Pages

Saturday, April 13, 2013

கோளாறான எண்ணங்கள் - குழந்தைகளுக்கான காயத்ரி.

 
குழந்தைகளுக்கான காயத்ரி.
புத்தி.... இந்த புத்தி என்கிறது எல்லாருக்கும் இருக்கிறது. சிலருக்கு மிகவும் கூர்மையாக இருக்கிறது. சிலருக்கு மழுங்கி இருக்கிறது. ஆனாலும் எல்லோருக்குமே புத்தி இருக்கிறது. புத்தி கெட்டு போச்சு, புத்தி கெட்டவனே, ஏண்டா உனக்கு இந்த கெட்ட புத்தி என்கிற ரீதியில் பலதும் கேள்விப்பட்டிருப்போம். இந்த கெட்ட புத்தி என்கிறது என்ன?
முதலில புத்தி என்கிறது என்ன?
மனசு புத்தி இரண்டுமே ஒண்ணுதான்... ஒரு சின்ன வித்தியாசம் தவிர.
மனசு இங்கும் அங்கும் அலை பாய்வது. இது சரியா, தப்பா? இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா? இந்த ரீதியில நிக்காம இங்கும் அங்கும் போய்கொண்டு இருக்கும். புத்தி அப்படி இல்லை. அது ஸ்திரமானது. நிச்சயமானது. இதான் சரி, இதான் செய்யப்போகிறேன் என்று சலனமில்லாமல் இருப்பது.

புத்தி கெட்டுப்போச்சு என்கிறதை இரண்டு விதமா பார்க்கலாம். ஏதேனும் ஒன்று தொலைந்து போய்விட்டால் அது கெட்டுப்போச்சு என்கிறோம். புத்தி செயலுக்கு வராமல் ஒரு காரியம் செய்ததாக தோன்றினால், உனக்கு புத்தி கெட்டுப்போச்சா என்று கேட்கிறோம். அதுக்கு புத்தி தொலைந்து போச்சா என்றே பொருள்.
இன்னொரு பக்கம் புத்தி நல்லது செய்யுமானால் அது நல்ல புத்தி கெட்டது செய்யுமானால் அது கெட்ட புத்தி என்று சொல்லலாம். இதில் எது நல்லது எது கெட்டது என்பது விவாதப்பொருளாகி விடுகிறது. இருந்தாலும் பொதுவாக நல்லது செய்வது, கெட்டது செய்வது என்பதில் பெரிய மாற்றுக்கருத்து இராது. நமக்கும் மத்தவங்களுக்கும் நல்லது செய்ய தூண்டுகிறதுதான் நல்ல புத்தின்னு வெச்சுக்கலாம்.

காய்த்ரி என்ன சொல்கிறது? “... எங்கள் புத்தியை தூண்டுவாராக!” அதுக்கு முன்னால சொல்கிறது சூரியனைக்குறித்தா, ஸவிதா என்கிற தேவதையை குறித்தா, பரப்பிரம்மத்தை குறித்தா என்றெல்லாம் இப்ப யோசிக்க வேண்டாம். இறையை நம் புத்தியை நல்ல வழியில் செலுத்த வேண்டிக்கொள்கிறோம். இபப்டியா அப்படியா என்று மன அளவில் அல்லாடாமல், நல்ல வழியில் புத்தி போனாலே நம் பல பிரச்சினையான விஷயங்களுக்கும் தீர்வை நாம் கண்டு பிடித்துவிடலாம்.

தெரிந்தோ தெரியாமலோ பல காலமாக இதையே நாம் குழந்தைகளுக்கு உபதேசம் செய்து வருகிறோம். இன்னும் செய்கிறோமோ என்பது கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது. போகட்டும். யோசித்துப்பார்த்தால் இதுவே காயத்ரியின் சாரமாகவே இருக்கிறது. காயத்ரியே வேதங்களின் சாரம். இதுவோ காயத்ரியின் சாரம், நமக்கு புரியும் அளவில்! அதனால் நாமும் நம் குழந்தைகளுக்கு இதையே பயிற்றுவிக்கலாம் என வேண்டிக்கொள்கிறேன்.

அது என்ன என்று கேட்கிறீர்களா?



உம்மாச்சி, நல்ல புத்தி கொடு.”

4 comments:

Geetha Sambasivam said...

உம்மாச்சி, நல்ல புத்தி கொடுத்துடு. அலை பாயாத மனதைக் கொடுத்துடு. ஸ்திரமான எண்ணங்களைக் கொடு.

திண்டுக்கல் தனபாலன் said...

'கொடு' என்று சொல்வதில்லை... 'வளர்த்துக்கொள்' என்று சொல்வதுண்டு...(அவர்கள் விரும்பினால்...!)

ஸ்ரீராம். said...

புத்திதான் மனசு. சரி. படிக்கும்போதே தோன்றியது. வித்தியாசம் என்னவென்று படித்ததும்தான் ஒத்துக் கொள்ளத் தோன்றியது. அது ஏன் எனக்குத் தானாகத் தோன்றவில்லை?!! :))

உம்மாச்சி எனக்கு இன்னும் 'நல்ல புத்தி'யைக் கொடுக்கவில்லை போலும்!

:)

திவாண்ணா said...

கேளுங்கள் கொடுக்கப்படும்!