Pages

Tuesday, February 26, 2013

என் உலகில்... 3

 
பல நாட்களுக்கு முன் என் ஆன்மீக வழி காட்டி எங்கள் தந்தையுடன் குடும்பத்தார் அமர்ந்து அவரை வாழ்கையில் கற்றுக்கொண்டவற்றை உபதேசம் செய்யுமாறு கேட்கச்சொன்னார்.
அப்படியே செய்தோம்.
தந்தை சொன்னது அவர் வழக்கமாக பேசுவது போல சில சொற்களே.
எப்போதும் என்ன நடக்க வேண்டுமோ அதுவே நடக்கிறது. இதில் சந்தேகமே வேண்டாம். பெரிசாக திட்டமிட்டு எதிர்பார்ப்புகள் அதிகமானால் பிரச்சினைகளே அதிகமாகின்றன. அதனால் அவ்வப்போது என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து கொண்டு போனால் போதும். இப்போது கொஞ்ச நேரம் முன்னால் இந்த குழந்தை அழுதது. அதை சமாதானப்படுத்துவது நம் வேலை. அதை செய்தோம். இதே போல என்ன செய்ய வேண்டுமோ அந்தந்த நேரத்துக்கு செய்து கொண்டு போனால் போதும்.

இப்படி சொன்னது அப்போதைக்கு வெகுவாக பாதிக்கவில்லை. ஆனால் நாளாக ஆக அதன் உண்மை தெரிய வந்தது. இப்போது அது பழக்கத்துக்கே வந்துவிட்டது. பெரிதாக ஒன்றும் திட்டமிடுவதில்லை. அதெற்கென்று திட்டமே இல்லாமல் இருப்பதும் இல்லை. பொதுவாக நம் கடமை என்று ஒன்று இருக்கிறது. அதை ஒட்டி நம் செயல்களை மைத்துக்கொண்டாலே போதும் என்று இப்போது புரிகிறது. மிக விவரமான திட்டமிடல் இல்லை என்பதால் யோசித்த படி நடக்கவில்லை என்றால் இப்படி ஆகிவிட்டதே என்று யோசியாமல் அடுத்து என்ன செய்யலாம் எனபதில் மனம் போய் விடுகிறது. என்னதான் நடந்தாலும் "சரி, நடந்து விட்டது. அடுத்து என்ன செய்யலாம்' என்றே யோசிக்கிறேன். அதனால் மனசு பெருமளவு சாந்தியடைந்தே இருக்கிறது.

5 comments:

geethasmbsvm6 said...

என்னதான் நடக்கும், நடக்கட்டுமே!

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்து என்ன செய்யலாம்...?

அந்த சுறுசுறுப்பு தான் வேண்டும்...

Kavinaya said...

works for me too :)

திவாண்ணா said...

@ கீதாக்கா:
:-))))

திவாண்ணா said...

தனபாலன், எனக்கு அந்த சுறு சுறுப்பெல்லாம் இல்லை. ஆடிட்யூட் மட்டும்தான் இருக்கீறது! :-)))