=8qCdxh5a58Q

காலங்காலமா இதை மருத்துவ குணத்துக்காக பயன்படுத்தி இருக்காங்க. விக்ஸ் வேபரப்ல இருக்கறது இதான். வித விதமா விளம்பரம் செஞ்சாலும் பெரும்பாலான ‘ரப்’ மருந்துகள்ல இது இருக்கும்! இந்த சூடம் மிட்டாய் சிலதுல கூட இது இருந்தாலும் இருக்கும். யூஎஸ்ஏ ல 
கற்பூர எண்ணை மருந்தோட விற்பனையை தடுத்து இருக்காங்க. இருந்தாலும்…..

சில சமயம் கற்பூரம் ஏத்தின உடனேயே அணைஞ்சுடும். அப்ப அந்த சூட்டில அதோட ஆவி மேலெழறதை பார்க்கலாம். இதை திருப்பி கொளுத்தறது சுலபமே. இந்த ஆவி ஏதாவது ஒரு தழல்ல பட்டா போதும். குப் ந்னு பிடிச்சுக்கும். இதை வெச்சு சின்ன வயசுல சில பல சோதனை எல்லாம் பண்ணி இருக்கேன். இந்த ஆவியை ஒரு கண்ணாடி குழாய் மூலமா ஒரு அடி தூரம் கடத்தி அங்கே ஒரு வத்திக்குச்சியை கொளுத்திக்காட்டி… அப்ப கூட பிடிச்சுக்கும்!

இப்ப வர ‘கற்பூரம்’ நிறையவே அசுத்தமா இருக்கு. கற்பூரம் எரிஞ்சு முடிஞ்சப்பறம் கற்பூரத்தட்டை பாத்தா தெரியும். ஆனாலும் இதை பாத்து பாத்து அது வர பாலிதீன் பையிலேயே பொத்தி பொத்தி வைக்க வேண்டி இருக்கு. இதனாலேயே இப்பல்லாம் கோவில்களில கற்பூரம் ஏத்தாம நெய்தீபத்தையே பயன்படுத்தறாங்க.
எங்கூருக்கு பக்கத்தில பண்ணுருட்டில ஒத்தர் இதை செஞ்சு விற்க ஆரம்பிச்சார். எரிஞ்சு முடிச்சா தட்டு அவ்ளோ பளீச்ன்னு இருக்கும். ஆனா அது கொஞ்சம் ஆபத்தானதாவே இருந்தது, பட்டுன்னு பிடிச்சுக்கும். இப்ப கொஞ்சம் கலப்படம் செஞ்சு சமப்படுத்தி இருக்காங்க!
இதெல்லாம் சொன்னது பூஜை சமயத்துல கவனமா இருங்கன்னு சொல்லத்தான்!

Thursday, August 11, 2016

கிறுக்கல்கள் - 153





சின்ன தப்பை எல்லாம் பூதக்கண்ணாடி வெச்சு பார்த்துக்கொண்டு பெரிய தப்பை எல்லாம் கண்டுக்காம விடறவங்களை பத்தி மாஸ்டர் சொன்னார்:
உலகப்போர் நடந்தப்ப ஒரு தரம் ஏர் ரெய்ட் நடந்தது. எல்லாரையும் மடாலயத்து நிலவறைக்கு அழைச்சுக்கொண்டு போயிட்டேன். ஆனா குண்டு வீச்சோ நிக்கற வழியாக்காணோம். சாயங்காலம் ஆயிடுத்து. அதுக்கு மேலே யாருக்கும் அங்கே இருக்க பொறுமை இல்லை. குண்டு வீச்சோ இல்லையோ நாங்க வெளியே போறோம்ன்னு சொன்னாங்க. சரிப்பா; போறவங்க போங்கன்னு சொன்னேன். போன சுருக்கிலேயே எல்லாரும் திரும்பி வந்துட்டாங்க.

”ஓ, உங்க தப்பை உணர்ந்துட்டீங்களா?”
”ஆமா!” என்று எரிச்சலுடன் பதில் வந்தது; ”வெளியே மழை பெய்யுது!”

Wednesday, August 10, 2016

கிறுக்கல்கள் - 152





இரண்டு சீடர்கள் ஆற்றின் கரையோரம் உட்கார்ந்து இருந்தார்கள். ஒருவர் கேட்டார் “ இப்ப இந்த ஆத்தில விழுந்துட்டா முழுகிடுவேனா?”

மாஸ்டர் சொன்னார் ” இல்லை! விழறதுனால நீ முழுக மாட்டே. வெளியே வராம அதுக்குள்ளேயே இருக்கறதால்தான் முழுகுவே!”

Tuesday, August 9, 2016

கிறுக்கல்கள் - 151




ஜெயிலில் நடந்த இந்த உரையாடல் வெளியே கசிந்துவிட்டது. ‘அட! நிச்சயம் பெயரில் ஒலியைத்தவிர ஏதோ இருக்குதானே?’ என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். இதைக்கேட்ட மாஸ்டர் வழக்கம்போல் கதை சொன்னார்.

ஒருவர் சாலையில் கூவி விற்கும் வியாபாரியாக இருந்து உழைத்து முன்னேறி கோடீஸ்வரன் ஆனார். ஆனால் கையெழுத்து போடத்தெரியாது! அதனால் தன் செக்புக்கில் இரண்டு பெருக்கல் குறி மட்டும் இடுவார்! ஒரு நாள் வங்கி மேலாளருக்கு ஆச்சரியம். கையெழுத்தை மாற்ற விண்ணப்பம் கொடுத்து இருந்தார். அதைப் பார்த்தால் இரண்டு பெருக்கல் குறிகளுக்கு பதில் மூன்று இருந்தன! ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்தார்: எல்லாம் என் பெண்டாட்டியால் வந்த வினை. இப்ப சமூகத்தில் உயர்ந்தாச்சாம். அதனால் நடு பெயர் ஒண்ணு இருக்கணுமாம்

Monday, August 8, 2016

சயன்ஸ் 4 ஆன்மீகம் - 1





என்னடா தலைப்பு இதுன்னு குழம்பாதீங்க. வாழ்க்கையில நடக்கற பல விஷயங்களையும் சயன்ஸ் அடிப்படையில் புரிஞ்சுக்கறதுல சில பல லாபங்கள் இருக்கு. ஆன்மீகம் ஆன்மாவை சார்ந்தது; ஆனாலும் அதன் வழில பயன்படற பல விஷயங்களை அறிவியல் ரீதியில புரிஞ்சு கொண்டா சில லாபங்கள் இருக்கு. இப்படிப்பட்ட சில விஷயங்களை இந்த தலைப்பில பார்க்கலாம்.
இப்படி எழுத உடனடி காரணமா இருக்கறது என் வீட்டில ஒத்தர் செய்த ஒரு தவறு.
பலரும் கடையில் விளக்கு வாங்கி பயன்படுத்தறோம். தப்பில்லை. தப்பு அதை ரிப்பேர் செய்யறேன்னு இறங்கறதுதான். படத்தை பாருங்க


இந்த விளக்கோட நடுவில இருந்த வளைவான தண்டை நிமித்திட்டாங்க. ஆப்டர் ஆல் இதை வடிவமைச்சவங்க யோசிச்சோ அல்லது அனுபவத்தாலேயோ ஒரு வடிவம் கொடுத்து இருக்காங்க. அதை மாத்த ரொம்பவே யோசிக்கணும். இதுக்கப்பறம் விளக்கு எண்ணை இருக்கும்போதே அடிக்கடி அணைந்து போக ஆரம்பிச்சது. நல்லாவும் எரியலை. ஏன்? பதிலை அடுத்த பதிவில பார்க்கலாம். உங்களுக்கு விடை தோணினா கமெண்ட்ல எழுதுங்க!


இது தண்டை பழையபடி நிமிர்த்தப் பாத்தது. வளைவு முன்ன மாதிரி ஸ்மூத்தா வரலை.

விளக்கில பயன்படற திரி சுத்த பஞ்சால செய்திருக்கணும். இப்ப கடையில் கிடைக்கிற பலதும் செயற்கை இழை கலந்ததுதான். நல்ல பஞ்சு திரி வளைச்சப்படி வளையும். செயற்கை இழை சேர்த்ததுக்கு கொஞ்சம் மெமரி உண்டு. வளைச்சா பழைய வடிவத்துக்கு போகப்பார்க்கும். இதனால திரி விளக்கில சரியா நிக்காது.
இப்ப எல்லா துணியும் செயற்கை இழை சேர்த்த காட்டனில செய்யறதுதான். ஆமாம், 100% காட்டன்னு சொன்னாக்கூட அது சந்தேகமே. நூற்பாலைகளில கிடைக்கிற காட்டன் வேஸ்ட் என்கிறதால திரியை செய்யறதால மோசமான திரியே கடையில கிடைக்குது. சிரத்தை இருக்கறவங்க சுத்த பஞ்சா வாங்கி அப்பப்ப நூலா திரிச்சு பயன்படுத்துங்க. இந்த தலைமுறையில இதை பார்க்கறது அரிதாப்போச்சு!

எண்ணை திரியோட இடுக்குகளால உறிஞ்சப்பட்டு (கேப்பிலரி ஆக்‌ஷன்) திரி முழுதும் பரவும். திரியோட நுனில இருக்கிற தழல் இதை ஆகாரமாகக் கொண்டு எரியும். இதனால் மேலும் கொஞ்சம் எண்ணை உறிஞ்சப்படும். இப்படி உறிஞ்சப்படுகிற எண்ணை எரிகிற தேவைக்கு அதிகமா இருந்தா அது புவி ஈர்ப்பு விசையால கீழே சொட்டும்! இதுக்காகத்தான் விளக்குகளில மையத்தில தண்டு அமைப்பாங்க அல்லது கீழே அடிப்பகுதி விளக்குத்தட்டைவிட கொஞ்சம் பெரிசா அமைப்பாங்க!




ஆதர்சமா ஒரு முறை பயன்படுத்திய திரியை அடுத்த முறைக்கு பயன்படுத்தக்கூடாது. எவ்வளவு எரிஞ்சு இருந்தாலும் அதை தூக்கி எரிய வேண்டியதுதான். எரிகிற விளக்கை அப்படி எரிந்து அணையட்டும்ன்னு விடக்கூடாது. அடெண்ட் பண்ணாத நெருப்பு இருக்ககூடாது என்கிறதுக்காக இருக்கலாம்.
ஆண்கள் இதை அணைக்கக்கூடாது. பெண்கள் சொட்டு பாலையோ ஒரு பூவையோ கொண்டு திரியை எண்ணையில் இழுத்துவிட்டு ‘குளிர’ ச்செய்யணும். இது அறிவியல் இல்லை; நடைமுறை! :-)
கேள்விகள்: 1. திரி நுனி மட்டும் ஏன் எரியுது? முழுக்க ஏன் எரியலை? எப்ப ஏன் முழுக்க எரியும்?

2. எண்ணை ஏன் பத்திக்கலை?

கிறுக்கல்கள் - 150





ஜெயிலில் இருந்த சுதந்திர போராட்ட வீரரை சந்திக்கச்சென்றார் மாஸ்டர்.
நாளை உன்னை தூக்கில் போடப்போகிறார்கள். நீ அதை தைரியத்துடன் எதிர்கொள்வாய். முழுவதும் மகிழ்ச்சியுடன் அதை எதிர் கொள்ளதற்கு ஒரே ஒரு தடைதான் இருக்கிறது!”
அது என்ன மாஸ்டர் ”
உன் வீர தீர செயல்கள் மக்களால் நினைவில் வைக்கப்படும் என்ற ஆசை!”
அதில் என்ன தவறு?”
இது உனக்கு தோன்றி இருக்கிறதா? அவர்கள் உன் பெயரைத்தான் நினைவில் கொள்வார்களே தவிர உன் செயல்களை நினைவில் கொள்ள மாட்டார்கள்!”
அது இரண்டும் ஒன்று இல்லையோ?”
இல்லவே இல்லை. உன் பெயர் என்பது நீ கேட்ட மாத்திரத்தில் உன்னை கூப்பிடுவதாக நீ நினைக்கும் ஒலி! உன் அடையாளம். ஆனால், உண்மையில் நீ யார்? ”

அடுத்த நாள் தூக்கில் போட அவர்கள் வரும் முன்னே தான் இறந்துவிட இதுவே போதுமானதாக இருந்தது!

Friday, August 5, 2016

பிரார்த்தனை - 2





ரெண்டாவதா கேட்கிறது வினாதை³ன்யேன ஜீவனம். அதாவது வறுமை இல்லாமல் வாழ்க்கை. கவனிக்கணும்; நிறைய பணம் வேணும்ன்னு கேட்கலை. வறுமை இல்லாம இருக்கணும். போகிற வழியை கேட்டாச்சு; இப்ப இருக்கிற முறையை கேட்டுக்கறோம்.
அது சரி, 'வறுமை இல்லாமல் வாழ்க்கை' என்கிறதை டிஃபைன் பண்ணுப்பான்னா…
ஒரு வேளைக்காவது வயிறு நிறைய சாப்பாடு, தண்ணி கிடைக்கறதா? ரைட்டு.
கிழியாத டீசண்டான உடை இருக்கா? ரைட்டு.
தலைக்கு மேலே ஒரு கூரை இருக்கா? ரைட்டு. அதுக்கு மேலே எல்லாம் லக்ஷுரிதான் என்கிறார் என் வழிகாட்டி!
ஏன்யா இதுக்கு மேலே கொஞ்சமே கொஞ்சம் வேணும்ன்னு நினைக்கறது தப்பான்னா..
ஆமா. அதுல பிரச்சினை இருக்கு. எது எல்லை?
நடந்து போறவன் சைக்கிள் வேணும்ன்னு நினைக்கிறான். சைக்கிள் வெச்சு இருக்கிறவன் ஸ்கூட்டரோ மோபெட்டோ வேணும்ன்னு நினைக்கறான். ஸ்கூட்டர் வெச்சு இருக்கறவன் மோட்டார் சைக்கிளுக்கு ஆசை படறான். அதுவும் இருக்கறவனுக்கு ஒரு நானோ காராவது இருக்ககூடாதான்னு தோணறது! இப்படி ஆசைக்கு ஒரு எல்லையே கிடையாது. அவரவர் இருக்கிற ஸ்திதியிலேந்து இன்னும் அதிக வசதி வேணும்ன்னுதான் நினைக்கறாங்க! போதும்பா ந்னு யாரும் நினைக்கறாங்க
ஏன் வறுமை வேணாம்ந்னு சொல்றார்? பசி வந்திட பத்தும் பறந்து போம் என்கிற மாதிரி பசிக்கொடுமை அதிகமானா தர்மம் பிழற்ந்துவிடுவோம். பசி அதிகமானா திருடியாவது சாப்பிடத்தோணும். அதுக்கு அடி தடில கூட இறங்கத்தோணலாம். இப்படியே போனா நம்ம கதி அதோகதிதான்! கொடியது கொடியது வறுமை கொடியது. வெறும் வயத்துல பிலாசபி பேச முடியாதும்பாங்க. எல்லாம் நல்லதா நடந்துகிட்டு இருக்கறப்ப நல்லவனா நாமும் இருக்கறது பலருக்கும் சுலபமே. லோகத்தோட போக்கு தனக்கு எதிரா போறப்பத்தான் நம்மோட நிஜமான தைரியம் பலம் எல்லாம் தெரியவரும்
அதனால ப்ரார்த்தனை செய்யறப்ப ஏழ்மை இல்லாம வைப்பான்னு கேட்டுக்கலாம். அது போதும்.

கடைசியா கேட்கிறது
தே³ஹி மே க்ருபயா ஶம்போ⁴த்வயி ப⁴க்திம்ʼஅசஞ்சலாம்

ப்ரார்த்தனை எழுதினவருக்கு கொஞ்சம் பயம் வந்துடுத்து! இதென்னடா இது வேணும் அது வேணும்ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டோம்! இப்படி போய்க்கொண்டு இருந்தா ஆசை பாட்டுக்கு வளந்துடுமே! பயந்துபோய் உடனே பகவான்கிட்ட சரண் அடைஞ்சுடறார். கருணை கூர்ந்து உன்கிட்ட அசையாத பக்தியை கொடுப்பா!
அதென்ன அசையாத பக்தி?
சிலரை பாத்து இருக்கலாம். ஏதோ ஒரு வழில சாமி கும்பிட்டுகிட்டு இருப்பாங்க. அப்ப ஒத்தர் வந்து இந்த கோவிலுக்கு போனேனா? அங்க இந்த சாமியார் இருந்தார். அவர் சொல்லறது அப்படியே பலிக்குது! அவர் ஆசீர்வாதம் பண்ணா அப்படியே எங்கேயோ போயிடுவோம்! மனசு தடுமாறுது. சாமி பூஜையை எல்லாம் அப்படியே மூட்டை கட்டிட்டு கிளம்பிடுவாங்க! அவ்வளோதான் அவங்களோட இறை நம்பிக்கை!
கொஞ்ச நாள்ளே அதுவும் ஏமாத்தமா போயிடும். அப்ப ஒத்தர் வந்து இந்த ஊர்ல இருக்கிற குளத்துல குளிச்சா குபேரனாகிடலாம்பார்! மனசு அதுக்கும் ஆசைப்படும். ஏண்டா இவர் குபேரனாகலைன்னு கேட்கத்தோணாது. பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கேயும் போவாங்க.
இதான் நிலையில்லாத சஞ்சலமான மனசு!
இப்படி அலையறதுலேந்தும் என்னை காப்பாத்துப்பா! உன்னை விட்டுட்டு எங்கேயும் போக நா ரெடி இல்லே. என் மனசு உன்கிட்டே மட்டுமே இருக்கட்டும். ஆசை பட்டுண்டு வேற எங்கேயும் போக வேணாம்!

ஸோ சிம்பிள் பிரார்த்தனை. இது போதும். அதுக்கு மேலே அவன் என்ன கொடுத்தாலும் அதை பிரசாதமா நினைச்சுண்டு அனுபவிச்சுட்டு போயிடுவோம். கடை தேற அதான் வழி!