Pages

Thursday, June 2, 2011

சந்த்யாவந்தனம் -10



70. ம்ம்ம்... சரி காயத்ரி பத்தி தனியா சொல்லப்போறீங்களா? சரி. அதென்ன ஜபம் முடிஞ்சு உபஸ்தானம்?
ஆமாம்! காயத்ரி பத்தி தனியா விரிவா பார்க்கலாம். தேவதையை கூப்பிட்டு ஆவாஹனம் செய்தோமில்லையா? அதனால அவங்களை உத்தமே சிகரே என்ற மந்திரத்தால வழியனுப்பவும் செய்யணும்.

71. அப்புறம்?
காலையில 'மித்ரஸ்ய', மத்தியானம் 'ஆஸத்யேன', மாலை 'இமம்மே வருண' ஆகிய மந்திரங்களல மித்ரன், சூரியன், வருணன் ஆகிய தேவதைகளை உபாசிக்கிறோம். அப்புறம் திக்குகளுக்கு நமஸ்காரம். தெற்கு திசை நாயகனான யமன், மேற்கே விச்வரூபன், வடக்கே நர்மதை கிழக்கே சூரியன் ஆகியோருக்கு வந்தனம்.

72. யமனா? பயமாயிருக்கே?
என்ன பயம்? அவரை துதித்தா சாவைப் பத்தி பயப்பட மாட்டோம். எல்லோருக்கும்தான் சாவு ஒரு நாள் சர்வ நிச்சியமாக வரப்போகிறது. ஏன் பயப்படணும்? இப்படி தெரிந்தும் சாவுக்கு பயப்படாதவங்க அரிதே!

73. சரி நர்மதை எங்கே வந்தது?
நர்மதை நதிதேவதைக்கு விஷத்தை முறிக்கிற சக்தி உண்டு. அதனால பாம்பு முதலான விஷ ஜந்துக்களில் இருந்து காப்பாத்தும்படி வடக்கே இருக்கிற நர்மதையை வேண்டிக்கிறோம்.

74. ம்க்கும். காசியிலே இருக்கிறவங்களுக்கு அது மேற்கேதானே இருக்கு? அவங்களும் வடக்கே பாத்து வேண்டிப்பாங்களா? (மாட்டிக்கிட்டாரு!!!)
தமிழ்நாட்டில் பல ஜாதி அந்தணர்கள் நர்மதை கரையிலேந்து சங்கரர் கூப்பிட்டு வந்ததாலே இங்கே வந்தாங்க. அவங்தான் இப்படி வேண்டிப்பாங்க. மற்ற இடங்களிலே இது பழக்கம் இல்லை. (பொழச்சுட்டேன்!)

75.ம்ம்ம் இதெல்லாம் முடிஞ்ச பிறகு?
சூரியனுக்கு வந்தனம் செய்து அபிவாதனம் செய்யணும். பிறகு எல்லா கர்மாக்களையும் செய்து முடிச்ச பிறகு செய்கிற 'காயேனவாசா' ...

76.அது என்ன?
'உடம்பாலும் வார்த்தைகளாலும் மனசாலும் புலன்களாலும் இயற்கையா நமக்கு வாய்ச்சு இருக்கிற ஸ்வபாவத்தாலும் எதெல்லாம் செய்கிறேனோ அவை எல்லாம், நாராயணா உனக்கு அர்ப்பணம்' ன்னு சிறிது ஜலம் எடுத்து விடுவது பழக்கம்.
கடைசியா சிறிது ஜலத்தால் ஜபம் செய்த இடத்தை ப்ரோக்ஷணம் செய்து அதை 'அத்யானோ' என்ற மந்திரத்தால் நெற்றிக்கு இட வேண்டும். மந்திரார்த்தம் "இந்த கர்மாவால் மகிழ்ச்சியடைந்த சூரியனே, எங்களுக்கு மகன், பேரன் முதலிய பாக்கியத்தை தாரும். கெட்ட கனவுகளால் ஏற்படும் கெடுதலை அகற்றும். எல்லா பாபங்களையும் நீக்கி க்ஷேமத்தை தாரும்".


3 comments:

SRINIVAS GOPALAN said...

சந்த்யாவந்தனத்தில் சொல்ற ஒவ்வொரு மந்திரத்திற்கும்அதன் விளக்கம்/காரணம் நன்றாக சொல்லி உள்ளீர்கள். நன்றி.

திவாண்ணா said...

நன்றி ஸ்ரீநிவாஸ்!
இந்த காலத்துல இதெல்லாம் பாலோ பண்ணறவங்களுக்குத்தான் நமஸ்காரம் செய்யணும்!

Geetha Sambasivam said...

தமிழ்நாட்டில் பல ஜாதி அந்தணர்கள் நர்மதை கரையிலேந்து சங்கரர் கூப்பிட்டு வந்ததாலே இங்கே வந்தாங்க. அவங்தான் இப்படி வேண்டிப்பாங்க. மற்ற இடங்களிலே இது பழக்கம் இல்லை//

இந்தச் செய்தி புதுசு. கேட்டதில்லை. அதுக்கு முன்னாடி?????