Pages

Wednesday, September 17, 2014

பசி!


நொச்சூர் வெங்கடராமன் அவர்களின் உபன்யாசத்தில் இருந்து.....


ஒரு புராண கதை உண்டு. கேரளத்துல சாக்கியார் கூத்துன்னு சொல்வதுண்டு.
குபேரனுக்கு தன்கிட்ட இருக்கிற செல்வம் பத்தி கொஞ்சம் கர்வம் வந்தது. அவன் சிவன்கிட்டப்போய் தன் வீட்டுக்கு சாப்பிட வரணும்ன்னு அழைச்சான். சிவனுக்கு தன் செல்வத்தை பெருமையை காட்டணும்ன்னு எண்ணம்!
சிவன் சொன்னார். அடடா! நான் இப்பல்லாம் இப்படி வெளியே சாப்பிடப்போறதில்லையேப்பா!
குபேரன் ரொம்ப வற்புறுத்தினான்.
நான் வரது இருக்கட்டும். இந்த கணபதிதான் எப்ப பாத்தாலும் பசி பசின்னு அலைஞ்சுண்டு இருக்கான்! அவனை அழைச்சுண்டு போய் சாப்பாடு போடு
குபேரனுக்கு ஏமாத்தம். இந்த சின்ன குழந்தைய அழைச்சுண்டு போய் சோறு போடச்சொல்லறாரே! குண்டா இருந்தாக்கூட எவ்வளோ சாப்பிடும்?
சிவன் சொன்னார், இவனுக்கு போட்டுட்டு மிச்சம் மீதி ஏதும் இருந்தா கொஞ்சம் கொடுத்து அனுப்பு.
சரின்னு வேற வழியில்லாம அவன் கணபதியை அழைச்சுண்டு போனான். இலையப்போட்டு பரிமாறத்துக்குள்ள அத்தனையும் காணாமப்போச்சு! பரிமாற பரிமாற அத்தனையும் காணாமப்போயிண்டே இருந்தது!
மைச்சது அத்தனையும் தீர்ந்து போயிடுத்துன்னு குபேரன் சொன்னான். கணபதி சொன்னார் சமைக்காததை போடேன்!
மீதி அரிசி காய்கறின்னு இருந்தது எல்லாம் போட்டு அதுவும் காணாமப்போச்சு! அப்புறம் பிள்ளையார் அங்கே இருக்கற வஸ்துக்கள் எல்லாத்தையுமே சாப்டுண்டு இருக்கார். குபேரனுக்கு என்ன செய்யறதுன்னு புரியலை. பிள்ளையாரோ கத்திண்டே இருக்கார்.”சும்மா இருக்காம இன்விடேஷன் கொடுத்து என்னை சாப்பட கூட்டிண்டு வந்து இப்படி பட்டினி போடறயே! எனக்கு கொஞ்சம் கூட பசி தாங்க முடியலையே!”
குபேரன் சொத்தே காணாமப்போயிடும் போல இருந்தது! அவன் என்ன செய்யறதுன்னு தெரியாம ஓடிப்போய் சிவன்கிட்ட நடந்ததை சொன்னான்! என் சொத்தை எல்லாம் அவர் முழுங்கியாச்சு! இன்னும் பசி அடங்கலைன்னு கத்திண்டு இருக்காரே. உங்க பிள்ளைக்கு சோறு போட்டு எனக்கு மாளாது!
அவரோ அதை கேட்டுட்டு அப்படியா? அப்படி எல்லாம் அவன் பண்ண மாட்டானே? நான் வந்து பாக்கிறேன்.
போற போக்கில கொஞ்சமே கொஞ்சம் மலர்  பொறி எடுத்துண்டு போனாராம். கணபதிகிட்ட அதை கொடுத்ததுமே பசி அடங்கிடுத்தாம்! இவ்வளோ சாப்பிட்டும் பசி அடங்காத கணபதிக்கு அந்த கொஞ்சம் மலர்பொறியை சாப்பிட்டதுமே பசி அடங்கிடுத்தாம்.  குபேரனும் அப்பாடா! ந்னு பெருமூச்சு விட்டான்!

இந்தக்கதை என்ன சொல்லறதுன்னா இப்படித்தான் ஜீவனுக்கு உள்ளுக்குள்ளே ஒரு பசி இருக்கு. அதை தீர்க்கறதுக்கு ஜீவன் இந்த லோகத்துல வெளி விஷயங்கள் எதை எதையோ உள்ளே போட்டுப்பார்க்கிறது! எதை எதையோ பில் பண்ணி பார்க்கிறோம். அப்பவும் பசி அடங்கறதில்லை. பணம் சம்பாதிச்சா அந்த பசி தீருமான்னு பார்க்கிறோம். பெரிய பொசிஷன்ல உக்காந்துண்டா அந்த பசி தீருமான்னு பாக்கறோம். விஷய சுகங்களை எல்லாம் ஆசை தீர அனுபவிச்சா அந்த பசி தீருமோ? தீர மாட்டேங்கறது! அது இன்னும் பசிச்சிண்டே இருக்கு. அடி காணாத குழின்னு விஷ்ணு சஹஸ்ர நாமத்தில பகவானுக்கு ஒரு பேரு. மஹா கர்தஹஇந்த மஹாகர்த்த னா என்னன்னா பில் ஆகவே ஆகாதாம் அது! அவ்வளோ பெரிய குழி! இதப்போலவேதான் நமக்குள்ள இருக்கிற பசியும்! எவ்வளவு சம்பாதிச்சும், எந்த பெரிய ஸ்தானத்தில உக்காந்துண்டும் அந்த பசி அடங்கவே மாட்டேங்கிறது! அந்த பசி எப்ப அடங்கும்ன்னா எப்ப அந்த மலர்அந்த பொறியை சாப்பிடறோமோ அப்பத்தான் அடங்கும். அந்த பொறி என்னன்னா நம்ம ஸ்வரூப ஞானம்! நமக்குள்ளேயே இருக்கு அந்த பூரண வஸ்து; ஆனா மனமோ வெளிமுகப்பட்டு அங்கே அந்த பூரணத்தை தேடிப்பார்க்கிறது. அது எப்ப தன்னைப்பார்த்துடுத்தோ அப்ப அடங்கிடும்!


No comments: