Pages

Friday, July 1, 2011

காயத்ரி -6



37. ஏன் முதல்ல உரக்க சொல்லச்சொல்லறீங்க?
முன்னே சொன்ன ஸ்வர உச்சரிப்பு சரியாவது ஒரு பக்கம். இன்னொன்று பழக்கப்படாத மனசு மிகச்சுலபமாக வேறு எங்காவது 'புல் மேய' போய்விடும். உரக்கச்சொல்லும்போது அந்த சப்தமும் காதில் விழுவதால் கவனம் வைப்பது சுலபம்.

38. காயத்ரியோட அர்த்தம் என்ன?
குரு மூலமாக கேட்டுக்கொள்ள வேண்டியது. இருந்தாலும் எளிமையாக வாக்கிய அர்த்தம் என்னன்னு பார்க்கலாம்.
எந்த தேவதையை குறித்து காயத்ரி சொல்லப்படுகிறது என்பதைப்பொறுத்து இது மாறும். சாதாரணமாக இதை சூரியனாக கருதுவதால் பொருள்: எந்த சூரியனின் தேஜஸானது (உபாசகர்களாகிய) எங்களுடைய புத்திகளை எல்லா நல்ல கர்மங்களை அனுஷ்டிப்பதில் திறமையும் பற்றும், கெட்ட கர்மங்களில் பற்றில்லாதவராயும் ஆகும்படி செய்கிறதோ; ப்ரகாசமாக இருப்பவரும் (அல்லது தேவ லோகத்தில் இருப்பவரும்) எல்லா உலகங்களின் அபிவிருத்திக்கும் சாதனமான மழையை உண்டு பண்ணுகிறவருமான சூரியனுடைய புருஷார்த்தத்தில் விருப்பமுடையவர்களால் தியானம் செய்யத்தகுந்த அந்த தேஜஸை தியானிக்கிறோம்.

39.காயத்ரி ஒரு தனி மனிதனுக்காக இல்லைன்னு சொல்கிறாங்களே? அது எப்படி?
ஆமாம். இதில் ந: ன்னு வருகிறதில்லையா? அது பன்மை. எங்கள் புத்தியை தூண்டுவாயாக.
என் புத்தியை தூண்டுவாயாகன்னு சொல்லி இருக்கலாமே? ஆனால் அப்படி சொல்லவில்லையே! ஒருவரே பலருக்காக செய்யும் ப்ரார்த்தனை போல இது இருக்கு.
அதனால்தான் ஒரு ஊரில் ஸஹஸ்ர காயத்ரி செய்பவர் ஒருவர் இருந்தாலும் ஊருக்கே நன்மை என்கிறோம்.

40. அதென்ன என்னென்னெமோ இருக்க புத்தியை தூண்டுவாயாகன்னு கேட்கிறோம்?
உண்மைதான். தேவர்கள் நம்மை ஆடு மாடு மேய்ப்பது போல குச்சி வைத்து கொண்டு மேய்க்க தேவையில்லை. நமக்கு வேண்டியதை நாமே அடையலாம். அதுக்கு புத்தி சரியாக இருந்தால் போதும். அதனால்தான் புத்தியை தூண்டச்சொல்லி கேட்கிறோம்.


3 comments:

Ashwin Ji said...

நமஸ்தே திவாஜி. எல்லாப் பதிவுகளையும் படித்து வருகிறேன். உங்கள் அற்புதமான சேவை மனப்பான்மையை பணிந்து வணங்குகிறேன்.

திவாண்ணா said...

:-)))))
விஜயராகவன் எதை அப்படி ரசிசீங்க?

Geetha Sambasivam said...

பெண்களுக்கான காயத்ரி குறித்தும் சொல்லி இருக்கலாமோ?