Pages

Saturday, August 25, 2012

தினசரி பூஜை -6



வலம்புரி சங்கு என்று விற்கிறார்கள். அதில் முள்ளு முள்ளா இருக்கும். இலக்கணப்படி அது வலம்புரியாவே இருக்கும். அதாவது நுனி இடப்புறம் இருக்கும்போது திறப்பு மேல் நோக்கியும், நம்மை விட்டு எதிர்பக்கமும் இருக்கும். ஆனால் இது ரேர் இல்லை. அதாவது இந்த ஸ்பீஷீஸ் சங்கு எப்பவும் இப்படித்தான் இருக்கும்! வழ வழவென்று இருக்கும் சங்கு எப்பவும் இடம்புரியாக இருக்கும். இதில் எப்போதாவது தோன்றுகிற வலம்புரிதான் விசேஷம். அவ்வளோதானே, மழிச்சு கொடுத்துடறேன்னு பெரிய முள்ளு சங்கை மொழு மொழு ஆக்கியும் விற்கிறார்கள்! வெட்டி மாற்றி ஒட்டியும் விற்கிறார்கள். என்னென்னெவோ நடக்கிறது! இதெல்லாம் நிறைய விற்கிற ராமேஸ்வரம் மாதிரி இடங்களில விவரம் தெரிஞ்ச உள்ளூர் ஆசாமி கூட போய்தான் வாங்கணும்!

 சந்தனப்பவுடர், வில்லை எல்லாம் இரண்டாம் பக்ஷம். வெகு சுலபமாக ஏதோ ஒரு மரத்தூளை வாச்னைக்கு கொஞ்சமே கொஞ்சம் சந்தன தைலம் சேர்த்து விற்கிறார்கள். சந்தன கட்டை வாங்கி சந்தனக்கல்லில் இழைப்பதே நல்லது.

 நல்ல கற்பூரம் கிடைப்பதே இல்லை! கற்பூர மரத்து தயாரிப்பெல்லாம் எப்பவோ போய்விட்டது. இப்போது கிடைப்பது கெமிக்கல் தயாரிப்பே. இதாவது நல்லா இருக்கக்கூடாதா? கற்பூரம் எரிந்தபின் ஒன்றுமே மிஞ்சாமல் இருந்தால் நல்ல கற்பூரம். கரி மிஞ்சினால் இல்லை.

பருத்தியாக வாங்கி பஞ்சில் நூற்று திரியாக்கி பயன்படுத்துவது சிரத்தை உள்ளோர் செயல். இதெல்லாம் வேஸ்ட் காட்டன் என்று வாங்கி வியாபார நோக்கில் செய்கிறார்கள். துணிக்காக உருவாக்கும் இந்த காட்டனில் செயற்கை இழை சேர்ந்திருக்கும். அது விளக்குத்திரிக்கு சரியில்லை.

 வெள்ளை வெளேர் என்று விபூதி இருந்தால் அனேகமாக அது சரியில்லை! வெள்ளை நிறத்துக்காக எதேதோ ரசாயனங்கள் சேர்க்கிறார்கள். சாம்பல் என்றால் அது சாம்பல் கலர் இல்லாமல் எப்படி இருக்கும்? ஏதேனும் பெரிய யாகங்கள் மாதிரி நடந்தால் முந்திய நாள் சொல்லி வைத்து அடுத்த நாள் மடியாக போய் சேகரித்து வாருங்கள். வேறு கலப்படங்கள்??? ம்ம்ம்ம் நினைவுக்கு வேறு எதுவும் வரவில்லை. விட்டுபோயிருந்தால் சொல்லுங்கள்.

8 comments:

Geetha Sambasivam said...

குங்குமத்தில் கூடக் கலப்படம் வருது. சாம்பிராணி கம்ப்யூட்டர் சாம்பிராணினு விக்கறாங்க, அதிலேயும் கலப்படம். கலப்படம் எமது பிறப்புரிமைனு ஆகிப் போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :P

எல் கே said...

இங்க இயற்கை உரங்கள் உபயோகப்படுத்தி தயாராகும் மளிகை சாமான்களை விற்கும் கடை இருக்கு. அவங்ககிட்ட கெமிக்கல் கலக்காத ப்ளீசிங் செய்யாத விபூதி உண்டு. அதைதான் உபயோகப்படுத்தறேன் ....

திவாண்ணா said...

நண்பர்களை கருதி அந்த முகவரியை கொடுங்க எல்கே!

Geetha Sambasivam said...

grrrrrrrrrrrrrrrrrrrrrr என் பங்குக்கு நானும் குங்குமம், சாம்பிராணி கலப்படங்களை எழுதி இருந்தேன். அந்தக் கமென்ட் வரவே இல்லை. அதோட அது ஏன் வரலைனு கேட்டுப் போட்ட கமென்டும் வரலை. ஆனால் எல்கேயோட ஃபாலோ அப் மட்டும் வருது! இது அநியாயம்! முதல்லே ஸ்பாமிலே போய்த் தேடுங்க.

திவாண்ணா said...

கம்ப்யூட்டர் சாம்பிராணில வைரஸ் வந்திருக்கும்! ஸ்பாம்ல இல்லை. என்னமோ லேட்டா வருது.

Jayashree said...

வலம்புரி முள்ளு இருக்கும் என்று இல்லை மிஸ்டர் திவா. இன்னிக்கு நான் உங்க போஸ்ட் படிச்சுட்டு சந்தானம் குங்குமபூ போட்டு அரைத்து சாமிக்கு போட்டேன். 10 $ க்கு வாங்கின 1 கிராம் எக்ஸ்போர்ட் QUALITYNNU போட்டது தான் அதுவே க்ளோரின் வாசனை வந்தது . பிறகு பச்சை கல்பூரம் போட்டேன். சகலமும் கலப்படம் தான் .நாளைக்கு சந்தனக்கட்டை மட்டும் அரைக்க வாசனையா இருக்கான்னு பாத்துட்டு எழுதறேன் .மூனார் ஏலக்கான்னு உசத்தியா சொன்னலேன்னு அங்கேந்து வாங்கிண்டு வந்த ஏலக்காயில் கால் வாசில நல்ல ஏலம் இருந்தா ஜாஸ்த்தி:(

சாலக்கிராமம் எப்படி இருக்கும்? என்ன பண்ணனும. ஜாஸ்த்தி விவரம் தெரியாது . பத்ரில எனக்கு ஜபர்தஸ்த் 2 அழகான சங்குமaதிரி இருக்கும் கற்கள் ஒருத்தர் தந்துவிட்டு ராஜா ஜைசே ரக்னா னுட்டு போனார் என் வளை பட்டு மெல்லிசா தங்க கோடு மாதிரி வரைந்தது.

எல் கே said...

கண்டிப்பா என் அக்காகிட்டதான் முகவரி இருக்கு . வாங்கி போடுகிறேன்

திவாண்ணா said...

ஜெயஶ்ரீக்கா, வலம்புரில முள்ளு இருக்கும் ன்னு சொல்ல வரலை. அப்படி முள்ளா இருக்கற வெரைட்டி இயற்கையாவே வலம்புரி. அதில விசேஷம் இல்லைன்னு சொல்ல வந்தேன்.
இவ்வளொ வருஷமா நான் பயன்படுத்தி வந்த குங்குமப்பூ ஸ்பெய்ன்லேந்து வந்ததுன்னு சிங்கப்பூர் / அமேரிக்காவிலேந்து அப்பப்ப பலர் வாங்கி வந்தது. வாசனையே கிடையாது. இப்ப சமீபத்தில கஷ்மீர் குங்குமப்பூ பயன்படுத்திதான் அது எப்படி இருக்கும்ன்னே தெரிய வந்தது!
டூரிஸ்ட் ஸ்பாட்ல கிடக்கறது பலதும் கலப்படம் இருக்கும். அங்கே விளையற பொருளா இருந்தா உள்ளூர் ஆசாமியோட போய் வாங்கணும். டூரிஸ்ட்தானே, இவன் திரும்பி வந்தா ஏன்ன்னு கேட்க்கப்போறான் ன்னு ஒரு ஆட்டிட்யூட்!
சாளக்ராமம் அப்புறமா போட்டோ போடறேன்.