Pages

Monday, February 27, 2012

அண்ணா- 4


இவரது அப்பா சி.விஆர் ஆசார சீலர். ரெவின்யூவில் இருந்து ரிடையர் ஆகிய பின் சிகை வைத்துக்கொண்டு தினசரி சந்த்யாவந்தனம், பூஜை, நிறைய காயத்ரி ஜபம் என்று இருந்தவர். திடீரென்று ஒரு நாள் ஒரு சிற்பி வந்து 18 கை துர்கை சிலையை கொடுத்து போனார். ஏதோ உந்துதலில் அதை செய்ததாகவும், அதை செய்த பின் துர்கை கனவில் வந்து இன்ன ஊரில் இன்ன இடத்தில் இதை சேர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் அது இந்த இடம்தான் என்று கண்டு கொண்டு சேர்ப்பிக்க வந்ததாகவும் சொல்லி சிலையை கொடுத்து போனார்.

எனக்குத்தெரிந்து சிவிஆர் அம்பத்தூரில் இருந்தார். தோட்டம் போட்டு பூச்செடிகள் வளர்த்து தினசரி பூக்களை கொய்து மணிக்கணக்கில் பூஜை செய்வார். (ஏனோ என் மீது ஒரு அபிமானம். மெடிக்கல் காலேஜ் சீட் எனக்கு கிடைக்க இவர் காயத்ரி ஜபம் செய்தாராம். கிடைத்து விட்டது. இது பல வருஷங்கள் சென்று என் பெரியப்பா சொல்லித்தான் தெரியும்.) இவருக்குப்பின்னால் பூஜை செய்ய அவரது சகோதரனிடம் கொடுத்துவிட்டார். அண்ணா நைஷ்டிக பிரம்மசாரியாக இருந்ததால் அவரிடம் கொடுக்கவில்லை.

திடீரென்று புட்டபர்த்தி பாபாவிடம் அண்ணாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. காஞ்சீபுரம் அடிக்கடி போய் கொண்டு இருந்தவர் பாபாவை தேடி போக ஆரம்பித்தார். இது அவரது நண்பர்கள் பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் அவர் அசரவில்லை. பலரும் அத்ருப்தியை வெளிப்படுத்தியதால் பெரியவாளிடமே நேரடியாக இது தப்பா என்று கேட்டுவிட்டார். பெரியவாள் தவறில்லை என்று சர்டிபிகேட் கொடுக்க இவருடன் அபிப்ராய பேதம் கொண்டவர்கள் மௌனமாயினர்! இதை தொடர்ந்து ஸ்வாமி போன்ற படைப்புகள் வரலாயின. தொடர்ந்து உறவினர் பலரும் கூட பாபா பக்தர்கள் ஆயினர். (என்னைத்தவிர்த்து!) அண்ணாவின் வீட்டிலும் விபூதி கொட்டுவது, மாலை சுற்றுவது என்று வினோதங்கள் நிகழலாயின!
 

9 comments:

Geetha Sambasivam said...

எனக்குத்தெரிந்து சிவிஆர் அம்பத்தூரில் இருந்தார். தோட்டம் போட்டு பூச்செடிகள் வளர்த்து தினசரி பூக்களை கொய்து மணிக்கணக்கில் பூஜை செய்வார்//

Thiruvenkata Nagar thane?? vague memories irukku! appo romba chinnnnnnnnnnnnnnnnnnna ponnu! :)))))en mama kuti ponar!

sury siva said...

from 1994 to 2001 i was at prithvipakkam, ambattur. Is it that Anna was there in that period?

subbu rathinam

திவாண்ணா said...

கீ அக்கா, ஆமாம்,திருவேங்கட நகர்தான். ப்ருத்விபாக்கம் டவுனில் அவரது சித்தப்பா இருந்தார். அங்கேயும் கொஞ்ச நாட்கள் இருந்தார்கள்.

திவாண்ணா said...
This comment has been removed by the author.
திவாண்ணா said...

சூரி சார், இல்லை, அதற்குள் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

Jayashree said...

ரொம்ப நாள் கழிச்சு இப்பத்தான் blogs
பக்கம் வந்து நிதானமாக படிக்க அவகாசம் . இந்த பதிவும் இதோட தொடர் 7ம் தான் எனக்கு எங்க க்ம்ப்யுடர்ல படிக்க முடியறது . மத்ததெல்லாத்துலையும் நம்பர்களா இருக்கு .எதுனாலனு தெரியல்ல. மேற்கூறிய பெரியவர் விஷ்ணு சஹஸ்ர நாமத்துக்கெல்லாம் உறை எழுதிய அண்ணாவா?

திவாண்ணா said...

இல்லை ஜெ.ஸ்ரீ அக்கா. அவர் ராமக்ருஷ்ண மடத்தை சேர்ந்தவர். மெய்ல் அட்ரஸ் கொடுங்க. பிடிஎஃப் ஆ அனுப்பறேன்.

Jayashree said...

மெயில் அட்ரசும் அனுப்பறேன். இப்ப கார்த்தால படிக்கறச்சே எல்லாம் சரியாயிடுத்து . நேத்து என்னடா இப்படி இருக்கு படிக்க முடியலியே பாபா னு நினச்சுண்டே படுத்துண்டேன்:))இவருக்கும் வாசிச்சு காட்டினேன் .இவருக்கு ரா கணபதி ரொம்ப பிடிக்கும் தெய்வத்தின் குரல் ரொம்ப ரொம்பவே பிடிக்கும் . ""தூக்கி தூக்கி போட்டுண்டு என்ன பெரிய மனிதர் இவர் ? மனுஷ ஜென்மம் என்ன அவ்வளவு நிஷித்தமா இவருக்கு "ன்னு பெரியவா மேல கோபம் வச்சுண்டு எனக்கு இந்த மனுஷர் சங்காத்தமே வேண்டாம் நு போய் கூட பெரியவாளை நான் பாக்கலை ! அதுக்கு பின்னால் ரொம்ப வேதனைப்பட்டு உண்மை புரிய வந்தது தெய்வத்தின் குரலால் தான்.அப்பவும் முதலில் இங்கே இவர் வாசிப்பார் நான் கேட்ப்பேன்!! spiritual jouneyங்கறது வாழ்க்கை அனுபவங்கள் முதலில் மனத்தை நெகிழவைத்து பின் அடங்கப் பண்ணும் சுவையான நிகழ்வுகளின் தொடர் நு புரிய வச்சது .நாம்பளோ மஹா அநாச்சாரம் அதான் நமக்கு கிடைக்கல நு நினைச்சேன் .பெரியவா உடனே கனவில் வந்து ஆசிர்வதிச்சா!!அப்படி இல்லை கணக்குனு புரிஞ்சது. thanks a million !!

திவாண்ணா said...

:-)
பக்தி சிரத்தை இருந்தா மத்தது தானே வரும்!