Pages

Sunday, November 17, 2013

இன்னொரு கோளாறான சிந்தனை -2

  போன போஸ்டை தொடர....
நாம பெரும்பாலான நேரம் இறைவனுடன் இருந்து கொண்டு அவசியமான நேரம் உலக
வாழ்க்கையில இருந்து பார்த்தால் என்ன? ந்னு கேட்டு இருந்தேன். அது இந்த புல் மேயற நேரம்தானா? இல்லைன்னா அப்படி மாத்திக்க முடியுமா? எப்படி?
 அப்படி இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும்!
 அப்படி முடியும்ன்னுதான் தோணுது.
சிசுவுக்கு என்ன எண்ணங்கள் இருக்க முடியும்? சிசுவா இருந்தபின் அது நமக்கு மறந்து போயிடறதாலே அது நமக்குத்தெரியாது. ஆனால் சிலர் சிசுக்கள் இறைவனுடன் ஒரு தொடர்பில இருக்கறதாவும் பின் நாட்களில அது போயிடறதாவும் சொல்கிறாங்க. இதை விட்டுடலாம்.

ஜபம் செய்கிறவங்க ஒரு விஷயம் கவனிச்சு இருக்கலாம். பல நாட்களா ஜபம் செய்கிறவங்களுக்கு புரியும். மனம் ஒருமைப்படாம எங்கோ வழக்கம் போல போயிடும். திடீரென்று ”என்னடா என்னென்னவோ யோசித்துக்கொண்டு இருக்கிறோம்? ஜபத்துக்கு இல்லே உட்கார்ந்தோம்”ன்னு தோணி ஒவ்வொரு முறையும் கொஞ்சம் பிரயாசைப்பட்டு திருப்பி மனசை ஜபத்துக்கு கொண்டு வர வேண்டும்.சில காலத்துக்குப்பின் இப்படி ஆகும்போது ஜபத்திலிருந்து விலகி விட்டோம் என்று புரிந்து திருப்பி மனசை பார்க்கும்போது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக அங்கே ஜபம் ஓடிக்கொண்டு இருக்கும்! மனசில அது வேற ப்ளேன்! இதைத்தான் அஜபா ஜபம் என்பர். இதுவே பழக்கமாகிவிட்ட பின்னர் அதுவே தானே சமயத்தில் வெளிவந்து உதவும். லிப்டில் மாட்டிக்கொண்டு தவித்த நண்பர் ஒருவர் ”அந்த சமயத்தில் நினைவுக்கு வந்தது எல்லாம் ராம ஜபம் ஒண்ணுதான்” என்றார். அவர் மயக்கமடைந்து விட்ட போதிலும் எப்படியோ சிலர் வந்து லிப்ட்டை திறந்து அவரை வெளியே கொண்டு வந்துவிட்டனர்!

அப்பைய தீக்ஷிதர் என்கிற பெரிய சிவபக்தர் சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு விரிஞ்சிபுரத்திற்கு பக்கத்தில் இருந்தார். அவருக்கு ஒரு சந்தேகம். என் மனசு எப்பவும் இறைவனையே நினைத்துக்கொண்டு இருக்கிறதா இல்லையா என்று. அதை சோதிக்க தான் சொல்வதை எல்லாம் எழுதிக்கொள்ள வேண்டுமென்று சீடர்களுக்கு சொல்லிவிட்டு ஊமந்தங்காயை சாப்பிட்டுவிட்டு உன்மத்த நிலையில் தான் சொன்னதை - சீடர்கள் பதிவு செய்து வைத்ததை பார்க்கும் போது சிவனைக்குறித்து 50 பாடல்கள் இயற்றி இருந்தாராம்! சுவையான இந்த கதையை இங்கே படிக்கலாம். 
அதனாலத்தான் சொல்கிறேன், பயிற்சியால நாம் எப்போதும் என்ன நினைக்கிறோம் என்பதை நாமே நிர்ணயிக்கலாம். சுலபமில்லை, சிரம சாத்யம்தான். ஆனால் வொர்த் என்று என்று தோன்றுகிறது!

No comments: