Pages

Saturday, May 16, 2015

உள்ளது நாற்பது - 25




காணும் தனைவிட்டுத் தான்கடவு ளைக்காணல்
காணும் மனோமயமாங் காட்சிதனைக் காணுமவன்
றான்கடவுள் கண்டானாந் தன்முதலைத் தான்முதல்போய்த்
தான்கடவு ளன்றியிலதால் .

காணும் தனைவிட்டு தான்கடவுளைக் காணல்
காணும் மனோ மயமாம் காட்சிதனைக் காணுமவன்
தான்கடவுள் கண்டானாம் தன் முதலைத் தான்முதல் போய்
தான் கடவுள் அன்றி இலதால்.

தன் உண்மையான ஸ்வரூபம் கடவுளின் உண்மையான ப்ரம்ஹ ஸ்வரூபமே அன்றி வேறில்லை. எல்லாவற்றையும் அறியும் தன் உண்மையான ஸ்வரூபத்தை விட்டுவிட்டு கடவுளை அறிகிறேன் என்று ஒருவன் சொல்வானேயானால் அது கடவுளின் உண்மையான ஸ்வரூபமில்லாத, தன் மனதால் அறிகின்ற காட்சியே ஆகும். தன்னை உண்மையில் கண்டு கொண்டவன் கடவுளை காண்பானா? இல்லை. மனம் இறந்தாலன்றி தன் உண்மை ஸ்வரூபத்தை காணமுடியாது. மனம் இறந்துவிட்டால் அதன் மூலம் காண்கின்ற கடவுளின் தோற்றைத்தையும் காண முடியாது.

यदीशितुर्वीक्षणमीक्षितार- मवीक्ष्य तन्मानसिकेक्षणं स्यात् ।
न द्रष्टुरन्यः परमो हि तस्य वीक्षा स्वमूले प्रविलीय निष्ठा ॥ २२ ॥
யதீ³ஶிதுர்வீக்ஷணமீக்ஷிதார- மவீக்ஷ்ய தன்மானஸிகேக்ஷணம்ʼ ஸ்யாத் |
ந த்³ரஷ்டுரன்ய: பரமோ ஹி தஸ்ய வீக்ஷா ஸ்வமூலே ப்ரவிலீய நிஷ்டா² || 22 ||


No comments: