Pages

Wednesday, September 30, 2015

சம்மனஸ்ய ஸூக்தம்.


இது கலிகாலம். மக்கள் மனதில் அதன் தாக்கம் இந்த கால கட்டத்தில் நிறையவே காணப்படுகிறது. அநேகமாக எல்லாக்குடும்பங்களிலுமே பரஸ்பரம் அன்பின்மையும் சண்டை சச்சரவும் நிலவுகிறது. முக்கியமாக கவலை தருவது தம்பதிக்குள் ஒற்றுமை இல்லாமையே. அகங்காரம் மேலெழ ”யார் பெரியவர்? நீ யா நானா?” என்று ஆரம்பித்து ஒருவரை ஒருவர் அதிகாரம் செய்ய பார்ப்பதில் மனசு போகிறதே ஒழிய இரட்டை மாட்டு வண்டி போல வாழ்கையை இழுத்துச்செல்லௌம் மனப்பாங்கு இல்லை.
வேதம் என்றாலே பலருக்கும் பிலாசபிதான் நினைவுக்கு வருகிறது. அதனாலேயே “இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது” என்று ஒதுங்குகிற போக்கே காணப்படுகிறது.

மன ஒற்றுமை நிலவ வேதம் சொல்லுவதை காணுங்கள்:
இது மனிதர்களுக்கிடையே ஒற்றுமையும் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதலையும் அன்பையும் வலியுறுத்துகிற ஸூக்தம். இது அதர்வண வேதத்தின் ஶௌநக ஶாகை 3ம் காண்டம் 30வது ஸூக்தமாக காணப்படுகிறது.

    (3-30-1-1) सहृदयं सांमनस्यम् अविद्वेषं कृणोमि वः |

    (3-30-1-2) अन्यो अन्यम् अभि हर्यत वत्सं जातम् इवाघ्न्या ||1||


(3-30-1-1) ஸஹ்ருʼ³யம்ʼ ஸாம்ʼமனஸ்யம் அவித்³வேஷம்ʼ க்ருʼணோமி வ: |
  (3-30-1-2) அன்யோ அன்யம் அபி ஹர்யத வத்ஸம்ʼ ஜாதம் இவாக்ன்யா || 1||

ஒரே உள்ளத்தவராக ஒரே மனத்தினராக வெறுப்பு அற்றவர்களாக உங்களை ஆக்குகிறேன். புதிதாப்பிறந்த கன்றினை தாய்ப்பசு நேசிப்பது போல ஒருவரை ஒருவர் நேசியுங்கள்

    (3-30-2-1) अनुव्रतः पितुः पुत्रो मात्रा भवतु संमनाः |
    (3-30-2-2) जाया पत्ये मधुमतीं वाचं वदतु शन्तिवाम् ||2||


(3-30-2-1) அனுவ்ரத: பிது: புத்ரோ மாத்ரா பவது ஸம்ʼமனா: |
  (3-30-2-2) ஜாயா பத்யே மதுமதீம்ʼ வாசம்ʼ வத³து ஶந்திவாம் || 2||

மகன் தந்தையைப் பின் தொடர்பவனாகவும், தாயுடன் ஒரே மனதுடனும் இருக்கட்டும்.
கணவனிடம் மனைவி இனிமையான அமைதி தரும் வார்த்தைகளைப் பேசட்டும்
.

    (3-30-3-1) मा भ्राता भ्रातरं द्विक्षन् मा स्वसारम् उत स्वसा |
    (3-30-3-2) सम्यञ्चः सव्रता भूत्वा वाचं वदत भद्रया ||3||

   (3-30-3-1) மா ப்ராதா ப்ராதரம்ʼ த்³விக்ஷன் மா ஸ்வஸாரம் உத ஸ்வஸா |
  (3-30-3-2) ஸம்யஞ்ச: ஸவ்ரதா பூத்வா வாசம்ʼ வத³த பத்³ரயா || 3||

சகோதர சகோதரிகள் ஒருவரை ஒருவர் வெறுக்கக்கூடாது. எல்லோரும் ஓன்று சேர்ந்து ஒரே நோக்கத்துக்காக பாடுபடுங்கள். அனைவருக்கும் நன்மை தரும் வார்த்தைகளை பேசுங்கள்.

    (3-30-4-1) येन देवा न वियन्ति नो च विद्विषते मिथः |
    (3-30-4-2) तत् कृण्मो ब्रह्म वो गृहे संज्ञानं पुरुषेभ्यः ||4||

  (3-30-4-1) யேன தே³வா ந வியந்தி நோ ச வித்³விஷதே மித²​: |
  (3-30-4-2) தத் க்ருʼண்மோ ப்³ரஹ்ம வோ க்³ருʼஹே ஸஞ்ஜ்ஞானம்ʼ புருஷேப்: || 4||

எதனால் தேவர்கள் ஒருவருக்கொருவர் பிரியாமலும் வெறுக்காமலும் இருக்கிறார்களோ, புரிந்துகொள்ளல் என்ற அந்த மேலான பண்பு வீட்டில் உறுப்பினர்களிடம் நிலவ ப்ரார்த்திக்கிறேன்.

    (3-30-5-1) ज्यायस्वन्तश् चित्तिनो मा वि यौष्ट संराधयन्तः सधुराश् चरन्तः |
    (3-30-5-2) अन्यो अन्यस्मै वल्गु वदन्त एत सध्रीचीनान् वः संमनसस्

क्र्णोमि ||5||
  (3-30-5-1) ஜ்யாயஸ்வந்தஶ் சித்தினோ மா வி யௌஷ்ட ஸம்ʼராதயந்த: ஸதுராஶ் சரந்த: |
  (3-30-5-2) அன்யோ அன்யஸ்மை வல்கு³ வத³ந்த ஏத ஸத்ரீசீனான் வ: ஸம்ʼமனஸஸ் க்ர்ணோமி || 5||

இளையவர்கள் பெரியவர்களைத் தொடர்ந்து செல்வது போல, ஒருவரை ஒருவர் பின்பற்றிச் செல்பவர்களாக, ஒரே மனத்தினராக, சேர்ந்து வழிபடுபவர்களாக, இனிமையாக பேசுபவர்களாக சேர்ந்து வாழுங்கள். ஒரு போதும் ஒற்றுமை குலையாதீர்கள். வாருங்கள், உங்களை ஒற்றுமையுடன் செயலாற்றுபவர்களாக ஒன்று பட்ட மனத்தினராக ஆக்குகிறேன்.

    (3-30-6-1) समानी प्रपा सह वो 'न्नभागः समाने योक्त्रे सह वो युनज्मि |
    (3-30-6-2) सम्यञ्चो 'ग्निं सपर्यतारा नाभिम् इवाभितः ||6||

  (3-30-6-1) ஸமானீ ப்ரபா ஸஹ வோ (அ)ந்னபா³​: ஸமானே யோக்த்ரே ஸஹ வோ யுனஜ்மி |
  (3-30-6-2) ஸம்யஞ்சோ (அ)க்³னிம்ʼ ஸபர்யதாரா நாபிம் இவாபி: || 6||

உங்கள் கிணறும் (நீரும்) உணவும் இருக்கட்டும். அன்புக்கயிற்றினால் உங்களை
கட்டுகிறேன். ஆரங்கள் சக்கரத்தின் அச்சில் சேர்வது போல ஒரே நோக்கத்துடன் புனித
அக்னியை வழிபடுங்கள்.

    (3-30-7-1) सध्रीचीनान् वः संमनसस् कृणोम्य् एकश्नुष्टीन्त् संवननेन सर्वान् |

    (3-30-7-2) देवा इवामृतं रक्षमाणाः सायंप्रातः सौमनसो वो अस्तु ||7||

  (3-30-7-1) ஸத்ரீசீனான் வ: ஸம்ʼமனஸஸ் க்ருʼணோம்ய் ஏகஶ்னுஷ்டீந்த் ஸம்ʼவனனேன ஸர்வான் |
  (3-30-7-2) தே³வா இவாம்ருʼதம்ʼ ரக்ஷமாணா: ஸாயம்ப்ராத: ஸௌமனஸோ வோ அஸ்து || 7||

உங்கள் அனைவரையும் ஒரு மனதினராக ஒரு செயல்பாடு உடையவராக ஆக்குகிறேன்.
அன்பினால் ஒன்றுபட்டு உணவருந்துங்கள். தேவர்கள் ஒன்றுபட்டு அமுதத்தை காப்பது போல இரவும் பகலும் உங்களுக்கு மன ஒருமைப்பாடு இருக்கட்டும்.

1.2 MB ஒலிக்கோப்பு தரவிறக்கி கேட்டு மகிழ: http://tinyurl.com/ph5rj93


No comments: