Pages

Monday, March 2, 2015

உள்ளது நாற்பது - 3

 
மரணபய மிக்குளவம் மக்களர ணாக
மரணபவ மில்லா மகேசன் – சரணமே
சார்வர்தஞ் சார்வொடுதாஞ் சாவுற்றார் சாவெண்ணஞ்
சார்வரோ சாவா தவர்.
மரணபயம் மிக்குஉளஅம் மக்கள் அரணாக
மரணபவம் இல்லா மகேசன் – சரணமே
சார்வர்தம் சார்வொடுதான் சாவுற்றார் சாவெண்ணம்
சார்வரோ சாவா தவர்.
சாதாரணமாக நாம் இந்த உடலை நாம் என்று கருதுகிறோம். இந்த உடலுக்கு ஒரு தோற்றம் இருக்கிறது. ஆகவே அதற்கு ஒரு முடிவாக மரணமும் இருக்கிறது. இந்த மரணம் நமக்கு பயத்தை தருகிறது. இதனாலேயே நாம் சார்ந்துள்ள மதம் சொல்லுகிறபடியாக மரணம் இல்லாத ஒரு கடவுளின் அடிகளை பற்றுகிறோம்.
ஞானிக்கு தான் சாவாதவன் எனத்தெரியும். அவன் இந்த உடலை தான் எனக்கருதுவதில்லை. இவர்களது அகந்தை இறந்துவிடுவதால் தாம் இறப்பில்லா பிரம்ம சித் ஸ்வரூபம் என அறிவார். இவர்களுக்கு மரணம் குறித்த நினைப்பு எழுவதில்லை.
मृत्युञ्जयं मृत्युभियाश्रिताना-महंमतिर्मृत्युमुपैति पूर्वम् ।
अथ स्वभावादमृतेषु तेषु कथं पुनर्मृत्युधियोऽवकाशः ॥ २ ॥
ம்ருʼத்யுஞ்ஜயம்ʼ ம்ருʼத்யுபி⁴யாஶ்ரிதானா- மஹம்ʼமதிர்ம்ருʼத்யுமுபைதி பூர்வம் |
அத² ஸ்வபா⁴வாத³ம்ருʼதேஷு தேஷு கத²ம்ʼ புனர்ம்ருʼத்யுதி⁴யோ()வகாஶ: || 2 ||

 

No comments: