Pages

Thursday, December 11, 2014

அன்பு -1

ம்

இது விசித்திரமான உலகம்! எல்லாவிதமான மக்களும் இருக்காங்க. இதுல எத்தனைப்பேர் நிறைவானவங்கன்னு பாத்தா ஏமாத்தமாகவே இருக்கும். சில சமயம் இணையத்துல சிலர் தன்னைப்பத்திஓபனாசொல்லிக்கிறதை கேட்டாகெதக்குன்னு இருக்கும்!

போகட்டும்! ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குறை இருக்கும். சிலருக்கு அதிகம்; சிலருக்கு குறைவு. பொதுவாக கஷ்டப்படுகிற விஷயங்களையும் அதற்கு என்ன செய்யலாம் என்பதையும் கொஞ்சம் பார்க்கலாமா

பலருக்கும் ஒரு பிரச்சினை அன்பு!

ஆமாம். அன்பை எதிர்பார்க்கிறார்கள். கிடைப்பதில்லை.

ஒருவர் மகிழ்ச்சியுடன் இருக்க ஒரு முக்கிய காரணம் அன்பு கிடைப்பதோ அல்லது அன்பை தர முடிவதோ. குழந்தையை அம்மா ’நல்ல குழந்தை. என் செல்லம்’ ன்னு கொஞ்சினா அது உடனே சிரிக்கிறது; மகிழ்ச்சியுடன் இருக்கிறது. அம்மாவுக்கும் கூட சந்தோஷமாக இருக்கிறது! பழகிய ஒரு இடத்துக்கு பல நாட்கள் கழித்துப் போகிறோம். அங்கே இருக்கிறவங்களை பார்த்து நல்லா இருக்கியாம்மா என்று கேட்டால் நாலு நாளாக சளியுடன் அவஸ்தைப்பட்டுக்கொண்டு சுரத்துடன் இருந்தால் கூட தலையை அசைத்து ’நல்லாருக்கேன்’ என்கிறார்கள்; சந்தோஷப்படுகிறார்கள்!

மனைவி கணவன் தன்னிடம் அன்புடம் எப்போதும் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறாள். ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்ன்னு முதல் ஈர்ப்பு முடிந்து போன பிறகு அடுத்த நிலையான ஈர்ப்புவருவதற்குள்- வர வேண்டும்- ”என்ன ஆச்சு இவருக்கு? இவ்வளவு அன்பா இருந்த ஆசாமி இப்படி நடந்துக்கிறாரே?” ந்னு தோணும். ஆசாமியோ பழைய ஆபீஸ்  வேலை, தொல்லைகள்ன்னு பிரச்சினைகளிலேயே மூழ்கி இருப்பார்.
கணவனோஎன்னடா இது, காபி டேபிள் மேல இருக்குன்னு சொல்லிட்டு அவ பாட்டுக்கு தன் வேலையை பார்க்கிறா? என் மேல அன்பே இல்லியாந்னு யோசிப்பார். வீட்டு வேலை தலைக்கு மேல இருக்கிறதை கவனிக்க மட்டார்!

இதெல்லாம் வயசானதால வந்த வினை! சின்ன்ன்ன்ன குழந்தையை பாருங்க! அது பாட்டுக்கு சிரிக்குது! புன்னகைக்குது! சந்தோஷமா இருக்கு! வலி, கஷ்டம் இருந்தா அழுது! அடுத்த நிமிஷமே சிரிக்குது! நீ எனக்கு அன்பு காட்டணும்ன்னு அது ஒண்ணும் டிமாண்ட் வைக்கிறதில்லை! அது இயல்பா மத்தவங்ககிட்ட அன்பை காட்டிக்கொண்டு இருக்கு!
அஹா! நம்முக்குள்ளேயே அன்பு இருக்கு. ஏன் வெளியே தேடணும்? வேணும் வேணும்ன்னு கேட்காம இந்த பிடி ந்னு கொடுக்கறவங்களா மாறிடலாமே?

ஆனா நம்முள்ளே இருக்கிற அன்பு கொஞ்சம் கொஞ்சமா குறைந்து காணாமல் போய்க்கொண்டு இருக்கு! மாறிக்கொண்டு இருக்கும் நம் வாழ்கை முறையே முக்கிய காரணம். இதனால் அன்பை வெளியே தேடுகிறோம். அது கிடைக்காத போது வெறுப்படைகிறோம்; கோபப்படுகிறோம்; பாதுகாப்புடன் இல்லாததாக உணர்கிறோம். நாம் செய்தவற்றை யாரும் பாராட்டவில்லை என்று நினைக்கிறோம். நமக்குத்தேவையானதை மற்றவர்கள் தராததால் நம் மீதே நமக்கு வெறுப்பு வருகிறது!

கொஞ்சம் வளர்ந்த பின் குழந்தையை போதிய அளவு சரியாக கவனிக்காவிட்டால் பிரச்சினை வரலாம். சில குழந்தைகள்  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரும்! எதையாவது போட்டு உடைக்கும்ல் நாசம் பண்ணும். இது போல ஏதேனும்! உடனே நாம் அதை பார்த்து என்ன இப்படி செய்தாய் ந்னு கேட்கிறோம் இல்லையா? ’நீ திட்டினாக்கூட பரவாயில்லை; என்னை பாரு. எதாவது பேசு’ என்கிற மோசமான நிலைக்கு குழந்தை போய்விட்டதை நாம் உணராவிட்டால் … ரொம்ப கஷ்டங்க! மௌன சாமி மடத்து கணவர்களோட மனைவிகள் பல வருடங்கள் இப்படி கஷ்டப்படக்கூடும்! அவங்களா ஒரு பேலன்ஸ் க்கு வரும் வரை…
அன்பு வறண்டு போனால் பரவாயில்லை; அதை நாம் உணர்ந்து நடவடிக்கை எடுத்தால்….
 -----
அடிப்படை கான்சப்ட் mindvalley.com இன் The 6 Phase Meditation - envisioning-method பாடங்களில் இருந்து. விஷன் லக்கியானிக்கு நன்றி!

No comments: