Pages

Friday, September 30, 2011

மோனம்...


ஒரு ஊரில் ஒரு வயோதிகர். கோவிலில் சன்னதி எதிரே மணிக்கணக்காக உட்கார்ந்திருப்பார்.

ஒரு நாள் ஒரு அர்ச்சகர் கேட்டார். "கடவுள் உங்ககிட்ட என்ன சொல்லறார்?”
"கடவுள் ஒண்ணும் சொல்லறதில்லை. அவர் கேட்டுக்கிட்டே இருப்பார்.”
“சரி அப்ப நீங்க அவர்கிட்ட என்ன சொல்லறீங்க?”
“நானும் ஒண்ணும் சொல்லறதில்லை! கேட்டுக்கிட்டே இருப்பேன்!”

ப்ரார்த்தனையின் நான்கு படிகள். நான் பேசுகிறேன், நீ கேட்கிறாய். நீ பேசுகிறாய், நான் கேட்கிறேன். இருவரும் பேசவில்லை, கேட்கிறோம். இருவரும் பேசுவதுமில்லை, கேட்பதுமில்லை. மோனம்.

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

மோனத்தவத்திருக்கும் அற்புதம் அருமை!

sury siva said...

பேசுவதுமில்லை. கேட்பதுமில்லை.
அதனால்தானோ என்னவோ மௌனத்தின் பொழுது தான் பல விஷயங்கள்
புலப்படுகின்றன. புரிந்துகொள்ளப்படுகின்றன.

சுப்பு ரத்தினம்.

திவாண்ணா said...

@ இரா... நன்றி!
@ சூரிசார் ஆமாம், மிகச்சரியா சொன்னீங்க!