Pages

Monday, July 27, 2015

அடியார்கள் - வெங்கடேஸ்வர சர்மா


எதிர்காலத்தை அறியும் சக்தி என்றாலே மனித மனம் எப்போதும் கவரப்படுகிறது. அது அறிவியல் மூலமாகவோ அல்லது மற்ற வழிகள் மூலமாகவோ ஏற்படலாம். அது விஷயமில்லை. இதற்கு ஒரு உதாரணம்  ஸ்ரீ ஏ வெங்கடேஸ்வர சர்மா. அவர் கேரள மாநிலம், கொச்சினில் ஒரு பெரிய ப்ரச்ன ஜோதிட நிபுணர். அவர் பட்டப்படிப்பை முடித்ததும் அவரது குரு பகவான் சுப்பிரமணியரின்  படம் ஒன்றை கொடுத்தது அவர் பெற்ற அறிவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் சுப்ரமணியரை உபாசிக்கும்படி சொன்னார்.


 பின்னால் அவரது மாமா ரமண மஹரிஷியின் படம் ஒன்றையும் கொடுத்தார், அதையும் இவர் மிக்க மரியாதையோடு வாங்கி சுப்ரமணியர் படத்தின் அருகே பூஜை அறையில் வைத்தார்.  வழிபாட்டின் போது சர்மாஜி படத்தில் இருந்த ரமண மஹரிஷி சுப்ரமணியராக உருமாறுவதை கண்டு வியந்தார். இதை அவர் ரமண மஹரிஷியை போய் தரிசிக்க ஒரு சூசகமாக எடுத்துக்கொண்டார். 1917 ல் அவர் பகவான் ரமண மஹரிஷியை தரிசித்தார்.அவர் பகவானிடம்  " அனைத்து அறிவியல் துறைகளிலும் ஜோதிடம் சிறந்தது மற்றும் மிக துல்லியமானது இல்லையா?" என்று கேட்டார். அதற்கு பகவான் "தன்னை அறிவது அனைத்து பிற அறிவியல் துறைகளைவிட மேன்மையானதுஎன்று கூறினார். அந்த சமயத்தில் சர்மாஜி ஒரு ஜோசியரின் வாழ்க்கையின் உச்சத்தில் இருந்தார். அவரது ஒவ்வொரு கணிப்பும் அவருக்கு செல்வம் மற்றும் புகழை நிறைய கொண்டு வந்தது. ஆனால் பகவானின் வார்த்தைகள், அவர் எல்லாவற்றையும் துறக்கவேண்டும் என்று உணர வைத்தது.

எனினும், பகவான் தாயார் அவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும் படி சொன்னார். அவர் அந்த விசாலாட்சி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டு தன் ஜோசிய வாழ்க்கையை தொடர்ந்தார்.

 பாரம்பரிய ஜோதிடம் போலல்லாமல் ப்ரச்ன ஜோதிடம் கேட்கும் நேரம், திசை, கணிப்புக்கள் ஆகியவற்றை பொறுத்தது. உள் உள்ளுணர்வில் இருந்து பதில் வரும்.
அவர் பூஜை அறையில் இருந்த போது ஒருமுறை அவரது மனைவி நாகப்ப செட்டியார் வந்திருக்கிறார் என்று சொன்னார். அவ்வளவே. சர்மாஜி "அவர் தனது வைர மோதிரத்தை தொலைத்து விட்டார். அவரது உதவியாளரை சந்தேகிக்கிறார்.  யார் மேலும் சந்தேகம் வேண்டாம் என்று அவரிடம் சொல். மோதிரம் உண்மையில் செட்டியார் விரலில் இருந்தது நழுவி விட்டது. அவரது முற்றத்தில் ஒரு வாழை மரத்தின் கீழ் அது இருக்கிறது என்றார். அந்த. கணிப்பு உண்மையாக இருந்தது. வியக்கத்தக்க இந்த ஆற்றலால் அவரை நிறைய பேர் தேடி வந்ததில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

எடித் ஆசிரமத்துக்கு வந்த ஒரு ப்ரெஞ்சு பக்தை. ஆசிரமத்துக்கு கொண்டு வந்த பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட அவரது சாமான்களை அவர் வந்த குவைத் ஏர்லைன்ஸ் தவற விட்டுவிட்டது. பக்தைக்கு மிகுந்த மன வருத்தம் ஏற்பட்டது. அப்போது ஆசிரமத்தில் இருந்த சர்மாஜி, வருந்த வேண்டாம். அவை அனைத்தும் குவைத் ஏர்போர்டில் ஒரு பெரிய ரூமில் இருக்கின்றன என்றார். எடித் தன் சாமான்களை காணவில்லை என்று ஏர்லைன்ஸிடம் புகார் செய்தார். ஏர்லைன்ஸ் விரிவாக தேடிவிட்டோம் கிடைக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்துவிட்டது. சர்மாஜியின் திறனை எடித் சந்தேகித்தார். குவைத் மூலம் திரும்பிய அவர் லாஸ்ட் பேக்கேஜ் அறைக்கு சென்று பார்த்த போது ஒரு மூலையில் அவரது சாமான்கள் பாதுகாப்பாக இருந்ததை கண்டுபிடித்து ஆச்சரியப்பட்டார். டேக்கிங் இல்  விமான நிறுவனம் தவறு செய்ததால்  தொலைந்து  போய் விட்டதாக சொல்லிவிட்டது!!

No comments: