Pages

Wednesday, November 16, 2011

ரெவலேஷ!ன்


ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார்.
"நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக் கூட காட்டிக் கொடுக்கிறீர்களாமே?”
குரு புன்னகைத்தார்.
பண்டிதர் விடவில்லை.
"எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக் கொடுக்க வேண்டும்.”
"சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும் போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக் கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.”
அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார்.
"என்ன ஆயிற்று?”
"நீங்கள் சொன்னது போல மழையில் நேற்று மாலை நின்றேன்.”
"ம்?”
"முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!”
"பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!”

7 comments:

yrskbalu said...

you are wasting your valuable time for writing like nonsense stories.

you are capable of doing more worthfull writing .

atleast you can write which means to belong to vedas , advithas or etc.

why you writing smallthings?

you writing to whom ?

your followers are well matured minded readers.

I dont know the follower satisfied like these ?

finally - dont waste god gifts please.

திவாண்ணா said...

எல்லாருக்கும் சந்தோஷம் கொடுப்பது கஷ்டம்! பலத்தரப்பட்டவர்களும் படிக்கிறாங்க!

Ashwin Ji said...

ஏன். பாலு சார்? கதை நல்லாதானே இருக்குது?

Karthik Raju said...

நான் என்ற முட்டாள்தனத்தை உணர்ந்து கொண்டால் , வாழ்க்கையே புதியதாகி விடும் . இதை சொல்லி விளக்குவது கடினம்தான் . உணர்வது ஒன்றே வழி.

Karthik Raju said...

நான் முட்டாளாக உணர்வது ஒரு பெரிய நிகழ்வு !!!

திவாண்ணா said...

கார்த்திக், நல்ல கோணத்தில் பார்வை! இன்னும் யோசித்தாலும் கிடைக்கும். :-)

Jayashree said...

INTERESTING WAY TO PRESENT SPIRITUALITY . ZEN MASTERS TEACH SIMILARLY DON'T THEY? THIS METHOD STIMULATES ONE TO THINK RATHER THAN FEEDING EGO.தன்னை அறிய தான் இப்போ என்ன செய்து கொண்டிருக்கிறோம் , எது செய்கிறது என்கிற ப்ரக்ஞை வரச்சே உள்ளே இருப்பதை அறிய முடியும் நம்ப வாழற வாழ்க்கை அதை வாழும் விதம் தான் தான் ஆன்மீகம்.ஆசாமிக்குள்ளேயே சாமி இருக்கு!!!!