Pages

Monday, March 16, 2015

வித்தியாசமான நிகழ்வுகள் - 3




ஒரு முறை பகவான் அருணாசலத்தைக்காட்டிமலை மருந்து; இந்த மருந்தோட சாம்பிள் இதை தினம் ப்ரதக்‌ஷிணம் பண்ணறவாளுக்குத் தெரியும்!” என்றார்.
த்யானத்திலேயே இருக்கும் சாதுக்களுக்கு அவர் கிரிபிரதக்‌ஷிணம் செய்யச்சொல்லுவார்.
ராம லட்சுமண படைகள் இலங்கைக்கு போனப்போ இந்திரஜித் சக்தி வாய்ந்த நாகாஸ்திரத்தை போட்டான். ஹனுமானைத்தவிர எல்லாரும் மூர்ச்சை ஆயிட்டா. ஹனுமான் வந்து சஞ்சீவி மூலிகைக்காக சஞ்சீவி மலையையே பேர்த்து எடுத்துண்டு போனார். அதோட காத்து பட்டவுடனேயே எல்லாரும் எழுந்துண்டா. இந்த அருணாசலம் அந்த சஞ்சீவி மலையை விட ரொம்ப விசேஷம்என்றார் பகவான்.

கட்டிட வேலை நடக்கும் போது பகவான் அங்கே போய் ஏதேனும் ஒரு கல்லில் உட்கார்ந்து கொள்வார். கடுமையாக எல்லாருடனும் வேலையும் செய்வார்.
இப்படி காத்தோட்டமா இருக்கறது சுகமா இருக்கு. சோபாவில உக்காந்து இருக்கிறது ஜெயில்ல போட்டா மாதிரி இருக்கு என்பார். தரிசிக்க யாரும் வந்துவிட்டால் பகவானை அழைக்க யாரும் வருவார்கள். ஒரு முறை மாதவ ஸ்வாமி வந்து அழைக்க பகவான் அண்ணாமலை ஸ்வாமியிடம் புது வாரண்டோட என்னை அரெஸ்ட் செய்ய வரா; திருப்பி ஜெயிலுக்கு போகணும் என்றபடியே கிளம்பினார்!

பக்தர் ஒருவர் பகவானிடம் இறைவனை கருணாசாகரம் என்கிறார்களே, உண்மையா?” என்றார்.
பகவான் சாகரமா? அதுக்காவது ஒரு கரை உண்டு ஓய்! கருணைக்கு ஏது எல்லை? எல்லையற்றது ஓய் அதுஎன்றார்.
பக்தர் ஏக்கத்துடன் பகவானே அந்த கருணைக்கு சரணைடைஞ்சுட்டா எப்படி இருக்கும்என்றார். சரணாகதி பண்ணிட்டா நான் செய்யறேன் என்கிற பாவம் இருக்காது. உதாசீன பாவமே இருக்கும். அவன் செய்கிற காரியங்களுக்கும் பயப்படமாட்டான். அதோட பலனும் அவனை பாதிக்காது. தனக்குன்னு ஒரு காரியத்தையும் அவன் ஆரம்பிக்க மாட்டான். சர்வாரம்ப பரித்யாகி ஆயிடுவான். அவனுக்கு அஹங்காரமே இருக்காதுஎன்றபடி மௌனமானார்.

 

No comments: