Pages

Sunday, July 22, 2012

ஜீவ காருண்யம்.




எங்க வீட்டில பொழுது சாயற வேளைக்கு இருந்தீங்கன்னா பட் பட் ன்னு ஒரு வினோதமான சத்தத்தை கேட்கலாம். அது வேற ஒண்ணுமில்லை. பக்கத்துல வீட்டில இருக்கிற மாமி கொசு கொல்லி பேட்டால கைங்கரியம் செய்கிற சத்தம்தான் அது. கொசுக்கள் எலக்ட்ரோக்யூட் ஆகி செத்து விழற சத்தம்.


கொசு மேலே உக்காந்து கடிக்குது. ஒரு ரிப்லக்ஸ்ல அதை அடிக்கிறோம். அது தப்பிக்கலாம் அல்லது அடிபட்டு செத்துப்போகலாம். அதோட தலைவிதியை பொறுத்து அது இருக்கு. இது கொஞ்சம் புரிஞ்சுக் கொள்ளக்கூடியதே! கவனியுங்க, புரிஞ்சுக்கொள்ளக் கூடியது. ஒத்துக்கொள்ளக்கூடியது இல்லே.

ஆனா வேணும்ன்னு இப்படி வெளியே போய் உட்கார்ந்துகிட்டு பேட்டாலே கொசுக்களை கொல்லறதை எதில சேர்க்கிறது? இது செல்ப் டிபன்ஸ் இல்லே! எதிர்வினையும் இல்லே. இவங்க என்ன நினைச்சு இப்படி செய்கிறாங்கன்னு தெரியலை! இப்படி தினம் நூறு கொசுக்களை கொன்னா அது இல்லாம போயிடுமா? அது ஆயிரக்கணக்கில இருக்கு. சீக்கிரமா உற்பத்தியும் ஆயிடும். இரண்டு வாரங்களிலே உற்பத்தி ஆகுதாம். அதுவும் வாழ சரியான சூழ்நிலை இல்லை- உறைபனி, வறட்சி ன்னா சரியான தருணத்துக்கு காத்திருக்குமாம்! ஆக கொசுக்களை மொத்தமா ஒழிக்க முடியாது.

மத்த ஜீவ ராசிகளுக்கு வாழ இல்லாத ரைட்ஸ் நமக்கு மட்டும் என்ன இருக்கு? சின்னதோ பெரிசோ அதுவும் ஒரு ஜீவன், நாமும் ஒரு ஜீவன்தான். பெரிய வித்தியாசம் ஒண்ணும் கிடையாது. பின்னே ஏன் அதை அனாவசியமா கொன்னு நம் கர்மா மூட்டையை இன்னும் பெரிசாக்கிக்கணும்?

பின்னே என்ன செய்கிறது? கொசு கடிச்சா வியாதி வருமே ன்னா..
எல்லா கொசுக்களும் மனுஷனை கடிக்கிறதும் இல்லை.
கொசு கடிச்சா வியாதி வர வாய்ப்பு இருக்கே தவிர எப்பவுமே வரும்ன்னும் இல்லை.

சரியான வழி நாம் வாழுகிற பகுதிகளிலே இவை பல்கி பெருகாம பாத்துக்கிறதுதான். தண்ணீர் தேங்காத சாக்கடை, டயர் மாதிரி பொருட்களை சரியா வெச்சுக்கிறது தேவையில்லாம குழிகளை வெட்டுறது- இப்படி தண்ணீர் தேங்காம இருக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ அதெல்லாம் செய்யலாம். இது சமூகத்தில செய்ய வேண்டியது. நம்மை பொருத்த வரைக்கும் கொசுக்கள் அதிகமா நடமாடுகிற நேரங்களில உள்ளே வராம கதவு, ஜன்னல்களை மூடி வைக்கலாம். நல்ல தற்காப்பு கொசு வலைதான். ரசாயன கொசு விரட்டிகள் எல்லாம் கொஞ்சம் ரிஸ்க் ஆனவை. (அதைப்பத்தி இன்னைக்கு வந்த பதிவுதான் இதை எழுத வெச்சது.) நைலான் கொசு வலைக்குள்ள கொஞ்சம் சூடு அதிகம் இருக்கும். சேலத்து பக்கம் பருத்தி கொசு வலை விக்கிறாங்கன்னு சமீபத்தில பத்திரிகையில் படிச்சேன். அதில இப்படி சூடு அதிகமாகிறது இல்லையாம்.

மேட்ரிக்ஸ் படத்தில வர ஒரு வசனம்தான் நினைவுக்கு வருது. மனுஷன்தான் இருக்கிற உயிரினங்களிலேயே மோசமானவன். வைரஸ் மாதிரி.  எங்கே போனாலும் அங்கே இருக்கிற மற்ற உயிரினங்களை ஒழிக்கறதிலேயே இருக்கான். அப்புறம் பல்கி பெருகி வேற இடங்களுக்கு பரவி…. அங்கேயும் நாசம்தான்.

கொஞ்சம் யோசிப்போம்.

7 comments:

ஸ்வாமி ஓம்கார் said...

//அதுவும் ஒரு ஜீவன், நாமும் ஒரு ஜீவன்தான். பெரிய வித்தியாசம் ஒண்ணும் கிடையாது.//

அது எப்படி :) நாம கடிச்சா மலெரியா, டெங்கு வருமா?

ஜீவன் எல்லாம் ஒன்னுதான்னா நாகப்பாம்பை (அதுவும் உங்க இடத்தில மேல கொட்டையில வருமே ;) அது போல) எடுத்து முத்தம் கொஞ்ச முடியுமா? :))

ஸ்வாமி ஓம்கார் said...

கொசு வலை இல்லாம, கொசு பேட் இல்லாம, கெமிக்கல் இல்லாம கொசுவை ஒழிக்க ஒரு வழி இருக்கு...

சின்னதா ஒரு தொட்டி வச்சு அதில் தாமரை அல்லது அல்லி வளர்க்கனும். அதில் டேங்க் கிளீனங்கிற மீனை விடனும். வீட்டுக்கு முன்னாடி அது அழகாவும் இருக்கும் கொசுவும் வராது...!

எப்படி வராதுனு யோசிங்க :)

Jayashree said...

நார்த் ல இப்ப ஹோட்டல்ல யெல்லாம் ராட் ஹீட்டர் மாதிரி ட்யுப் லைட் கலர்ல ஒரு சாதனம். கொஞ்ச நேரத்துக்கு ஒருதடவை பட் பட் நு சத்தம் வராதேன்னு பாத்தா பாவம் பூச்சிகள் :(

திவாண்ணா said...

ஸ்வாமி நாம கடிச்சா ரத்தம் வரும்!

திவாண்ணா said...

ஸ்வாமி, டேங்க் எவ்வளொ பெரிசா இருக்கணும்ன்னு சொல்லுங்க. நாளைக்கே வாங்கிடலாம்.

ஆப்பிரிக்காவில கடைபிடிக்கிற டெக்னிக் பத்தி எழுதலாமான்னு யோசிச்சு அப்புறம் விட்டுட்டேன். வீட்டில் தூங்கும் அரையில் ஒரு அகன்ற பாத்திரம் வைத்து அதில் நீர் வைக்கணும். இரவில் கடிக்கும் கொசுக்கள் உடனே முட்டையிட தண்ணீரை தேடி போகும். இந்த பாத்திர தண்ணீரில் முட்டையிடும். காலை எழுந்த பிறகு இந்த தண்ணீரை வெளியே மணிலில் கொட்டுவிடுவாங்க. தண்ணீர் நிலத்துக்குள்ளே போயிடும். முட்டைகள் மணல் சூட்டில் நாசமாகும். இப்படி எல்லரும் செய்தா கொசு குறைய வாய்ப்பு இருக்கு.
நீங்க சொல்கிற டெக்னிக்கும் ஏறத்தாழ அதே விஷயம்ன்னு நினைக்கிறேன். இங்கே மீன் அந்த முட்டைகளை சாப்பிட்டுவிடும்! சரிதானா?

திவாண்ணா said...

ஜெயஶ்ரீக்கா, இது இங்கேயும் ரொம்ப நாளாவே இருக்குன்னு நினைக்கிறேன்.

திவாண்ணா said...

ஆமா, இப்பல்லாம் போஸ்ட்ல மத்தவங்க போடுகிற கமென்ட்ஸ் ஏன் எனக்கு மெய்லா வரதில்லை? செட்டிங் பாக்கணும்!