Pages

Tuesday, March 26, 2013

ப்ரக்ருதியின் விளையாட்டு

 
நொச்சூர் வெங்கட்ராமன் உபன்யாசத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார். ஒத்தர் ஒண்ணும் வேண்டாம் சன்னியாசி போறேன்னு போகிறவருக்கு ஒத்தர் வந்து இங்க 5 ஏக்கர் நிலம் தரேன்; ஆஸ்ரமம் கட்டித்தரேன்; இங்கேயே இரு ன்னு சொல்லுவார். இன்னொருத்தரோ தனக்கு வீடு கட்டணும்ன்னு முயற்சி எடுத்து கஷ்டப்பட்டு பணம் சேர்த்து லோன் போட்டு ன்னு சிரமப்படுவாராம்! கடைசில ரிடையர் ஆற காலத்துக்கு வீடு அமையுமாம். ப்ரக்ருதி நாம 'பாலன்ஸ்ட்' ஆ இருக்கணும்ன்னு விரும்பறதாம். அதனால பல சமயம் நாம் எடுக்கற முயற்சிகளுக்கு எதிராவே வேலையை செய்யுமாம்!

பஸ் ஸ்டாப்பில் நிற்கிறபோது நமக்கு வேண்டிய பஸ் தவிர மீதி எல்லாம் வருவதும் நமக்கு வேண்டிய பஸ் எதிர் திசையில் போவதும் பலரும் அனுபவித்து இருப்பார்கள்! நான் தில்லியில் படித்துக்கொண்டு இருந்த போது என் அண்ணனின் மாமனார் வீடு (அப்போது) கொஞ்சம் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. நல்ல தென் இந்திய சாப்பாடு கிடைக்காம காஞ்சு கிடந்தப்ப அப்பப்ப அங்கே போகிறதுண்டு. ஒதுக்குப்புறம் என்பதால சரியான வாகன வசதி கிடையாது. அப்பல்லாம் பொதுவாகவே எட்டு மணிக்கெல்லாம் ஊர் அடங்க ஆரம்பிச்சு பஸ் எல்லாம் இல்லாம போயிடும். இரவு சாப்பாடு முடிந்து பஸ் ஸ்டாண்டில் வந்து நிற்பேன். பஸ் வரவே வராது. இன்னும் 3 ஸ்டாப் தூரம் நடந்தால் இன்னர் ரிங் ரோட். அங்கிருந்து வேற சில பஸ் கிடைக்கும். பஸ்ஸுக்கு காத்திருந்து காத்திருந்து, சரி ஒழியறது விடு. இன்னர் ரிங் ரோடுக்கு போயிடலாம் ன்னு நடக்க ஆரம்பிச்சா கொஞ்ச நேரத்திலேயே அந்த பஸ் நம்ம தாண்டி போகும்!

சிலர் ஏகாந்தமாக இருக்க வேண்டும் ன்னு ஆசை படுவாங்க. உறவினர், அதிதின்னு பலரும் வந்து போயிட்டு இருப்பாங்க! சிலர் பேசறத்துக்கு ஆள் யாரும் அகப்படாதான்னு பாத்துகிட்டு இருப்பாங்க, வரேன்னு சொன்னவங்க கூட வர மாட்டாங்க!

நான் இந்த வயசுக்கு அப்புறம் ரிடையர் ஆகிவிடப்போறேன் என்கிறவங்களுக்கு எக்ஸ்டென்ஷன் கிடைக்கும். ஆபீசில் விட மாட்டார்கள். எக்ஸ்டென்ஷன் வேணும்ன்னு நினைக்கறவங்களுக்கு அது கிடைக்காது. இப்படி பலதும் கேள்விப்பட்டு இருப்போம், பார்த்திருப்போம்.

மரணம். பலரும் பயப்படுகிறது விஷயம்! ஏனோ கோளாறான ஆசாமியாக இருப்பதால் பயம் ஏன் என்று புரிய மாட்டேன் என்கிறது! இருக்கிற வரை மரணமில்லை; அதனால் பயம் தேவையில்லை. போன் பிறகு மரணத்தைப்பத்தி பயப்பட நாம் இருக்க மாட்டோம். எப்படி பார்த்தாலும் லாஜிக் உதைக்கிறது. போகட்டும்!

சிலர் உடல் உபாதையால் "பகவானே, என்னை கொண்டு போக மாட்டாயா" என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் காலன் அப்படி பேர் வைத்துக்கொண்டு இருந்தாலும் கால் பண்ணுவதில்லை! சிலர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களை திடீரென்று கொண்டு போய் விடுகிறான்.

ஆக மொத்தத்தில நம்ம கையில் பல விஷயங்கள் இல்லை. ப்ளான் பண்ணறதுல ப்ரயோசனம் இல்லைன்னு சொல்ல வரலை. ப்ளான் பண்ணி அப்படி நடக்காம போச்சுன்னா பகவான் நம்ம பாலன்ஸ் பண்ணிகிட்டு இருக்கான்னு புரிஞ்சு கொண்டு கர்ம யோகத்தை நினைவுக்கு கொண்டு வந்து மனசு அல்லாடாம இருப்போம்.

13 comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம், நல்லா இருக்கு. யாரானும் கூப்பிட்டுப் பேசுவாங்கனு காத்துட்டு இருக்கிறச்சே யாரும் பேச மாட்டாங்க; அதே போல் நாம இப்போப் பேச வேண்டாம் வேலை இருக்குனு ஒதுங்கினா விட மாட்டாங்க. இதையும் சேர்த்திருக்கலாமோ? :))))))))

திவாண்ணா said...

லிஸ்ட் போட்டா ஆயிரத்துக்கு மேலே தேறும்! :-)))

Kavinaya said...

அட ஆமால்ல! நல்ல விளையாட்டு :)

சிறியவன் said...

ப்ளாக்ல எழுத உட்கார்ந்தா ஒண்ணுமே தோணாது, சும்மா இருக்கும் போது என்னென்னமோ எழுத பாயின்ட்சா வந்து விழும், இதையும் சேர்த்துக்கோங்க

சிறியவன் said...


ப்ளாக்ல எழுத உட்கார்ந்தா ஒண்ணுமே தோணாது, சும்மா இருக்கும் போது என்னென்னமோ எழுத பாயின்ட்சா வந்து விழும், இதையும் சேர்த்துக்கோங்க

திவாண்ணா said...

:-))

ஸ்ரீராம். said...

ஏதோ ஒரு இனம் தெரியாத வகையில் ஆறுதலைக் கொடுத்தது பதிவு.

திவாண்ணா said...

நல்வரவு ஸ்ரீராம்.
எல்லாம் நம்ம கையில் இல்லை என்கிற உணர்ச்சியா இருக்கும்! இது புரிஞ்சா நான் செய்யாம விட்டுட்டேன் என்கிற குற்ற உணர்ச்சி இராது.

ஸ்ரீராம். said...

அப்படி நினைப்பது ஒரு வகையில் தப்பிக்கும் மனப்பான்மை இல்லையா?

Geetha Sambasivam said...

இப்போத் தான் இன்னொரு பதிவில் கடவுளா தப்புப் பண்ண வைக்கிறார்னு கேட்டுட்டு வந்தேன். எல்லாம் இறைவன் செயல்னு இருக்கிறதாலே தப்புப் பண்ண வைக்கிறவர் கூடக் கடவுள்னு ஒரு கருத்து உருவாகிட்டு இருக்கே!

நம்ம செயல்களுக்கு நல்லதோ, கெட்டதோ நாமளும் பொறுப்புனு நினைக்கிறது தான் சரினு தோணுது! ஏன்னா நமக்குப் பகுத்துப் பார்க்கும் அறிவைக் கொடுத்திருக்கான் இறைவன். ஆக நாம் அது தப்புனு தெரிஞ்சே தானே தப்புப் பண்றோம்.

திவாண்ணா said...

ஸ்ரீராம், கீதா அக்கா, அது எஸ்கேபிஸம்க்கு கொண்டு போகும் சான்ஸ் நிறையவே இருக்கு. சரண்டர் க்கு ஸ்பெல்லிங் கூட தெரியாதவங்க நான் சரண்டர் பண்ணிட்டேன், இனி நான் பொறுப்பு இல்லைன்னு சொல்கிறாப்போலே!
எல்லாம் இறைவன் செயல் என்கிறது நிஜமா உள்ளேந்து வந்தா தப்பு செய்ய முடியாமல் அவன் பாத்துக்குவான். சும்ம உதட்டளவுல இருந்தா?
அப்படிப்பட்ட ஆசாமி தப்பு செஞ்சதுக்கு தண்டனை கிடைக்கும் போது இதுவும் இறைவன் செயல்ன்னு ஏத்துப்பாரா?

Unknown said...

"மரணம். பலரும் பயப்படுகிறது விஷயம்! ஏனோ கோளாறான ஆசாமியாக இருப்பதால் பயம் ஏன் என்று புரிய மாட்டேன் என்கிறது! இருக்கிற வரை மரணமில்லை; அதனால் பயம் தேவையில்லை. போன் பிறகு மரணத்தைப்பத்தி பயப்பட நாம் இருக்க மாட்டோம். எப்படி பார்த்தாலும் லாஜிக் உதைக்கிறது. போகட்டும்!" Arputham sir:)
Recently started reading your blog, not able to stop reading. Will try to put comment in tamil next time. ~Chandrasekar

திவாண்ணா said...

சந்திர சேகர், நல்வரவு. பதிவுகள் ஏதேனும் பயன் கொடுத்தால் இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேணும்!