Pages

Tuesday, September 4, 2012

தினசரி பூஜை - 12



கல பூஜா:

வீட்டுப்பூஜைக்கு பஞ்சபாத்திரத்தில் இருக்கும் நீரையே பயன்படுத்தி பஞ்ச பாத்திரத்துக்கு பூஜை செய்யலாம். பெரிய பூஜைகள் என்றால் தனியாக கலசம் வைத்துக்கொள்ளலாம். பஞ்ச பாத்திரத்தில் நீரை விட்டு, சந்தனம் இட்டு, கொஞ்சம் மங்களாக்‌ஷதை சேர்த்துக்கொண்டு, வலது உள்ளங்கையால் அதை மூடிக்கொண்டு ஸ்லோகம் சொல்லவும்.

³ங்கே³ ச யமுனே சைவ கோ³தா³வரீ ஸரஸ்வதீ |
நர்மதே³ ஸிந்து காவேரீ ஜலேஸ்மின் ஸன்னிதிம்ʼ குரு || 

 கங்கை முதலான நதி தேவதைகளை பிரார்த்தித்து இந்த நீரில் இருப்பாயாக என்று வேண்டிக் கொள்கிறோம். அப்படி வந்து விட்டதும் பூஜை செய்கிறோம். பூக்களோ அல்லது மங்களாக்ஷதையோ
³ங்கா³ய நம: யமுனாய நம: கோ³தா³வர்யை நம: ஸரஸ்வத்யை நம: நர்மதா³யை நம: ஸிந்தவே நம: காவேர்யை நம: புஷ்பை: பூஜயாமி
அவ்வளோதான். அடுத்த படிக்கு போகலாம். வலம்புரி ஶங்கு என்றால் தனியாக பூஜிக்கலாம். இல்லை என்றால் தேவையில்லை.

ஶங்க² பூஜா:
சூத்திரம்:
(கலஶோத³கேன ஶங்க²ம்ʼ பூரயித்வா)  (கலச நீரால் சங்கை நிரப்பி) சந்தனம் இட்டு, முன் போல் கையால் மூடிக்கொண்டு,

ஸ்லோகம்:
ப்ருʼதி²வ்யாம்ʼ யானி தீர்தா²னி ஸ்தா²வராணி சராணி ச |
தானி தீர்தா²னி ஸ²ங்கே²(அ)ஸ்மின் விஸ²ந்து ப்³ரஹ்மஸா²ஸனாத்

பொருள்: எந்த நீர் மண்ணில் ஓடிக்கொண்டோ நிலையாகவோ இருக்கிறதோ அவை சங்கில் ப்ரம்ஹாவின் கட்டளையால் இருக்கட்டும்.

த்வம்ʼ  புரா ஸாக³ரோத்பன்னோ விஷ்ணுனா வித்ருʼ: கரே |
தே³வைச்ச பூஜித: ஸர்வை: பாஞ்சஜன்ய நமோஸ்துதே ||

பொருள்: நீ கடலில் பிறந்தாய். விஷ்ணுவால் ஏந்தப்பட்டாய்; எல்லா தேவர்களும் உன்னை பூஜிக்கிறார்கள். பஞ்ச ஜன்யமே உனக்கு நமஸ்காரம்.


ஸ்லோகம் முடிந்ததும் முன் போல் பூஜிக்கலாம். ஶங்க² முத்திரை காட்டலாம்.


சூத்திரம்:
ஶங்க² ஜலேன பூஜோபகரனானி த்³ரவ்யாணி ஆத்மானம்ʼ ச த்ரி: ப்ரோக்ஷ்ய, புன: ஶங்க²ம்ʼ பூரயித்வா...
(சங்கு நீரால் பூஜை திரவியங்களையும் தன்னையும் மும்முறை ப்ரோக்ஷித்துக்கொண்டு  மீண்டும் சங்கை நீரால் நிரப்பி...) அடுத்து....

க⁴ண்டா பூஜா 
மணியை  சந்தனம் இட்டு, பூ சாற்றி, மணி அடித்து சப்தம் செய்க. 
ஸ்லோகம்: 
ஆக³மார்த²ம்ʼ து தே³வானாம்ʼ க³மனார்த²ம்ʼ ச ரக்ஷஸாம் |
குரு க⁴ண்டே வரம்ʼ நாத³ம்ʼ தே³வதாஸ்தா²னஸம்ʼனிதௌ⁴ || 
தேவர்கள் வரவும், ராக்‌ஷசர்கள் செல்லவும், மணி ஓசை எழுப்புவோம்; தேவர்கள் இங்கு இருக்கவும்.
ஆத்ம பூஜா:

தே³ஹோ தே³வாலய: ப்ரோக்தோ ஜீவோ தே³வ: ஸனாதன: |
த்யஜேத்³ அஜ்ஞான நிர்மால்யம்ʼ ஸோ(அ)ஹம்ʼ பாவேன பூஜயேத் ||

பொருள்: தேஹமே தேவாலயம்; ஜீவனே அனாதி தெய்வம்; அஞ்ஞானமாகிய நிர்மால்யத்தை (வாடிய பூவை) அகற்றி “ நானே அவன்” என்ற பாவனையுடன் பூஜிக்கவும்.

இப்படி சொல்லி மங்களாக்‌ஷதையை தன் தலையில் போட்டுக்கொள்ள வேண்டும்.

பீட² பூஜா:

அடுத்து ஸ்வாமியை வைக்கப்போகும் பீடத்துக்கு பூஜை. அக்‌ஷதை அல்லது பூக்களை பயன்படுத்தலாம்.
ஓம் ஸகல கு³ணாத்ம ஶக்தி யுக்தாய யோக பீட² ஆத்மனே நம:|
ஆதா³ர ஶக்த்யை நம:| மூலப்ரக்ருʼத்²யை நம:   ஆதி³ வராஹாய நம: ஆதி³ கூர்மாய நம:
அனந்தாய நம: ப்ருʼதி²வ்யை நம:
 ஆதி³த்யாதி நவ க்³ரஹ தே³வதாப்யோ நம:
³ஶ தி³க்³ பாலேப்யோ நம:

கு³ரு த்யானம்ʼ :

கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணூ: கு³ருர்தே³வோ மஹேஶ்வர: |   கு³ரு: ஸாக்ஷாத் பரப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம:

பொருள்:  குருவே ப்ரம்ஹா, விஷ்ணு, மஹேஶ்வரன்; குருவே பரபிரம்ஹம். அப்படிப்பட்ட குருவை நமஸ்கரிக்கிறேன்.

சுத்தம் செய்த இடம் காய்ந்த பின் ஸ்வாமியை பெட்டியில் இருந்து வெளியே எடுத்து பீடத்தின் மீது வைக்கலாம்....

5 comments:

Geetha Sambasivam said...

சங்கு,பீடம், சங்கு முத்திரை எல்லாமும் அழகு. நல்லா இருக்கு. இந்தப் பின்னூட்டம் வருதா பார்க்கலாமா?

Geetha Sambasivam said...

ஹை, வந்துடுச்சே! :))))

திவாண்ணா said...

கஆர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வழக்கம் போல் மெய்ல் நாட்டிபிகேஷன் வரலை. நானா பாத்தேன்!

எல் கே said...

கண்ட பூஜை பொதுவாய் பூஜை இறுதியில் என் அப்பா செய்யப் பார்த்திருக்கிறேன். எது சரி ??

திவாண்ணா said...

எல்கே, ஆரம்பத்தில்தான் வரும். சங்கை,ஆசனத்தை பயன்படுத்தும் முன்தானே அவற்றுக்கு பூஜை செய்கிறோம்? அது போலவே.
சிவ பூஜை செய்வோர் மணியின் மேல் இருக்கும் நந்திக்கு கடைசியில் பூஜை செய்வர். நீங்க பாத்தது அதுவா இருக்கும்.