Pages

Monday, July 29, 2013

சிவாஷ்டோத்திர சதம் - 9

 

81
ஓம் அஹயே பு³த்⁴ந்யாய நம:
ॐ अहये बुध्न्याय नमः
om ahaye budhnyāya namaḥ
உபாஸிப்பதற்கு எளிதான அக்நி ஸ்வரூபமானவனுக்கு நமஸ்காரம்.
82 ஓம்ʼ தி³க³ம்ப³ராய நம: ॐ दिगम्बराय नमः oṁ digambarāya namaḥ திக்குகளை ஆடையாக கொண்டவனே நமஸ்காரம்
83 ஓம் அஷ்டமூர்தயே நம: ॐ अष्टमूर्तये नमः om aṣṭamūrtaye namaḥ ஐம்பூதங்கள், சூர்ய சந்திரர்கள், மற்றும் வேள்வி, வேட்பவன் ஆகிய எட்டு உருக்கொண்டவனே நமஸ்காரம்
84 ஓம் அநேகாத்மநே நம: ॐ अनेकात्मने नमः om anekātmane namaḥ அனேக ஆத்மாக்களாக ரூபம் கொண்டவனே நமஸ்காரம்
85 ஓம்ʼ ஸாத்த்விகாய நம: ॐ सात्त्विकाय नमः oṁ sāttvikāya namaḥ சாந்த வடிவினனே நமஸ்காரம்
86 ஓம்ʼ ஶுத்³த⁴விக்³ரஹாய நம: ॐ शुद्धविग्रहाय नमः oṁ śuddhavigrahāya namaḥ மிகத்தூய்மையான வடிவினனே நமஸ்காரம்
87 ஓம்ʼ ஶாஶ்வதாய நம: ॐ शाश्वताय नमः oṁ śāśvatāya namaḥ எப்போதும் இருப்பவனுக்கு நமஸ்காரம்
88 ஓம்ʼ க²ண்ட³பரஶவே நம: ॐ खण्डपरशवे नमः oṁ khaṇḍaparaśave namaḥ மனத்தளர்ச்சியை கோடரியால் அறுப்பவனே நமஸ்காரம்
89 ஓம் அஜாய நம: ॐ अजाय नमः om ajāya namaḥ பிறப்பில்லாதவனுக்கு நமஸ்காரம்
90 ஓம்ʼ பாஶவிமோசகாய நம: ॐ पाशविमोचकाय नमः oṁ pāśavimocakāya namaḥ தளைகளை அறுப்பவனுக்கு நமஸ்காரம்



அஹிர்புத்ன்யாய நமஹ என்றும் அஹயே புத்ன்யாய நமஹ என்றும் இரு விதமாகவும் வழங்கப்படுவதாக தெரிகிறது.
#81: ahirbudhnyāya namaḥ :
அஹிர்பு₃த்₄ன்யாய நம:

"
மூலாதார மூர்த்தியே போற்றி" என்பது பொருந்தக்கூடும்."காராகி நின்ற முகிலே போற்றி" என்ற திருமுறை வாக்கும் பொருந்தக்கூடும். (அப்பர் தேவாரம் - 6.55.5). வேறு திருமுறைப்பாடல்களிலும் ஈசனை முகிலாகக் கூறுவதைக் காணலாம்.

10.4.2.43 -
திருமந்திரம் - நான்காம் தந்திரம் - 2. திருவம்பலச் சக்கரம் - #43நாவியின் கீழது நல்ல எழுத்தொன்று
பாவிகள் அத்தின் பயனறி வாரில்லை
ஓவிய ராலும் அறியஒண் ணாதது
தேவியும் தானும் திகழ்ந்திருந் தானே.உரையில்: "உந்தியின் கீழ் மூலாதாரத்தில் சிறப்புடைய ஓர் எழுத்து உள்ளது. அதன்மேலேதான் சிவன் தானும், தன் துணைவி யுமாக எழுந்தருளியிருக்கின்றான். ......"

6.94.4
காற்றாகிக் கார்முகிலாய்க் காலம் மூன்றாய்க்
..
கனவாகி நனவாகிக் கங்கு லாகிக்
கூற்றாகிக் கூற்றுதைத்த கொல்களிறு மாகிக்
..
குரைகடலாய்க் குரைகடற்கோர் கோமா னுமாய்
நீற்றானாய் நீறேற்ற மேனி யாகி
..
நீள்விசும்பாய் நீள்விசும்பி னுச்சி யாகி
ஏற்றானா யேறூர்ந்த செல்வ னாகி
..
யெழுஞ்சுடராய் எம்மடிகள் நின்ற வாறே.
अहि a. Killing; pervaded, pervading. -हिः [आहन्ति, -हन्-इण् स च डित् आङो ह्रस्वश्च Uṇ.4.137] 1 A serpent, snake; अहयः सविषाः सर्वे निर्विषा डुण्डुमाः स्मृताः Ks. 14.84. -2 The sun. -3 The planet Rāhu. -4 A traveller -5 The demon Vṛitra; रोमहर्षणमत्युग्रं शक्रस्य त्वहिना यथा (युद्धमासीत्) Mb.11.23.12. -6 A wicked man. -7 A cheat, rogue. -8 The Āśleṣā Nakṣatra. -9 Water. -1 Earth. -11 A milch cow. -12 Lead. -13 The navel. -14 A cloud. अहिर्वृत्रासुरे सर्पे... च दुर्जने । Nm. ..... .....15. -बु (वु) ध्नः, -ब्रध्नः, -अहिर्बुध्नः, -ध्न्यः 1 one of the Rudras. -2 Śiva. -3 Uttarābhādrapadā Nakṣatra. -4 a name of a Muhūrta. ˚देवता the twenty-sixth lunar mansion.

बुध्नः 1 The bottom of a vessel; अर्वाग् बिलश्चमस ऊर्ध्व- बुध्नस्तस्मिन् यशो निहितं बिश्वरूपम् Bṛi. Up.2.2.3. -2 The foot of a tree; बुध्नानधुरवाग्भावभिया शुण्डाग्रमण्डलैः Śiva B. -3 The lowest part. -4 An epithet of Śiva. (Also बुध्न्य in the last sense). -5 The body. -6Ved. The sky. -7 The stock of a musket (Mar. दस्ता); सुकाष्ठोपाङ्गबुध्नं च Śukra.4.128.

#82: digambarāya namaḥ :
நக்கா போற்றி
1,67,1
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளை யெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியி னுரிதோலார்
நாதாவெனவு நக்காவெனவு நம்பா வெனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.குறிப்புரையில்: நாதா நக்கா எனத் தோத்திரிப்பவர்களின் பாவந் தீர்ப்பவர் பழனநகரார் என்கின்றது. நக்கன் - நிர்வாணி.
#83: aṣṭamūrtaye namaḥ :
எட்டுருவ மூர்த்தியே போற்றி / அட்டமூர்த்தியே போற்றி
9.4.2
எட்டுரு விரவி என்னை
..
ஆண்டவன் ஈண்டு சோதி
விட்டிலங் கலங்கல் தில்லை
..
வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
..
தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் வாய்
..
பேசாதப் பேய்க ளோடே.
உரையில்: "அட்ட மூர்த்தியாய் என்னை ஆட்கொண்டவன் ......"
#84: anekātmane namaḥ :
ல்லா உயிரும் ஆனாய் போற்றி
8.37.8 -
திருவாசகம் - பிடித்த பத்து
அத்தனே அண்டர் அண்டமாய் நின்ற
..
ஆதியே யாதும்ஈ றில்லாச்
சித்தனே பத்தர் சிக்கெனப் பிடித்த
..
செல்வமே சிவபெரு மானே
பித்தனே எல்லா உயிருமாய்த் தழைத்துப்
..
பிழைத்தவை அல்லையாய் நிற்கும்
எத்தனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
..
எங்கெழுந் தருளுவ தினியே.
#85: sāttvikāya namaḥ :
 ஸ்ரீ அனந்த்:
சத்வ குணம் உடையவன் சாத்விகன். ச/ஸத்வம், ச/ஸத்யம் இரண்டும் ஸத்=உண்மை, மெய் என்னும் அடிச்சொல்லை ஒட்டியதெனினும்,   ஸத்யம் நிர்க்குணப் ப்ரம்மத்தின் தன்மையாகவும், ஸத்வம் (மாயையின் விளைவால் சிருஷ்டிக்கப்பட்ட) ஜீவர்களின் குணங்களில் தலையான குணமாகவும் குறிக்கப்படும். ஸத்வம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல் இருப்பதாகத் தெரியவில்லை எனினும்  நற்குணம் என்று சொல்லலாம். தேவாரத்தில் இதைச் சாத்துவிகம் என்று தமிழாக்கம் செய்து பயன்படுத்தியுள்ளதைக் காணலாம்:
ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள
   அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
   திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
   வெல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து
   மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.


