Pages

Tuesday, April 15, 2014

ஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம், - 17




सुरुचिर-नव-रत्न-पीठ-स्थिते सुस्थिते रत्न-पद्मासने रत्न-सिम्हासने शङ्ख-पद्म-द्वयो+पाश्रिते
विश्रुते तत्र विघ्नेश-दुर्गा-वटु-क्षेत्रपालैर् युते

ஸுருசிர-நவ-ரத்ன-பீட²-ஸ்தி²தே ஸுஸ்தி²தே ரத்ன-பத்³மாஸனே ரத்ன-ஸிம்ஹாஸனே ஶங்க²-பத்³ம-த்³வயோ+பாஶ்ரிதே
விஶ்ருதே தத்ர விக்னேஶ-து³ர்கா³-வடு-க்ஷேத்ரபாலைர் யுதே


இவள் அமரும் பீடம் ஒன்பது மணிகளாலும் அலங்கரிக்கப்பட்டது. சிம்ஹாசனமும் பத்மாசனமும் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டது. சங்க நிதியும் பத்ம நிதியும் இவளுக்கு சேவை செய்கின்றன. விக்னேச்வரர், துர்கை, வடு. க்ஷேத்ரபாலர்கள் ஆகியோர் அவளை தொடர்கின்றனர்.

मत्त-मातङ्ग-कन्या-समूहान्विते भैरवैर् अष्टभिर् वेष्टिते मञ्जुला-मेनका+द्यङ्गना-मानिते देवि वामादिभिः शक्तिभिस् सेविते

மத்த மாதங்க³ கன்யா ஸமூஹான்விதே பை⁴ரவைர் அஷ்டபி⁴ர் வேஷ்டிதே மஞ்ஜுலா மேனகாத்³யங்க³னா மானிதே தே³வி வாமாதி³பி⁴: ஶக்திபி⁴ஸ் ஸேவிதே 

(பேரின்ப) மது அருந்திய மாதங்க கன்னியர்கள் , எட்டு பைரவர்கள் ஆகியோர் சூழ்கின்றனர். மஞ்சுளா, மேனகா போன்ற தெய்விக நடனமணிகள் அவளை கௌரவிக்கின்றனர். வாமா முதலான சக்திகள், ....

धात्रि-लक्ष्म्यादि-शक्त्यष्टकैः संयुते ! मातृका-मण्डलैर्-मण्डिते !
தாத்ரி-லக்ஷ்ம்யாதி³-ஶக்த்யஷ்டகை: ஸம்ʼயுதே மாத்ருʼகா-மண்ட³லைர்-மண்டி³தே

தாத்ரி, லக்ஷ்மி முதலான எட்டு சக்திகள் சேவிக்கின்றனர். சப்த மாதர்கள்....

यक्ष-गन्धर्व-सिद्धा+ङ्गना-मण्डलैर् अर्चिते ! भैरवी-संवृते !पञ्च-बाणात्मिके! पञ्च-बाणेन रत्या च सम्भाविते! प्रीति-भाजा वसन्तेन चानन्दिते
யக்ஷ-க³ந்தர்வ-ஸித்³தாங்க³னா-மண்ட³லைர் அர்சிதே பைரவீ-ஸம்ʼவ்ருʼதே! பஞ்ச-பா³ணாத்மிகே! பஞ்ச-பா³ணேன ரத்யா ச ஸம்பாவிதே! ப்ரீதி-பாஜா வஸந்தேன சானந்தி³தே

யக்ஷர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள் ஆகியோர் அர்சிக்கிறார்கள். பைரவிகள் சூழ்ந்துள்ளனர். ஐந்தம்புகளை கொண்ட மன்மதனின் ஆத்மாவாக விளங்குபவளே. மன்மதனும் ரதியும் அவளை ஆராதிக்கின்றனர். வசந்தனும் (வசந்த ருது) ப்ரீதியுடன் அவளருகில் இருக்கிறான்.

 

No comments: