Pages

Wednesday, July 25, 2012

பாபங்கள்- ப்ராயச்சித்தங்கள்


ஒரு சமூகத்தின் பாதுகாப்பு அதன் சட்ட திட்டங்களிலும் அதை அமுல் படுத்துவதிலும் இருக்கிறது.செய்யப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை என்று ஒன்று இல்லாத பக்ஷத்தில் குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்சர்வ சாதாரணமாக இப்போது குற்றங்கள் செய்வதும் பல காரணங்களால் அவற்றுக்கு தண்டனை கிடைக்காமல் போவதும் நடந்து கொண்டிருக்கிறதுஇதற்கு சாதிஅரசியல்பணம் என்று பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

எல்லாவற்றுக்கும் எதிர்வினை ஒன்று இருக்கிறதுபாபம் செய்தவன் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும்இது இப்போதெல்லாம் உடனடியாக நடை பெறுவதில்லை என்பதால் மக்கள் மனதில் நம்பிக்கை போய்க்கொண்டே இருக்கிறது.

குற்றங்களை மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லைதண்டனைப்பற்றி பயமில்லாத சமூகம் உருப்படாதுசின்னதோ பெரிதோ அதற்கு தகுந்தபடி தண்டனை இருந்தே ஆக வேண்டும்தன் நீதியை ப்ரயோகிக்காவிட்டால் ராஜ்யம் விவஸ்தையற்று (order இல்லாமல்அழிந்துவிடும் என்கிறார் மனுசாதாரணமாக மனித ஸ்வபாவம் மலினமானதுஉள்ளுக்குள் இருக்கும் ஆசாபாசங்கள் அவனை எப்போதுமே தவறை செய்ய தூண்டுகின்றனஅதனால் அநியாய வழியில் இருப்பவன் மீது தண்டத்தை ப்ரயோகிக்க வேண்டும் என்றும் இந்த பயத்தால் ப்ரஜைகள் தர்மத்தின் படி நடப்பர் என்றும் மனு சொல்கிறார்.

சாலையில் காகிதம் போட்டாலே அபராதம் என சட்ட திட்டங்களை அமுல் படுத்தும் சிங்கப்பூரில் ஒழுங்காக இருக்கும் இந்திய நபர் இந்தியா வந்தால் அப்படி இருப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும்ஏனென்றால் இங்கே சட்ட திட்டங்கள் இருந்தாலும் அவை ஒழுங்காக அமுல் படுத்தப்படுவதில்லைகாவல் நிலையத்துக்கு குற்றவாளி போகு முன் உள்ளூர் கட்சிக்காரரிடமிருந்து போன் போகிறதுசரி என்று கிடைத்ததை வாங்கிக்கொண்டு விட்டுவிடும் பழக்கமும் வந்துவிட்டது.

என்டமுரி வீரேந்திரநாத் ஒரு கதையில் எழுதினார். "ஒரு கொலை செய்யப்பட்டால் அதற்கு வழக்கு பதிவாகி தண்டனை கொடுப்பதற்குள் ஏழு முக்கிய படிகள் இருக்கின்றனஅவற்றில் ஒரு படியை கவனிக்கும் ஆசாமியை கவனித்துவிட்டால் கூட தண்டனையில் இருந்து தப்பி விடலாம்.”

தப்பித்தவறி சமுதாய கவனிப்பு பெற்று விடும் வழக்குகளுக்கும் இப்போது ஒரு வேறு வித வழி வைத்து இருக்கிறார்கள்மீடியாக்கள் லபோ திபோ என்று அடித்துக்கொள்ளும் காலகட்டமான ஆரம்ப கட்டத்தில் குற்றவாளியை பிடித்து உள்ளே போட்டு விடுகிறார்கள்மெதுவாக அவர் பெயிலில் வெளியே வந்துவிடுகிறார்வழக்கு சில பல மாதங்கள் நடக்கிறதுகீழ் கோர்ட்டில் குற்றவாளி என்று தீர்ப்பாகி தண்டனையும் கொடுக்கப்படுகிறதுஇத்ற்குள் சமுதாய கொந்தளிப்பு அடங்கத்தொடங்கி விடுகிறதுஇன்னும் ஒரு வருடம் போனால் எல்லோரும் அதை மறந்தே போவார்கள்இந்த சமயத்தில் பெயிலில் இருக்கும் குற்றவாளி மேல்கோர்ட்டில் செய்த அப்பீலில் தவறான தகவல் அடிப்படையில் தண்டனை தரப்பட்டதாகவும்சட்டத்தை கீழ் கோர்ட் சரியாக கவனிக்கவில்லை என்றும் அது தவறு என்றும் சொல்லி ஆசாமி விடுதலை செய்யப்படுவார்இது எப்படி நிகழ்கிறதுஇது முழுவதும் ஒரு செட் அப்தான்வழக்காடப்படும்போதே ஓட்டை வாதங்களே முன் வைக்கப்படும்நடை முறைகள் சரியாக கடை பிடிக்கப்பட மாட்டாது.இருந்தாலும் குற்றவாளி என்பார்கள்மேல் கோர்டில் இந்த வாதங்களை ஒட்டியே வழக்கு நடக்கும்;நடை முறைகள் சரியாக கடைபிடிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படும்சாட்சிகள் புதிதாக விசாரிக்கப்படுவதில்லைஓட்டை வாதங்கள் எடுபடாமல் போவதில் என்ன வியப்பு இருக்கிறது?இது போன்ற ஆசாமி எங்கள் ஊரிலேயே இருக்கிறார்.

இந்த குற்றங்களில் இருந்து இப்போதைக்கு தப்பி விட்டாலும் இயற்கையான தர்மம் அதற்கான தண்டனையை கொடுத்தே தீரும்டாக்டர்கள் சிலர் அவர்களிடம் அடிக்கடி தீராத பிரச்சினைகளுடன் வரும் நோயாளிகள் யார் யார் என்று கொஞ்சம் ஆராய்ந்த போது இதை உணர்ந்து இருக்கிறார்கள்.

குற்றங்கள் ஏராளமானவையாக இருந்தாலும் அவற்றுக்கான தண்டனையை சாத்திரங்கள் சொல்லியே வைத்து இருக்கின்றனதற்கால சட்ட திட்டங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும்சாத்திரங்கள் சொன்னவற்றை சற்றே பார்க்கலாம்எவ்வளவு விஸ்தாரமான சிந்தனை இருந்திருக்கிறது என்பதும் விளங்கும்.
அவற்றை அடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.
Post a Comment