#86: śuddhavigrahāya namaḥ :
தூயவனே போற்றி?
#87: śāśvatāya namaḥ :
ஈறிலாதாய் போற்றி
5.100.3
நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
ஏறு கங்கை மணலெண்ணில் இந்திரர்
ஈறி லாதவன் ஈசன் ஒருவனே.
(
ஈறு இலாதவன் - அழிவு இல்லாதவன்);
#88: khaṇḍaparaśave namaḥ :

This name needs to be reasearched further. Here is one episode where Siva breaks another's battle-axe. Need to cross-check accuracy of the details stated.

As seen at this url: http://www.tamizhkavyathedal.com/letterSearch/?letter=%E0%AE%A8
நர (Nara) : - தர்மதேவன், ப்ரம்மாவின் மார்பிலிருந்து வந்தவன். இவன் தக்ஷனின், பத்து மகள்களை மணந்தான். அவர்களுக்கு பிறந்தவர்களில் நர, நாராயண ஆவர். இவர்கள் பெரிய முனிவர்கள். இமாலயத்தில் உள்ள பத்ரிகாஸ்ரமத்தில் வாழ்ந்தனர். (தேவி பாக—4).
1.
ஊர்வசி இவர்களின் மகள்
(ஊர்வசி--பார்க்கவும்);. பாற்கடல் கடையும் போது இவர்கள் தேவர்களுடன், சேர்ந்து போரிட்டதால் இந்திரன் இவர்களை அம்ருதத்திற்கு காப்பாளனாக்கினான்.
2.
தக்ஷனை கொன்ற சிவனின் சூலம் தவறி
, இவர்களின் மார்பின் மேல் விழ. "ஹூம்" என்ற சப்தத்தில் அது வேளியே வந்து சிவனை அடைந்தது. வந்த சூட்டில், சிவனின் முடி பொசுங்க,
( இதனால் 'முஞ்சகேசன்' என்ற பெயர்) சிவன் இதனால் கோபமுற, போர் மூண்டது. .இவர்கள் ஒரு புல்லால் திருப்பி அடிக்க, அது கோடாலியாக மாறி சிவனை நோக்கி வர, அவர் அதை இரண்டாகப் பிளந்தார். இதனால் சிவனுக்கு "கண்டபரசு" என்ற பெயர் உண்டு.
#89: ajāya namaḥ :
பிறவாய் போற்றி


6.55.9
மூவாய்
பிறவாய் இறவாய் போற்றி
..
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி

தேவாதி தேவர்தொழுந் தேவே போற்றி

..
சென்றேறி யெங்கும் பரந்தாய் போற்றி

ஆவா அடியேனுக் கெல்லாம் போற்றி

..
அல்லல் நலிய அலந்தேன் போற்றி

காவாய் கனகத் திரளே போற்றி

..
கயிலை மலையானே போற்றி போற்றி
.
7.28.9
அயனோ டன்றரியும் மடி யும்முடி காண்பரிய

பயனே யெம்பரனே பர மாய பரஞ்சுடரே

கயமா ருஞ்சடையாய் கட வூர்த்திரு வீரட்டத்துள்

அயனே என்னமுதே எனக் கார்துணை நீயலதே.

(
கடவூர்த்திரு ரட்டத்துள் அயனே
- "திருக்கடவூரின்கண் உள்ள, திருவீரட்டானம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பிறப்பில்லாதவனே";குறிப்புரையில்: "... 'அயன்' இரண்டனுள் முன்னது முகமனாய் வந்த காரண இடுகுறியாயும், பின்னது உண்மையான் வந்த காரணக் குறியாயும் நின்றன .....")
#90: pāśavimocakāya namaḥ :
வினைப்பற்று அறுப்பாய் போற்றி / பந்தம் அறுப்பாய் போற்றி
1.120.1பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் தோலொடு நூல்துதை மார்பினில்

பிணிந்தவ னரவொடு பேரெழி லாமைகொண்

டணிந்தவன் வளநக ரந்தணை யாறே
.
12.29.58 - பெரிய புராணம் - ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணம்
வந்து நம்பி தம்மைஎதிர்

..
கொண்டு புக்கார் மற்றவருஞ்

சிந்தை மலர்ந்து திருவீழி

..
மிழலை யிறைஞ்சிச் சேண்விசும்பின்

முந்தை யிழிந்த மொய்யொளிசேர்

..
கோயில் தன்னை முன்வணங்கிப்

பந்த மறுக்குந் தம்பெருமான்
..
பாதம் பரவிப் பணிகின்றார்
.
(
பந்தம் அறுக்கும் தம்பெருமான்
- பாசக்கட்டினை அறுத்திடும் பெருமான்)
 

No comments: