Pages

Friday, April 8, 2011

சித்தமே எல்லாம் செய்யுமா?



तदसंख्येयवासनाभिश्चित्तमपि परार्थ संहत्यकारित्वात् ।।24।।
தத³ஸம்°க்²யேயவாஸநாபி⁴ஶ்சித்தமபி பரார்த² ஸம்°ஹத்யகாரித்வாத் || 24||

தத்³ = அது; அஸம்°க்²யேய = எண்ணற்ற; வாஸநாபி⁴: = வாசனைகளால்; சித்தம் அபி =சித்தம் கூட; பரார்த² = தன்னிலும் வேறான ஒரு தத்துவத்துக்கு அங்கமாகிறது; ஸம்°ஹத்யகாரித்வாத் = இன்னொன்றின் உதவியை எதிர்பார்த்தே காரியம் செய்வதால்;

யோக சித்தாந்தப்படி சித்தம் எண்ணற்ற வாசனைகளுடன் கூடியது. சுக துக்கங்கள் இதிலேயே உள்ளன. அனுபவிக்கப்படும் பொருள் அனுபவிப்பவனுக்காகவே உள்ளது; அதாவது அவனுக்கு அங்கமானது என்பது ஒரு பார்வை. இந்த முறைப்படி, உலகில் உள்ள பொருட்கள் எல்லாம் சித்தத்துக்குத்தான் என்று பெயர் பெறும்; வேறு ஒன்றுக்கு இல்லை; ஆகவே சித்தமே எல்லாம் செய்யுமென்றால் புருஷன் என்று ஒன்று தேவையில்லை என்பது ஒரு வாதம்.

ஆனால் சித்தமானது தன்னிலும் வேறான இந்திரியங்கள், சரீரம் இவற்றின் உதவி கிடைத்தால்தான் தன் காரியங்களை செய்து கொள்ளுகிறது. வீடு தோட்டம் ஆகியன ஒரு எஜமானனுக்காக உள்ளவை. எஜமானன் இல்லையானால் அவை சீரழிந்து இல்லாமல் போய்விடும். இதே போல சித்தம் தன்னிலிருந்தும் வேறான ஒரு தத்துவத்துக்கு போக்யம் (அனுபவிக்கப்படுவது) ஆகிறது; அந்த தத்துவமே புருஷன் எனப்படும்.

2 comments:

Geetha Sambasivam said...

இதே போல சித்தம் தன்னிலிருந்தும் வேறான ஒரு தத்துவத்துக்கு போக்யம் (அனுபவிக்கப்படுவது) ஆகிறது; அந்த தத்துவமே புருஷன் எனப்படும்.//

ஓஹோ, விடை இங்கே இருக்கா?? சரி.

திவாண்ணா said...

ஆமாம். மொதத்தமும் பிடிஎஃப் ஆ கொடுத்து இருக்கேன். சேத்து இன்னொரு தரம் படிச்சா விளங்கிடும்.