Pages

Thursday, October 11, 2012

உண்மையான பக்தி


1.பஜனையும் பக்தியும்
ஒரு நாள் மாலைபொழுதில் மஹாஸ்வாமிகள் முன் பொதுவாக நடந்து கொண்டு இருந்த பேச்சுவார்த்தையின் இடையில் இசையுடன் பத்ததியாக நடந்து வரும் பஜனை விஷயமாக பேச்சு எழுந்தது. அப்போது அங்கிருந்த ஒரு பக்தர் தன் கருத்தை வெளியிட்டார்.

பக்தர்: கண்டபடி அலையும் நம் மனதுக்கு இது மாதிரியான பஜனைகள் செய்வது சாந்தியையும் உத்சாஹத்தையும் கொடுக்கிறது. இப்போழுது ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் பஜனை கோஷ்டிகள் அதிகமாவதைப்பார்த்து திருப்தியாக இருக்கிறது.

ஸ்வாமிகள்: எனக்கும் மிகவும் திருப்திதான். ஆனால் இதன் மூலம் நம் வைதிக கர்ம அனுஷ்டானம் குறைந்து கொண்டு வருகிறதாமே? அதெப்படி நடக்கலாம்?

சாமான்ய ஜனங்களுக்கு வைதீக கர்மங்களில் நம்பிக்கை குறைந்திருப்பதை முக்கிய காரணமாக கொண்டுதான் ஈஸ்வரனை திருப்தி செய்ய பஜனையை கையாளுகிறார்கள்.

பஜனையில் ஈடுபடுகிறவர்களில் சிலர் ஸந்த்யாவந்தனம் போன்ற நித்ய கர்மாக்களைக்கூட கவனிப்பதில்லை எனத்தெரிகிறது.

பஜனை செய்து கொண்டு இருக்கும்போது ஸந்த்யாவந்தன காலம் வந்தால் பஜனையை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் ஸந்த்யாவந்தனத்தையே விட்டுவிடலாம் என்றும் சொல்கிறார்கள். பஜனையே மேலான வழிபாடாக இருப்பதால் இன்னொரு கர்மாவான ஸந்த்யாவந்தனம் தேவையில்லை என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.

பொது நியாயத்தில் பெரியதில் சின்னது அடங்கும் என்பது உண்மையே. ஆனால் பகவானை திருப்தி செய்வதில் கர்மாவை விட பஜனைக்கு சக்தி அதிகம் என்று எப்படித்தெரியும்?

நேரடியாக பகவானை ப்ரார்த்திப்பது பஜனை. கர்மா என்றால் வைதீக கிரியைகள் மூலமாகத்தானே ப்ரார்திப்பதாகும்?

பகவானை நாம் யாரும் நேரில் பார்த்தில்லையே?

இல்லை!

சரி, அப்படியானால் அவரிடம் நேரில் கேட்டு தெரிந்து கொள்ள முடியாது; சாத்தியம் இல்லை. அவராகவே வந்து சொல்லவும் இல்லை. ஆகவே அவருக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து கொள்ள வழி இல்லையே?

இருந்தாலும் பகவானின் கட்டளைகளை உள்ளடக்கிய வேதங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம் அல்லவா?

அத்துடன் ஸ்ம்ருதிகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இன்னும் முக்கியமாக பகவத் கீதையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ஈஸ்வரனோடு சாக்ஷாத் நேரடியாகவும், மானஸீகமாகவும் சம்பந்தம் வைத்துக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள் ஏற்படுத்தியவை அல்லவா ஸ்ம்ருதிகள் என்பது?

ஆம்.

அவை என்ன சொல்லுகின்றன?

அதில் பக்தியைப்பற்றி குறைவாக சொல்லி இராது.

உண்மைதான். ஆனால் பக்தி என்றால் என்ன என்ற கேள்விக்கு என்ன பதில்? நான் சொல்கிற கர்மாவா அல்லது நீங்கள் சொல்லும் பஜனையா?

கர்மா எப்படி பக்தியாகும்?

உண்மையில் கர்மாதான் பக்தியாகும் என்றும், கர்மாவுக்கு விரோதமாகவாவது அல்லது கர்மாவை விட்டாவது செய்யும் பஜனை பக்தியே ஆகாது என்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதெப்படி?

9 comments:

sury siva said...

அப்ப கலியுகத்திலே வேற எதுவுமே வேண்டாம்.
ரா மா அப்படின்னு ராம ஜெபம் செய்யுங்கோ அது போதும்
என்கிறார்களே ?

அது என்ன ?

புரியல்லையே

ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா

இன்னிக்கு ஏகாதசி வேற...
கர்மா விட்டுட்டு பக்தி அப்படிங்க்ரதிலே அர்த்தம் இல்லைன்னு
பெரியவா சொல்லியிருக்கா .

சுப்பு ரத்தினம்.

Lalitha Mittal said...

அதெப்படி?
eager to know!

எல் கே said...

maha periyavathane ?


continue

திவாண்ணா said...

//அப்ப கலியுகத்திலே வேற எதுவுமே வேண்டாம்.
ரா மா அப்படின்னு ராம ஜெபம் செய்யுங்கோ அது போதும் என்கிறார்களே ?
//
இப்படி கெடுக்கறாங்கன்னுதான் இதை எழுத நேர்ந்தது!

//கர்மா விட்டுட்டு பக்தி அப்படிங்க்ரதிலே அர்த்தம் இல்லைன்னு பெரியவா சொல்லியிருக்கா .//
உண்மை. உண்மையில் சரியான கர்மாவே பக்தியின் அடையாளம்தான். இன்றைய பதிவை பாருங்க!

திவாண்ணா said...

லலிதாக்கா வெல்கம்!
எல்கே, இவர் பூஜ்ய ஸ்ரீ சங்கரேந்திர பாரதி, சிருங்கேரி பெரியவர்.

எல் கே said...

ok doubta irunthathu athan ketten

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம் இப்போப் பலரும் நித்யகர்மா வேண்டாம்; பக்திங்கற பேரிலே பஜனை பண்ணலாம்னு இருக்காங்க. என்னத்தைச் சொல்றது! :(

ஒரு சின்ன விண்ணப்பம்: மத்தப் பதிவுகள் பத்தித் தெரியலை. இனி தான் பார்க்கணும். ஆனால் ஸ்வாமிகள் சொன்னதும், பக்தர் சொன்னதும் பெயரைப் போட்டு எழுதி இருக்கலாமோனு தோணித்து. எது ஸ்வாமிகள் சொன்னார்னு என்னை மாதிரி ம.ம.வுக்குப் புரிஞ்சுக்க வசதி. :))))

திவாண்ணா said...

கீ அக்கா, எதை யார் சொல்லி இருந்தா என்ன? விஷயத்தை பாருங்க!

Geetha Sambasivam said...

கீ அக்கா, எதை யார் சொல்லி இருந்தா என்ன? விஷயத்தை பாருங்க!//

grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr