Pages

Wednesday, June 1, 2011

வேட்டை நாய்...



ஒருவன் புதிதாக வேட்டை நாய் வாங்கினான். அடுத்தநாள் அதை அழைத்துக்கொண்டு வாத்து (கீஸ்) வேட்டையாட போனான். முதலில் அவன் சுட்ட பறவை ஏரி நீரில் விழுந்தது. நாய் சாவதானமாக நீர் மீது நடந்துபோய் வாத்தை கொண்டு வந்தது. அவனால் அதை நம்பவே முடியவில்லை. அடுத்து ஒரு வாத்தை சுட்டான்; அதுவும் ஏரியில் விழ மீண்டும் நாய் நீர் மீது நடந்து போய் வாத்தை கொண்டு வந்தது.

வெகு ஆச்சரியத்தோடு வீடு திரும்பினான். இதை சொன்னால் யார் நம்புவார்கள்? அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரரை கூட அழைத்துப்போனான். அன்றும் வாத்துகளை இருவரும் மாற்றி மாற்றி சுட சுட, நாய் நீர் மீது நடந்து போய் வாத்துகளை கொண்டு வந்தது.

அண்டை வீட்டுக்காரர் முகத்தில் சலனம் ஒன்றுமே காணவில்லை!

"ஏதேனும் வித்தியாசமா பாத்தீங்களா?”

"ம்ம்ம் .... ஒண்ணுமே இல்லையே!”

ஒரு நிமிடம் கழித்து "ஆமாம், ஒரே ஒரு விஷயம் வித்தியாசமா இருக்கு!”

"என்ன அது?”

“நாய்க்கு நீந்த தெரியலை!”

அதிசயங்கள் நடக்கவில்லை என்று இல்லை: அவை எப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. ஏன், வாழ்கையே அதிசயம்தான். நாம் கிடைத்ததை சாவதானமாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் அதை உடனே உணரலாம்!

5 comments:

RVS said...

இந்தக் கதைக்கு மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு. நல்ல கதை. நன்றி. ;-)

திவாண்ணா said...

:-)))
ஸோ முன்னாலேயே படிச்சு இருக்கீங்க! நல்லது!

Kavinaya said...

உண்மை!

திவாண்ணா said...

:-))

Geetha Sambasivam said...

ஏன், வாழ்கையே அதிசயம்தான். நாம் கிடைத்ததை சாவதானமாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் அதை உடனே உணரலாம்.//

ஒவ்வொரு நிமிஷமும், அதிசயம், அற்புதம், இறைவன் அளித்த வரம்.