Pages

Friday, July 27, 2012

பாபங்கள் ப்ராயச்சித்தங்கள் - 3


அது சரி, மஹாபாதகம், உபபாதகம்ன்னு எல்லாம் என்னமோ சொல்லறீங்களே அதெல்லாம் என்ன?
--
அதெல்லாம் ஒண்ணுமில்லை. பெரிய தப்பு சின்ன தப்புன்னு சொல்கிறோமே அது போல. பாபங்கள் ஒன்பது விதமாக சொல்கிறார்கள். அதுக்குத் தகுந்தாப்போலத்தான் தண்டனையும்.
லிஸ்ட் பார்க்கலாமா? மஹாபாதகம், அதி பாதகம், சம பாதகம், உபபாதகம், ஸங்கரீகரணம், மலிநீகரணம், அபாத்ரீகரணம், ஜாதி ப்ரம்சகரம், ப்ரகீர்ணம்.

 மஹாபாதகம்ன்னா ரொம்ப பெரிய பாபம். அது சின்ன லிஸ்ட்தான். மொத்தம் 5.
ப்ரஹ்ம ஹத்யை, ஸுராபானம், ஸ்வணஸ்தேயம், குருபத்னீ கமனம்; இந்த நான்கு பாபங்கள் செய்தவருடன் சேர்ந்திருப்பது. (இந்த 'சேர்ந்திருப்பது' என்கிற கடைசி பாபம் கலி யுகத்தில் இல்லை ன்னு ஒரு அமெண்ட்மென்ட் இருக்கிறது)

ப்ரம்ஹம் என்பது வேதம். வேதமே எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பதால் அது முக்கியம். வேதம் பயிலும் ப்ராம்ஹணன் இல்லாமல் அது இங்கே உலகில் இருக்காதாகையால் வேதம் பயின்ற ப்ராம்மணனை கொல்வது மஹா பாதகமாக சொல்லப்பட்டது. அடுத்து சுரா பானம். இது பொதுவாக ஆல்கஹாலைத்தான் குறிக்கிறது. ஒருவன் தன் சுய நிலையில் இல்லாமல் உள்ள போது மேலும்  பல பாபங்கள் செய்யவும் வாய்ப்பு ஏற்படும்.

ஸ்வர்ணம் என்பது தங்கம். இதை வெறும் உலோகமாக பார்க்கக்கூடாது. தங்கம் என்பது மஹா லக்ஷ்மி ஸ்வரூபம். அதற்கு தோஷமேற்படாது. அது வீட்டில் இருந்தாலே மங்களம் ஏற்படும் என்பதால்தான் இந்தியர்கள் வேறு எந்த நாட்டினரையும் விட தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கம் ஹெவி மெடல். ப்ரோட்டீனை அது சிதைக்கும். அதனால்தான் ராஜாக்கள் தங்கதட்டை பயன்படுத்தினார்கள் போலிருக்கிறது. ப்ரோட்டீன் விஷங்கள் பலனற்று போய்விடும் போலிருக்கிறது!இப்படிப்பட்ட தங்கத்தை திருடிவிட்டால் இழப்பு அதிகமாகவே இருக்கும்! அந்த காலத்தில் வாழ்வு ஆதாரமே கூட போய்விட்டிருக்கும்.

ஒருவனுக்கு வாழ்கையில் வேதக்கல்வியை கற்றுகொடுத்து அவன் வாழ்கையையே உருப்பட வைக்கும் குருவின் பத்னி தாய்க்கு சமம் ஆவாள். இவளுடன் போகம் செய்வது மஹாபாதகம்.

ஒரு கொலை நடந்தது என்றால் அதில் பலரும் சம்பந்தப்பட்டிருக்கலாம். அவர்களுமே அந்த கொலையை செய்தவர்களே. ஆனால் இவர்களுடைய இன்வால்வ்மென்டை பொருத்து பாபமும் தண்டனையும் ஏற்படுவதில் கொஞ்சம் நீக்குப்போக்கு இருக்கும்.


கொல்லுகிறவன், அனுமதிக்கிறவன், உபாயம் சொல்லுகிறவன், பிடித்துக்கொடுப்பவன், உத்ஸாஹம் செய்கிறவன், சஹாயம் செய்பவன், வழி சொல்பவன், இருப்பிடமாக இருப்பவன், ஆயுதம் கொடுப்பவன், கெடுதி செய்வோருக்கு அன்னம் கொடுத்தவன், சக்தி இருந்தும் அனாதரவாக இருந்தவன், சரிதான் என்று அனுமோதிக்கிறவன்இப்படி எல்லாருமே கொலை செய்தவர்கள் ஆவார்கள்.
இதுக்கும் எக்செப்ஷன் இருக்குமில்லே?

பரோபகாரத்துக்காக ஒரு வேலை செய்யப்போய் அதில சாவு ஏற்பட்டுப் போச்சுன்னா அதுக்கு தோஷம் இல்லையாம். “ பசு, ப்ராம்ஹணன் முதலியவர்களுக்கு மருந்து, எண்ணை முதலியது, ஆகாரம் இவற்றை கொடுத்து அவற்றால் வ்யாதி உள்ளவன் இறந்து போனால் பாபத்தை அடைய மாட்டான்.” இது குறிப்பாக வைத்தியர்களுக்கு சொல்லி இருக்கிறது. (போகிற போக்கில்- மிக வயதானவர்களுக்கு மாத்திரையாக கொடுக்கக்கூடாது. சிரப் போலவே மருந்து கொடுக்க வேண்டும். மாத்திரையை முழுங்கப்போய் அது பாட்டு வழி தவறி மூச்சுக்குழாய்க்குள் போய் மூச்சு திணறி இறந்தவரை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்து இருக்கிறேன்.)

இதற்கு அடுத்த கீழ் லெவெல்…..
அதி பாதகம்:
 

2 comments:

Geetha Sambasivam said...

போகிற போக்கில்- மிக வயதானவர்களுக்கு மாத்திரையாக கொடுக்கக்கூடாது. சிரப் போலவே மருந்து கொடுக்க வேண்டும். மாத்திரையை முழுங்கப்போய் அது பாட்டு வழி தவறி மூச்சுக்குழாய்க்குள் போய் மூச்சு திணறி இறந்தவரை ஒன்றும் செய்ய முடியாமல் பார்த்து இருக்கிறேன்.)//

:((((((

பாபங்களின் வரிசை அசர அடிக்கிறது. இதிலே எந்த ஜன்மத்தில் எத்தனை பாவத்தைச் செய்தோமோனும் யோசனையாக இருக்கிறது.

திவாண்ணா said...

அதுவும் தெரியாது, பூர்வ ஜன்மங்களில என்னவெல்லாம் செய்தோம்ன்னும் தெரியாது. அதனால ப்ராயச்சித்தங்கள் செய்வதே சரி. அப்படித்தானே உபாகர்மாவின் மஹா சங்கல்பத்தில் வருகிறது?