Pages

Saturday, August 13, 2011

என்னுடையது!

ஒரு கிழவி இறந்து போனாள். யமனிடம் அழைத்துப்போனார்கள். சித்திர குப்தன் கணக்கு பார்த்தான். "ஐயா! இவள் செய்த ஒரே நல்ல காரியம் ஒரு பிச்சைக்காரனுக்கு இரக்கப்பட்டு ஒரு காரட்டை கொடுத்ததுதான். வேறு ஒரு புண்ணிய காரியமும் செய்யவில்லை" என்றான். யமன் யோசனையில் ஆழ்ந்தான். ஒரே ஒரு புண்ணிய காரியமானாலும் அதற்கு இவள் சுவர்க்கம் போக வேண்டுமே? அனுப்புங்கள் என்றான். அவள் பிச்சைக்காரனுக்கு கொடுத்த காரட் கொண்டுவரப்பட்டது. அதை அவள் பிடித்துக்கொண்டதும் அவள் மேலே போக ஆரம்பித்தாள். எங்கே போகிறோம் என்று மேலே பார்த்தாள். ஒரு ஒளி மிக்க இடம் தென் பட்டது. ஓ, அதுதான் சுவர்கம் போலும்! அவளுடைய காலை ஒரு பிச்சைக்காரன் பிடித்துக்கொண்டான். அவளுக்கு அது தெரியவே இல்லை. அவனும் அவளுடன் மேலே போய்ச்க்கொண்டு இருந்தான். பிச்சைக்காரன் காலை இன்னொருவன் பிடித்துக்கொண்டான். அவனும் மேலே போக ஆரம்பித்தான். இப்படியாக ஒருவரை ஒருவர் பற்றிக்கொண்டு சுவர்க்கம் நோக்கி போய்க்கொண்டு இருந்தனர். இதோ கிட்டே வந்துவிட்டது. கிழவி அப்போது கீழே பார்த்தாள். இத்தனை பேர் இந்த காரட்டை பிடிக்க வருகிறார்களா? கையை பலமாக ஆட்டிக்கொண்டு கத்தினாள்! ஏன் எல்லாரும் இந்த காரட்டுக்கு போட்டி போடுகிறீர்கள்? இது என்னுடையது! ஆட்டின கையில் இருந்து காரட் நழுவியது. கிழவியுடன் சேர்ந்து அத்தனை பேரும் கீழே விழுந்தார்கள்! நான், என்னுடையது போகும் வரை பிரச்சினைதான்!

7 comments:

Kavinaya said...

கொஞ்சம் புரியலை. சுவர்க்கத்துக்கு போறதுக்கு எதுக்கு காரட்டை புடிச்சுக்கணும்?

திவாண்ணா said...

கவி, நலமா?
காரட் அவள் செய்த புண்ணியத்தின் அடையாளம்!

துளசி கோபால் said...

ஹாஹாஹாஹ்ஹா

திவாண்ணா said...

துளசி அக்கா! ஆச்சரியம்! வருகைக்கு நன்றி.
ந்யூசிலாந்தில் விட்டு வந்ததெல்லாம் எப்படி இருக்கு இப்ப?

துளசி கோபால் said...

//ந்யூசிலாந்தில் விட்டு வந்ததெல்லாம் எப்படி இருக்கு இப்ப?//

என்னுடையதுன்னு சொல்லிக்க ஒன்னுமே இல்லை.

மொத்தத்தில் 'பற்றற' ன்னு இருக்கேன்:-)

Geetha Sambasivam said...

"நான்" குறித்தே படிப்பதால் உள் கருத்து எளிதாகப் புரிந்து கொள்ள முடிந்தது.

திவாண்ணா said...

:-)