Pages

Monday, September 10, 2012

தினசரி பூஜை - 16

 
அடுத்து புஷ்பைஹி பூஜயாமி என்று மலர்களால் அர்ச்சனை.
எந்த வாசனையுள்ள மலரையும் அன்புடன் சமர்பிக்க இறைவன் ஏற்றுக்கொள்வான் என்ற வாதம் ஒரு பக்கம் இருந்தாலும் சாஸ்திர ரீதியில் சில விலக்கத்தக்கன.
 அருகம்புல் பிள்ளையாருக்கு வெகு இஷ்டம் என்றாலும் அதை அம்பாளுக்கு அர்ச்சிக்கக்கூடாது. பிள்ளையாருக்கு துளசி, விஷ்ணுவுக்கு வெறும் அக்‌ஷதை, சிவனாருக்கு செம்பருத்தி, இப்படி சில விஷயங்களை பார்த்து செய்ய வேண்டும்.
நான் செய்வது சூரியனுக்கு நந்தியாவட்டை, பிள்ளையாருக்கு அருகு, கிடைக்காவிட்டால் சிவப்பு பூ ஏதேனும்; அம்பாளுக்கு மல்லிகை, விஷ்ணுவுக்கு துளசி, நீல சங்கு புஷ்பம் (இந்த நீல சங்கு புஷ்பம் விஷ்ணு பரமான தெய்வங்களுக்கு மட்டுமே சரி, ராமர், க்ருஷ்ணர் போல..) சிவனுக்கு தங்கரளி, வேலனுக்கு சிவப்பு அரளி. மேலும் பவழமல்லி முல்லை ஆகியவை பரவலாக.
ஒவ்வொரு தெய்வத்துக்கும் அர்ச்சனை பின் வருமாறு. முன்னால் எட்டு நாமாக்கள்தான் சொல்லச்சொல்லி இருக்கு என்று எழுதி னேன். இருந்தாலும் இவை விசேஷமாக புழக்கத்தில் அதிகம் உள்ளன. ஸுர்யனுக்கு 11 உம், கணபதிக்கு 16 உம், விஷ்ணுவுக்கு 12உம்.
 {நம: என்பதை நமஹ என்று உச்சரிக்கவும்.}


ஸூர்யன்:
ஓம் மித்ராய நம: / ஓம் ரவயே நம: / ஓம் ஸூர்யாய நம: / ஓம் பானவே நம: / ஓம் க²கா³ய நம: / ஓம் பூஸ்²ணே நம: /ஓம் ஹிரண்ய-க³ர்பாய நம: / ஓம் மரீசயே நம: / ஓம் ஆதி³த்யாய நம: / ஓம் ஸவித்ரே நம: / ஓம் அர்காய நம: / ஓம் பாஸ்கராய நம: //

கணபதி:
ஓம் ஸுமுகா²ய நம: / ஓம் ஏக-த³ந்தாய நம: / ஓம் கபிலாய நம: / ஓம் க³ஜ-கர்ணகாய நம: / ஓம் லம்போ³³ராய நம: /ஓம் விகடாய நம: / ஓம் விக்ன-ராஜாய நம: / ஓம் விநாயகாய நம: / ஓம் தூமகேதவே நம: /ஓம் க³ணாத்யக்ஸா²ய நம: /ஓம் பா²ல-சந்த்³ராய நம: /ஓம் க³ஜானனாய நம: / ஓம் வக்ர-துன்டா³ய நம: / ஓம் ஷூர்ப-கர்ணாய நம: /ஓம் ஹேரம்பா³ய நம: /ஓம் ஸ்கந்த³-பூர்வஜாய நம: //

அம்பாள்:
ஓம் ப
வஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் ஶர்வஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் ஈஷானஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் பஷுபதேர் தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் ருத்³ரஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் உக்³ரஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் பீமஸ்ய தே³வஸ்ய பத்ன்யை நம: / ஓம் மஹதோ தே³வஸ்ய பத்ன்யை நம: //
 
ஶிவன்:
ஓம் பவாய தே³வாய நம: / ஓம் ஶர்வாய தே³வாய நம: / ஓம் ஈஷானாய தே³வாய நம: / ஓம் பஷூபதேர் தே³வாய நம: / ஓம் ருத்³ராய தே³வாய நம: / ஓம் உக்³ராய தே³வாய நம: / ஓம் பீமாய தே³வாய நம: / ஓம் மஹதே தே³வாய நம: //
 
விஷ்ணு:
ஓம் கேஶவாய நம: / ஓம் நாராயணாய நம: / ஓம் மாதவாய நம: / ஓம் கோவிந்தா³ய நம: / ஓம் விஶ்ணவே நம: / ஓம் ம‌‌ʼதுஸூத³னாய நம: / ஓம் த்ரிவிக்ரமாய நம: / ஓம் வாமனாய நம: / ஓம் ஶ்ரீதராய நம: / ஓம் ஹ்ருஶீகேஷாய நம: / ஓம் பத்³மனாபாய நம: / ஓம் தா³மோத³ராய நம: //

5 comments:

Geetha Sambasivam said...

எல்லாமே வீட்டிலே கிடைச்சுட்டு இருந்தது. பவளமல்லி தவிர. :((( இப்போ எல்லாமே விலைக்கு வாங்கணும். :)))

திவாண்ணா said...

ஹும்! வாழ்கை யூனிபார்மா நல்லா இருக்காது. அப்ஸ் அன்ட் டவுன்ஸ்....

எல் கே said...

இங்க எங்க கிடைக்குது... சாமந்தி, ரோஸ் அப்புறம் கேட்டா தாமரை கிடைக்கும்.

எல் கே said...

இங்க எங்க கிடைக்குது... சாமந்தி, ரோஸ் அப்புறம் கேட்டா தாமரை கிடைக்கும்.

sury siva said...




ஒரு சமயம் சுமார் 35 ஆண்டுகட்கு முன்னதாக ஒரு நாள் தஞ்சையில் இருந்து
சென்னைக்கு செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்ப்ரஸில்
திரு வாரியார் அவர்களுடன் பயணம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

நான் அந்த முதல் வகுப்புப் பெட்டிக்குள் சென்றபொழுது அவர் இருந்தார்.
என்ன செய்வது என்று தெரியாமல், அவரது பாதங்களில் விழுந்து
நம்ஸ்கரித்தேன்.

என்னை யாரென்று சொல்லிக்கொள்ள வில்லை.

ஒரு சில நிமிடங்க்ள் கழித்து ரயில் புறப்பட்டது. மனதிலே ரொம்ப நாட்களாக
சந்தேகம். அதற்கு வாரியார் அவர்கள் என்ன சொல்வார்கள் என்ற அவா
ஏற்பட்டது.

" ஐயா !
சிவ புராணத்தில், " பில்வ பத்ரை ப்ரஷஸ்தைஸ்ச புஷ்பஸ்ச துளசிதளைஹி "
என்று இறுதியில் சொல்லப்பட்டிருக்கிறதே !!

( இலைகளில் பில்வமும், புஷ்பங்களில் துளசியும் என்று)

மானிடராகப் பிறந்த நமக்குத் தான்
மாயையாகத் தெரிகிறது. எல்லாமே ஒன்று தான் என்றார்.

வாயடைத்துப்போனேன்.

சுப்பு ரத்தினம்.