Pages

Tuesday, September 22, 2015

கிறுக்கல்கள்! - 31



வெளியூர் போய் திரும்பி வந்த மாஸ்டர் தான் பாடம் கற்றுக்கொண்டதாக கதை சொன்னார்.

பஸ்ஸில் பயணித்துக்கொண்டு இருந்தபோது நடுவில் உணவுக்காக நிறுத்தினார்கள்.
பக்கத்தில் இருந்த ஒரு உணவகத்துக்குப்போனார். வகை வகையான உணவுப்பொருட்கள் இருந்தன.

இவர் சூப் வேண்டும் என்று கேட்டார்.

நீங்க அந்த பஸ்ல வந்தீங்களா?

ஆமா.

அப்ப சூப் கிடையாது!

குழப்பத்துடன் கேட்டார்: அப்ப அதோ இருக்கிற கலந்த சாதம்?

ம்ஹும்! பஸ்ல வரவங்களுக்கு அதெல்லாம் கிடையாது. சாண்ட்விச் வாங்கிக்குங்க!

ஏன்?

பஸ் கொஞ்ச நேரத்துல கிளம்பிடும். உங்களுக்கு சாப்பிட பத்து நிமிஷத்துக்கு மேலே கிடைக்காது. காலை முதல் மெனக்கெட்டு இத்தனையும் செய்திருக்கேன். ரசிச்சு ருசிச்சு சாப்பிடாம அவசர அவசரமா அள்ளி தின்னுட்டு போறவங்களுக்கு இதெல்லாம் கொடுக்க மாட்டேன்!

No comments: