Pages

Friday, May 16, 2014

உணர்வு சார் நுண்ணறிவு - 2 சூடான ஐஸ்க்ரீம்!




Emotional intelligence ன்னாலே ஒரு சந்தேகம் வரலாம். அதென்னது கிறுக்குத்தனமா இருக்கு? எமோஷன் இருக்கற இடத்துல இண்டெலிஜன்ஸ் எப்படி இருக்கும்? அதாவது மனசும் அறிவும் எதிரானது இல்லையா? மனசுல உணர்சிகள் இருக்கிறப்ப அறிவு சரியா வேலை செய்யாது. அறிவு வேலை செய்கிற இடத்துல உணர்சிகளுக்கு வேலை இல்லை. சூடான ஐஸ்க்ரீம் என்கிறது போல இருக்கு Emotional intelligence ந்னு சொல்கிறது!

அப்படி இல்லை. இது உணர்ச்சிகளை புரிந்து கொள்கிறதான அறிவு. எமோஷன்ஸ் பத்திய இண்டெலிஜன்ஸ். அறிவும் மனசும் ஒரே விஷயம்தான். மனசு சலனமாகிறது. அறிவு நிலையானது. ஸ்திரமானது. புரிந்து கொள்வது அதற்கான சரிப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க உதவும்.
நடவடிக்கைன்னா உணர்ச்சி வசப்படாம இருக்கணும்ன்னு இல்லை. அப்படி செய்யப்பார்க்கிறது ஒரு சன்யாசியா இருக்கலாம். இல்லை ஆன்மீகத்தை ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டு முன்னேறப் பார்க்கிறவரா இருக்கலாம். ஆனா உணர்ச்சி வசப்படாம இருக்கிறது சாதாரண ஜனங்களுக்கானது இல்லை. உணர்ச்சி எழலாம். அது இயற்கை. ஆனால் அப்புறம்? இது தன்னைத்தானே பெருக்கிக்க விடப்படுமா இல்லை, அடக்கப்படுமா இல்லை, தணிக்கப்படுமா? இதுல எது அந்த நேரத்துக்கு இடத்துக்கு நபர்க்கு சரியோ அதை செய்யத்தான் இந்த எமோஷனல் இண்டெலிஜன்ஸ் கத்துக்கொடுக்கும்.

இந்த சப்ஜக்ட்டை சரியா புரிஞ்சு கொண்டு பயிற்சியும் செய்தால் நாளடைவில்…
சிக்கலான நிலைகளை சரியான விதத்தில் கையாளமுடியும்.
தான் நினைப்பதை தெளிவாக சொல்ல முடியும்.
பிறரை கவர முடியும்; அவர்களுக்கு உதவிகளை செய்ய முடியும்; அவர்களை சரியாக வழி நடத்த முடியும்.
மன அழுத்தம் நிறைந்த நிலைகளிலே கூட சமநிலையில் இருக்க முடியும்.
மற்ற மக்கள் நிலைகளின் உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளை புரிந்து கொள்ள முடியும்.
மற்றவர்களுடன் பேச்சு வார்த்தைகளை நடத்தும் போது தன்னையும் மற்றவர்களையும் சரியாக மேலாண்மை செய்ய முடியும்.
வேலைகளை சரியாக விரைந்து செய்ய மற்றவர்களை ஊக்குவிக்க முடியும்.
மிகக்கடினமான நிலைகளில் கூட நேர்முறை அணுகு முறையுடன் இருக்க முடியும்.

இது அத்தனையும் உங்களுக்கு உடனே கிடைத்துவிடும் என்று ஒன்றுமில்லை. எந்த புள்ளியில் ஆரம்பிக்கிறோம் எப்படி பயிற்சி செய்கிறோம் என்பதை பொருத்தது அது. ஆனால் இதை எல்லாம் புரிந்து கொண்டு செய்யச்செய்ய வாழ்க்கை வெற்றிகரமானது ஆகும்!


No comments: