Pages

Monday, July 30, 2012

பாபங்கள்- ப்ராயச்சித்தங்கள் -5


உபபாதகங்கள்:
பசு வதை, காலத்தில் உபநயனம் செய்து கொள்ளாமை, பொன் வெள்ளி அல்லாத திருட்டு, கடனை திருப்பிக்கொடுக்காமல் இருப்பது, மூத்தவனுக்கு திருமணம் ஆகாமல் இளையவன் திருமணம் செய்து கொள்ளுதல் (இது மூத்தவன், இளையவன் இருவருக்குமே தோஷமாகும்) கூலி கொடுத்து வேதம் கற்றல், கூலி வாங்கிக்கொண்டு வேதம் சொல்லித்தருதல், பரதாரத்துடன் சேருதல், வட்டியால் ஜீவனம், உப்பு விளைவித்தல், ஸ்த்ரீ, க்ஷத்ரியன், வைச்யன், சூத்திரன் இவர்களை வதைத்தல், நாஸ்திகம், ப்ரம்ஹசர்ய வ்ரதலோபம், பிள்ளைகளை விற்பது, தான்யம், பொன், வெள்ளி, பசு திருடுதல், தகுதி இல்லாதவர்களுக்கு யாகம் செய்வித்தல்; வேத அத்யயனம், பிதா, மாதா, குரு, அக்னி, புத்திரன், பந்துக்கள் இவர்களை கைவிடுதல், வ்ரதங்களை அனுஷ்டிக்காமல் இருத்தல், வேட்டையாடுதல், மருந்தால் ஜீவனம், கெட்ட சாத்திரங்களை கற்றுக்கொள்ளுதல், குளம் தோட்டம் இவற்றை விற்றல், விறகுக்காக காயாத மரங்களை வெட்டுதல், சுய நலத்துக்காக ஒரு காரியத்தை ஆரம்பித்தல், நன்றி மறப்பது …. இப்படி இந்த பட்டியல் நீண்டுக்கொண்டே போகிறது!

கழுதை, குதிரை, ஒட்டகம், மான், யானை, வெள்ளாடு, செம்மறியாடு இவற்றை வதைத்தல்;
மீன், எருமை, பாம்பு, புழு, பூச்சி, பறவை இவற்றை கொல்லுதல்.
இவை ஸங்கரீ கரணம்.
  மத்யத்துடன் (மது) கொண்டு வரப்பட்ட வஸ்துவை உண்ணுதல்;
பழம், விறகு, புஷ்பம் இவற்றை திருடுதல், தைரியமில்லாமை.
இவை மலினீகரணம்.
 ஸங்கரீகரணமாக நிந்திக்கப்பட்டவர்களிடமிருந்து தனத்தை பெறுதல், வியாபாரம், நிந்தித்த வட்டியால் பிழைத்தல், சூத்ரனை சேவித்தல், பொய் சொல்லுதல் - இவை அபாத்ரீகரணம்.
ப்ராஹ்மணனை தண்டம் போன்றவற்றால் அடித்தல், முகரக்கூடாததை முகருதல், வக்ரத்தன்மை;
பசுக்கள், யோனி அல்லாத இடங்கள், புருஷனிடம்.. இங்கெல்லாம் மைதுனம் செய்தல் - இவை ஜாதி ப்ரம்ஷகரணம்.
இப்படி பட்டியலில் வராத இதர குற்றங்கள் ப்ரகீர்ணம் எனப்படும்.

ப்ராயசித்தங்கள் விதிக்கப்படுகின்றன. இவற்றை ஏன் செய்ய வேண்டும்?
ப்ராயச்சித்தம் இல்லாவிடில் நரகங்களில் வசிக்க நேரிடும். அவை பயங்கரமானவை. துன்பம் கற்பனை செய்ய முடியாதவை. இந்த நரக வாசம் மரணத்துக்குப்பின் எம தர்ம ராஜனால் விதிக்கப்பட்டு அனுபவிக்கப்படுகிறது. அதன் வாசனையால்தான் (அரசல் புரசலான நினைப்பு) அனேகமாக நாம் எல்லோருமே மரணத்தை நினைத்தாலே பயன்படுகிறோம். இல்லாவிடில் ஏன் பயப்பட வேண்டும்?

இது வரும் காலத்தியது. ப்ராயச்சித்தம் செய்து கொள்ளாதவர் தள்ளிவைக்கப்பட வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம். ஆகவே வாழ்வதே ஒரு பிரச்சினையாகிவிடும்.

அறிந்து செய்த மஹாபாதகங்களுக்கு ப்ராயச்சித்தங்கள் இல்லை. மலை மீதிருந்தோ, நெருப்பில் குதித்தோ உயிர் விட வேண்டியதுதான்.

கலியில் மரணத்தை தழுவும் பிராயச்சித்தங்கள் விலக்கப்பட்டுள்ளன.

அடிக்கடி செய்யும் பாபங்களுக்கும் ப்ராயச்சித்தங்கள் இல்லை. அஞ்ஞானத்தால் ஒரு பாபம் நிகழ்ந்தால் அதற்கு ப்ராயசித்தங்கள் சொல்லப்பட்டன. புத்தி பூர்வகமாக செய்யப்பட்டவற்றுக்கு ப்ராயசித்தங்கள் இல்லை என்றும்; உண்டு, ஆனால் உலக வ்யவகாரத்துக்கு மட்டுமே யோக்யன் ஆவான் என்றும் அபிப்ராய பேதங்கள் இருக்கின்றன. அதே போல அந்தணர் தவிர்த்த மூன்று வர்ணத்தாருக்கும் எல்லா பாபங்களுக்கும் ப்ராயச்சித்தம் உண்டு என்றும் சொல்லப்படுகிறது.

இந்த புத்தி பூர்வகமாக செய்யப்பட்டவற்றுக்கு ப்ராயச்சித்தம், அஞ்ஞானத்தால் செய்யப்பட்டதற்கானதை போல இரு மடங்கு ஆகும்.

4 comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

திவாண்ணா said...

mmmmmm??

Geetha Sambasivam said...

யோசிச்சேன், பல பாபங்கள் இன்றைய நாட்களின் அன்றாட வேலைகளாகி விட்டனவே என்று. :((((((

திவாண்ணா said...

ஆமாம்! :-))