Pages

Thursday, July 18, 2013

சிவாஷ்டோத்திர சதம் - 2



11 ஓம்ʼ ஶூலபாணயே நம: ॐ शूलपाणये नमः  oṁ śūlapāṇaye namaḥ சூலமேந்திய கையனுக்கு நமஸ்காரம்
12 ஓம்ʼ க²ட்வாங்கி³நே நம: ॐ खट्वाङ्गिने नमः oṁ khaṭvāṅgine namaḥ கட்வாங்கமெனும் தடியை உடையவனுக்கு நமஸ்காரம்
13 ஓம்ʼ விஷ்ணுவல்லபா⁴ய நம: ॐ विष्णुवल्लभाय नमः oṁ viṣṇuvallabhāya namaḥ விஷ்ணுவுக்கு ப்ரியமானவனுக்கு நமஸ்காரம்
14 ஓம்ʼ ஶிபிவிஷ்டாய நம: ॐ शिपिविष्टाय नमः oṁ śipiviṣṭāya namaḥ ஒளி கிரணங்களால் ப்ரகாசிப்பவருக்கு நமஸ்காரம்.
15 ஓம் அம்பி³காநாதா²ய நம: ॐ अम्बिकानाथाय नमः om ambikānāthāya namaḥ அம்பிகாவின் நாதனுக்கு நமஸ்காரம்.
16 ஓம்ʼ ஶ்ரீகண்டா²ய நம: ॐ श्रीकण्ठाय नमः oṁ śrīkaṇṭhāya namaḥ விஷத்தை கழுத்தில் தாங்கியவனுக்கு , அழகிய கழுத்துடையவனுக்கு நமஸ்காரம்.
17 ஓம்ʼ ப⁴க்தவத்ஸலாய நம: ॐ भक्तवत्सलाय नमः oṁ bhaktavatsalāya namaḥ பக்தர்களிடம் தாய் பசு போல அன்பு செலுத்துபவனுக்கு
18 ஓம்ʼ ப⁴வாய நம: ॐ भवाय नमः oṁ bhavāya namaḥ உலகம் யாரிடமிருந்து தோன்றியதோ அவனுக்கு நமஸ்காரம்.
19 ஓம்ʼ ஶர்வாய நம: ॐ शर्वाय नमः oṁ śarvāya namaḥ பாபங்களை நாசம் செய்பவனுக்கு நமஸ்காரம்.
20 ஓம்ʼ த்ரிலோகேஶாய நம: ॐ त्रिलोकेशाय नमः oṁ trilokeśāya namaḥ மூன்று உலகங்களுக்கும் ஈசனுக்கு நமஸ்காரம்.

12. khaTvAGga  = a club or staff with a skull at the top
 
மட்டு வார்குழ லாளொடு மால்விடை
இட்ட மாவுகந் தேறு மிறைவனார்
கட்டு வாங்கங் கனன்மழு மான்தனோ
டட்ட மாம்புய மாகுமா ரூரரே.


குறிப்புரையில் "கட்டுவாங்கம் - கையில் அணியும் ஓர் ஆயுதம்." என்றுமட்டுமே சொல்கின்றனர்!

14. ஶிபிவிஷ்டாய = ஶிபி ray of light ருத்ரம் புத்தகத்தில் அண்ணா இதற்கு உசாத்துணை கொடுத்து உள்ளார். விஷ்ணு மூர்த்தி தா4ரி சிபிவிஷ்ட: விஷ்ணு; சிபிவிஷ்டஇது ஸ்ருதி.



எளியாய் அரியாய் நிலம்நீ ரொடுதீ 
வளிகா யமென வெளிமன் னியதூ 
ஒளியாய் உனையே தொழுதுன் னுமவர்க்
களியாய் கழிப்பா லையமர்ந் தவனே.

நிலம், நீர், தீ, காற்று ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களில் வெளிப்படையாக விளங்கும் தூய ஒளியோனே.

16. श्रीकण्ठ beautiful-throated
 
பெரிய புராணம் - திருநாளைப்போவார் புராணம் - #26
இவ்வண்ணம் இரவுபகல்  வலஞ்செய்தங் கெய்தரிய
அவ்வண்ணம் நினைந்தழிந்த  அடித்தொண்ட ரயர்வெய்தி
மைவண்ணத் திருமிடற்றார்  மன்றில்நடங் கும்பிடுவ
தெவ்வண்ணம் எனநினைந்தே  ஏசறவி னொடுந்துயில்வார். 


17: bhaktavatsalāya namaḥ

அன்பருக்கு அன்பனே

திருவாசகம் - சிவபுராணம்:
.....
அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே

18: bhavāya namaḥ
திருவாசகம் - போற்றித்திருவகவல்:
......
அத்தா போற்றி ஐயா போற்றி 
நித்தா போற்ற நிமலா போற்றி 175
பத்தா போற்றி பவனே போற்றி
பெரியாய் போற்றி பிரானே போற்றி
அரியாய் போற்றி அமலா போற்றி
மறையோர் கோல நெறியே போற்றி 
முறையோ தரியேன் முதல்வா போற்றி 180

சிவனாகித் திசைமுகனாய்த் திருமா லாகிச்
    செழுஞ்சுடராய்த் தீயாகி நீரு மாகிப்
புவனாகிப் புவனங்க ளனைத்து மாகிப்
    பொன்னாகி மணியாகி முத்து மாகிப்
பவனாகிப் பவனங்க ளனைத்து மாகிப்
    பசுவேறித் திரிவானோர் பவனாய் நின்ற
தவனாய தலையாலங் காடன் தன்னைச்
    சாராதே சாலநாள் போக்கி னேனே.


குறிப்புரையில்: ".... பவன் - வேண்டும் இடங்களில் வேண்டியவாறே தோன்றுபவன். திரிவான் ஓர் பவன் - திரிபவனாகிய ஒரு கோலத்தை யுடையவன்.  ....."
 

19. ஶர்வாய = இது ஸர்வாய அல்ல, அதனால் எல்லாமுமாக இருப்பவன் என பொருள் கொள்ளலாகாது. "ச்ருணாதி ஹினஸ்தி பாபம் இதி ஶர்வ" என்பது சாயணாசாரியார் பாஷ்யம்
 
  20: trilokeśāya namaḥ 


மூத்தானை மூவுல குக்கொரு மூர்த்தியாய்க்
காத்தானைக் கனிந்தவ ரைக்கலந் தாளாக
ஆர்த்தானை யழகமர் வெண்ணியம் மான்றன்னை
ஏத்தாதா ரென்செய்வா ரேழையப் பேய்களே.


".... மூவுலகங்கட்கும் தானேதலைவன் ஆனவன்.  ...

No comments: