Pages

Wednesday, October 8, 2014

உணர்ச்சிகளை கவனிக்கும் போது.....





உணர்ச்சிகளை கவனிக்கும் போது 3 விஷயங்கள் நடக்கலாம்.
1. சாட்சியாக பார்ப்பது.
2. உணர்சிகளால மூழ்கடிக்கப்படுவது.
3. என் தலை விதின்னு ஒப்புக்கொண்டு அதை அனுபவிப்பது.

முதல் வகை ஆசாமிக்கு சுயக்கட்டுப்பாடு இருக்கு. இரண்டாவது வகையில் உணர்ச்சிகளை கண்காணிக்கவும் தெரியலை,  சுத்தமா கட்டுப்பாடும் இல்லை. மூணாவது வகையில  உணர்ச்சிகளை கொஞ்சமாவது அடையாளம் காணமுடியும்; ஆனால் அதை கட்டுப்படுத்த ஆர்வமோ உந்துதலோ இல்லை. டிப்ரஷன் இருக்கிறவங்க இப்படி இருப்பாங்க.

என் தலை விதின்னு ஒப்புக்கொண்டு அதை அனுபவிக்கிறதை சரணாகதி தத்துவமா நினைக்கக்கூடாது. ஏன்னா இது ஒரு அறிவு பூர்வமான சரண்டர் இல்லை. இப்போதைக்கு வேற வழி தோணலை அல்லது அது பத்தி யோசிக்க தயார் இல்லை; அதனால நடக்கிறது நடக்கட்டும்ன்னு விடறேன். அவ்வளோதான்!
நம்முடைய லிமிடேஷன்ஸ் தெரிஞ்சு இறைவன்கிட்ட எல்லாத்தையும் ஒப்படைக்கிறதே சரி ந்னு புத்தி பூர்வமா கருதி ஒப்படைச்சு, அதனால் என்னதான் விளைவு வந்தாலும் அப்படியே புகார் செய்யாம பகவத் ப்ரசாதமா ஏத்துக்கொண்டு இருப்பதுதான் சரணாகதி!

ஆதர்சமா வெறும் சாட்சி பாவத்தில நடக்கிறதை கவனிக்கணும். இருந்தாலும் பல சமயம் நம்மோட இன்வால்மெண்டும் வந்துடும். “இப்படி எல்லாம் நினைக்கக்கூடாது;” “நான் என்னையே உற்சாகப்படுத்திக்க நல்ல விஷயங்களை நினைக்கிறேன்;” அல்லது ரொம்ப துன்புறுத்தற விஷயமா இருந்தாஇதைப்பத்தி நினைக்க வேண்டாம்.” இப்படி ஏதாவது இன்வால்வ்மெண்ட் இருக்கும்!
சாட்சி பாவத்துல இந்த இன்வால்மெண்ட் கிடையாது. உள்ளதை உள்ள படி பார்க்கும்! நமக்கு சாதகம் என்கிறதால எதையும் திணிக்காது. இன்ன உணர்ச்சின்னு கண்டு பிடிக்க அது மொழி சார் மூளையின் பாகங்களையும் செயலுக்கு கொண்டுவரும். நியோ கார்டக்ஸ் வேலை செய்வதால சாட்சி பாவம் வராட்டாலும் குறைந்த பட்சம் எதிர்வினை செயல்வேகமாவது மட்டுப்படும்!

தர்க்க ரீதியா பாத்தா உணர்சிகளை கவனிக்கறதும், மேலே செயல் ஒண்ணை துவக்கறதும் இரண்டு வெவ்வேறு விஷயங்கள். இருந்தாலும் வழக்கமா ரெண்டும் ஒண்ணாவே நடக்கும். நல்லதில்லாத உணர்ச்சி ஒண்ணை அடையாளம் காண்பதும் உடனே அதை நீக்க நடவடிக்கையும் கை கோர்த்துப்போகும்! ஆனா இதுவும், உத்வேகத்தில எதிர்வினை செய்யாம கட்டிப்போடறதும் வேற வேற. தன்கிட்டேந்து பொம்மையை பிடுங்கின குழந்தையை அடிக்கபோகிறது ஒரு குழந்தை. “ஏய் சும்மா இரு”ன்னா இருந்துடலாம். ஆனால் கோபத்துக்கான காரணம் அப்படியேத்தான் இருக்கும். மாறா நான் கோபமா இருக்கேன்னு அடையாளம் காண்பது பல வழிகளை காட்டும். எதிர்வினை இருக்கலாமா? இருந்தால் எப்படி இருக்கலாம்? அது நல்லதா? இல்லை கோபத்தை விட்டுவிடலாமா

ஆமாம், சரியாக புரிஞ்சு கொண்டீங்க! இங்கே புத்தி வேலை செய்கிறது.
இதான் சுயக்கட்டுப்பாடோட முதல் படி!



No comments: