Pages

Monday, October 1, 2012

ஸூர்யோபாசனை 1.






பத்தொன்பதாம் நூற்றாண்டு இறுதியில் ச்ருங்கேரி பீடத்தை அலங்கரித்தவர் ஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி ஸ்வாமிகள். அவரது உபதேசங்களை உரையாடல் வடிவில் தொகுத்து வழங்கியவர் ஶ்ரீ ஞானாநந்த பாரதி ஸ்வாமிகள். 1935 இல் “from the master’s lips” என்ற பெயரில் இதன் ஆங்கில மூலம் வெளியாயிற்று. பின்னர் அதுவே வேறு பதிப்பகத்தாரால் 1956 இல் “Dialogues with The Guru´  என்ற தலைப்பில் வெளி வந்தது. இதன் தமிழாக்கம் 1958 இல் வெளியாயிற்று. காபிரைட் ஐ கருதியும் நடை இன்னும் கொஞ்சம் இந்த காலத்துக்கு தகுந்தபடி இருக்கலாம் என்று கருதியும் புதியதாக தமிழாக்கம் செய்யப்படுகிறது.
 ஆங்கிலத்தில் http://www.srisharada.com/QA/QA.htm காம்போ பாக்ஸை சொடுக்கவும்.

ஒரு முறை பயணத்தில் இருந்த உயர் கல்வி அதிகாரி ஒருவர் ஸ்வாமிகளை சந்தித்து உரையாடினார்.


“நான் பார்வையிடச்செல்லும் பள்ளிகளில் காணும் சிறுவர்கள் குறிப்பாக ப்ராம்ஹண சிறுவர்களுடன் எப்போதும்  தொடர்பில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. நான் பார்ப்பது என்னவென்றால் ஸந்தியாவந்தனம் செய்யும் ப்ராம்ஹண சிறுவர்கள் கூட ஏதோ வழக்கமான கடனுக்கே என்று செய்யும் வழிபாடாக செய்கிறார்களே தவிர உண்மை வழிபாடாக செய்யவில்லை. தாங்கள் அவர்களுக்கு உபயோகமான குறிப்புகள் தருவீர்களானால் அவற்றை அவர்களுக்கு தெரிவிப்பதுடன் நன்றியுடையவனாவேன்."


நீங்கள் வெறும் வழக்கமான அலுவலக வேலையாக வைத்துக்கொண்டு திருப்தி கொள்ளாமல் ஆய்வு நேரத்தை மாணவர்களுக்கு உண்மையான உயர்வு ஏற்பட முயற்சிப்பது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. எல்லா கல்வியாளர்களும், ஆய்வு செய்யும் அதிகாரிகளும் ஆசிரியர்களும் தம்மிடம் இளைஞர்களின் மனதில் பதியும் காலகட்டத்தில் அவர்களுக்கு பயிற்சி கொடுக்கும் பெரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது என்று புரிந்து கொண்டால் மிகவும் நல்லது. என் கருத்தில் அவர்கள் இளைஞர்களின் ஆன்மீக முன்னேற்றத்தை கருத்தில் கொள்ளாமல் வெறும் பாட புத்தகங்களில் மட்டும் கவனம் செலுத்துவார்களானால் அவர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

நான் அதை எப்போதுமே கவனத்தில் வைத்து இருக்கிறேன். மாணவர்களிடம் பேசி சில உபயோகமான அறிவுரை தரும் வாய்ப்பை எப்போதும் நழுவ விடுவதில்லை. அதற்காகத்தான் தங்களிடம் அதற்கு உதவக்கூடிய சில உபதேசங்களை கேட்கிறேன்.

நீங்கள் சொல்லித்தர விரும்பும் மாணவர்களுக்கு அது பயனாக இல்லாவிட்டாலும் உங்களுக்கு பயனாக இருக்குமே!

நிச்சயமாக!

 ஆகவே இப்போதைக்கு மாணவர்களை மறந்துவிட்டு உங்களுக்கே பயன்படக்கூடிய வகையில் கேள்விகளை கேளுங்கள்.

முதலில் தோன்றுவது சந்தியா வந்தனம் குறித்த கேள்வியே. சந்தியோபாசனையில் உபாசிக்கும் தேவதை அல்லது தெய்வம் எது?

நாம் அதை விவாதிக்கும் முன் சாதாரணமாக அதைப்பற்றி நீங்கள் என்ன புரிந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று சொல்லுங்கள்.

சந்தியாவந்தனம் என்றால் நாம் உதயமாகும் சூரியனையோ, அஸ்தமன சூரியனையோ அல்லது வானத்தின் உச்சி சூரியனையோ வழி படுதல்.

மிகவும் சரியே. சுருக்கமாக சொன்னால் அது சூரிய உபாசனை என்றாகும் இல்லையா?

 ஆமாம்.

 சந்தியோபாசனம் என்பது சூரிய உபாசனை என்று சொல்லிக்கொண்டே ஸந்த்யையில் உபாசனா தேவதை யார் என்று கேட்கிறீர்களே? இந்த கேள்வி அனாவசியம் இல்லையா?

அப்படிச்சொன்னால் இது அனாவசியம்தான். ஆனால் உண்மையில் என் கேள்வி  உபாசிக்கப்படும் சூரியன் யார் என்பதே!


(தொடரும்)

2 comments:

Geetha Sambasivam said...

ithai patri kelvi pattathu undu. anal viparangal theriyathu. pakirvukku nanri. kaalai velaiyil suriyothayaththil padikkavum nernthathu.

திவாண்ணா said...

:-)
மூல புத்தகம் தமிழில் தேன் துளிகள் என்று ச்ருங்கேரி மட வெளியீடு கிடைக்கிறது. முடிந்த போது வாங்கி படியுங்க. எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு!