Pages

Monday, March 4, 2013

சக்யம் - 2

திருமணத்திலேயே எவ்வளவு கருத்து பொதிந்த ரிசுவல்ஸ்! தாலி கட்டுவதால் திருமணம் முடிவதில்லை. கை பிடிப்பதால் இல்லை. சட்டப்படியே இந்து திருமணம் ஆகிவிட்டது என்று சொல்வது சப்தபதி என்னும் ரிசுவல் முடிந்த பிறகுதான். இந்த சப்தபதியின் போது சொல்லும் மந்திரங்களின் பொருளே சக்யம் பற்றியதுதான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கவும் இன்ன இன்னது வேண்டும் என்று வேண்டுதல் இருக்கிறது. பின் இப்படி ஏழடி ஒன்றாய் நடந்த நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம்! .... என்று இன்ப துன்பங்களில் பங்கெடுத்துக்கொள்வதாய் உறுதி சொல்லப்படுகிறது. எல்லாம் எனக்கு பிடித்த படி நடக்கும் வரை ஒத்துழைப்பேன். எனக்குப்பிடிக்கைவில்லை, கஷ்டகாலம் என்று எனக்கு தோன்றிவிட்டால் டிவோர்ஸ் வாங்கிக்கொண்டு ஓடிவிடுவேன் என்பது என்ன நாகரீகம்?

இந்த காரணங்களாலேயே கணவன் மனைவி இடையே "இன்கம்பாடிபிலிடி" என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. மாமியார் - நாட்டுபெண் சண்டை, எடுத்தெறிந்து பேசுவது என்று ஒன்றும் அதிக அளவில் இல்லாமல் இருந்தது. குழந்தையிலிருந்து அந்த மாமியார்தானே பெண்ணை வளர்க்கிறார்! கண்டிப்புடன் வளர்ப்பதால் அப்போதைக்கு கொஞ்சம் வருத்தம் இருந்தாலும் பின்னால் அது நன்மையே பயத்தது.


இப்போது நேர் மாறாக எல்லாமே இருக்கிறது. கலிகாலத்தில் கலிகாலத்தில் ஆட்டுக்கல் நிற்க குழவி சுற்றுவதாக  போன மாதிரி, வயதான காலத்திலேயே திருமணம் பற்றி யோசிக்கிறார்கள். பல பெற்றோர்களுக்கு 'எவ்வளவு செலவு செய்து படிக்க வைத்தோம்! கொஞ்சம் சம்பாதித்து கொடுத்தால் என்ன' என்று கூட தோன்றுகிறது. பெரிய படிப்பு படித்து, வேலைக்குப்போய் நாலு காசும் கையில் பார்த்துவிட்ட பெண்ணுக்கு ஈகோ நிறையவே தலை தூக்கி 'இவன் வேண்டாம் அவன் வேண்டாம்' என்று தட்டிக்கழிப்பதிலேயே காலம் கடந்து கொண்டிருக்கிறது. போதாக்குறைக்கு, "பாவம் நீ, எனக்காக இவ்வளவு சிரமப்படுகிறாய்; ஐம் சாரி" ன்னு பீலிங்க்ஸ் வேற விடுகிறார்கள். முதிர் கன்னி ஆகும் காலத்தில் பஸ் மீண்டும் வருகிறது. என் குடும்ப/ நண்பர்கள் வட்டாரத்திலேயே எனக்குத்தெரிந்து மூன்று நான்கு பெண்கள் அவர்களது பெற்றோர்களை இன்னைய தேதிக்கு அழவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!


இதற்காக பால்ய விவாஹத்தை நான் ரெகமண்ட் செய்கிறேன் என்றில்லை. அரசு அனுமதிக்கும் வயது வந்தவுடனே திருமணத்தை முடிப்பதில் அர்த்தம் இருக்கிறது. சில கம்யூனிடிகள் பால்ய விவாஹம் செய்வது எங்கள் உரிமை என்று சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.


விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வதற்கு மேற்கோள் காட்டக்கூடிய கதை சத்யவான் சாவித்ரி கதை. கதை பலருக்கும் தெரிந்ததுதான்; அதனால் அதை இங்கே சொல்லப்போவதில்லை. சத்யவானின் உயிரை பரித்துக்கொண்டு செல்லும் யமனை சாவித்ரி பின் தொடர்கிறாள். “ஏன் என் பின்னாடி வருகிறாய்?” என்று யமன் கேட்கிறான். இப்படி திரும்பிப்பார்த்து பேச ஆரம்பித்ததுதான் அவன் செய்த பிழை! இதையும் அதையும் பேசிக்கொண்டு கொஞ்ச தூரம் ஒன்றாக நடந்துவிட்டார்கள். பின் யமன் சொல்கிறான், “நீ என்ன சொன்னாலும் பிரயோசனமே இல்லை. இந்த உயிரை திருப்பித்தருவது என்பது நடக்க முடியாத காரியம்.”
“சரிதான். ஆனால் நாம் ஏழடி ஒன்றாக நடந்துவிட்டோமே! இப்போது நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம். ஒரு ஆபத்தில் உதவாத நண்பன் என்ன நண்பன்?”
"எடுத்த உயிரை திருப்பிக் கொடுக்க வாய்ப்பில்லை. அதனால், ஏதாவது வரம் கேள் தருகிறேன்" என்றான். சாவித்ரி  ‘என் வம்சம் தழைக்க வேண்டும்’ என்று வரம் கேட்டாள். எமன் சற்றும் யோசிக்காமல் "கேட்டதை தந்தோம். உன் வம்சம் வாழையடி வாழையாக தழைக்கும்" என்று வரம் தந்து விட்டான். "கருணைக்கு மிக்க நன்றி. வாக்கு பலிக்க வேண்டும். என் வம்சம் தழைக்க என் கணவனை என்னுடன் அனுப்ப வேண்டும்" என்று வேண்டினாள் சாவித்ரி!

இந்த ஏழடி ஒன்றாக நடந்தால் நண்பன் என்ற கான்சப்ட்தான் திருமணத்திலும் சொல்லப்பட்டது. திருமணத்தின் நோக்கம் பிரஜைகளை உருவாக்குவதாக இருந்தாலும் அதை தர்ம வழியில் உண்மையான நட்புடைய தம்பதிகளின் மூலம் சாதிப்பதையே விரும்புகிறது!
குறிப்பு:
சப்தபதி பற்றி சற்று விரிவான பதிவுகள் இங்கே, இங்கே. இவையே போதுமென்று நினைக்கிறேன்.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சாவித்ரி போலே புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்...

எல் கே said...

yar ketkara :(

Geetha Sambasivam said...

//என் குடும்ப/ நண்பர்கள் வட்டாரத்திலேயே எனக்குத்தெரிந்து மூன்று நான்கு பெண்கள் அவர்களது பெற்றோர்களை இன்னைய தேதிக்கு அழவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்!//

உண்மை தான். எனக்குத் தெரிந்து எங்க குடும்பத்தில் பையர்கள் பெண்களால் மறுதலிக்கப் பட்டு அழுது கொண்டிருக்கிறார்கள்.:((((((((

Geetha Sambasivam said...

grrrrrrrrrrrrrrrr where is my comment? follow ups are coming! :)))))

Thiruppullani Raguveeradayal said...

"இப்போது நேர் மாறாக எல்லாமே இருக்கிறது. கலிகாலத்தில் ஆட்டுக்கல் நிற்க குழவி சுற்றுவதாக போன மாதிரி"
குழவி நிற்க ஆட்டுக்கல் சுற்றுவதாக என்று வாசித்துக்கொள்ள வேண்டுமோ!

Thiruppullani Raguveeradayal said...

"இப்போது நேர் மாறாக எல்லாமே இருக்கிறது. கலிகாலத்தில் ஆட்டுக்கல் நிற்க குழவி சுற்றுவதாக போன மாதிரி"
வார்த்தைகள் மாறியிருக்கிறதோ?

திவாண்ணா said...

தனபாலன் எல்கே, நன்றி!
கீதாக்கா, இப்பதானே கமெண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணேன்?
திரு திரு, திருத்தத்துக்கு நன்றி. நேரமின்மை, கவனக்குறைவு. மாத்தியாச்சு!

சிறியவன் said...

பால்யத்தில் மணம் புரிந்தவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்கள் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. எத்துணை வீடுகளில் உப்பு குறைவு என்று மனைவியை அடித்து இருக்கிறார்கள். எத்தனையோ மனைவிமார்கள் இவனுக்கு ஒரு முடிவு வராதா என வேண்டினார்கள் என்பதையும் கேள்விப் பட்டு இருக்கிறேன். எந்தக் காலமாய் இருந்தாலும் மனமொத்து போவது அவசியம் அவ்வளவே.

திவாண்ணா said...

//பால்யத்தில் மணம் புரிந்தவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டார்கள் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை//

சிறியவன், எங்கே அப்படி சொல்லி இருக்கிறேன் என்று சொல்லுங்கள்!

yrskbalu said...

waste of time. this topic not coming good. write usual spritual topics