Pages

Thursday, March 17, 2011

ஞானமும் அறியப்படுவதும்:



वस्तुसाम्ये चित्तभेदात्तयोर्विविक्तः पन्थाः ।।15।।
வஸ்துஸாம்யே சித்தபே⁴தா³த்தயோர்விவிக்த​: பந்தா²​: || 15||

வஸ்து ஸாம்யே அபி = அறியப்படும் வஸ்து ஒன்றாக இருந்தாலும்; சித்த பே⁴தா³த் = சித்தம் என்பது வித்தியாசப்படுவதால்; தயோர் = அவற்றின்; விவிக்த​: = வேறுவேறான; பந்தா²​: = வழிகள் (ஆக இருக்கின்றன)

பௌத்தர்களின் வாதம் என்னவெனில் ஞானத்தை தவிர்த்து ஏதுமே இல்லை. உலகில் ஒவ்வொரு கணமும் உண்டாகி அழியும் பொருட்களே இருக்கின்றன. இவற்றை அறியும் அறிவுக்கும் பொருட்களுக்கும் வேறுபாடு இல்லை. கணத்தில் தோன்றி மறையும் வஸ்துக்களே இருப்பதால் அனேக விசித்திரமானவையாக அவை தோன்றுகின்றன. ஆக ஞானத்தைத்தவிர ஏதுமே இல்லை. ஆக காரணங்களின் உண்மையான சொரூபம் முக்குணங்களே என்பது சரியில்லை.

இதற்கு பதஞ்சலி சொல்லும்பதில்:
அறியப்படும் வஸ்து ஒன்றாக இருந்தாலும் அறிகின்ற மனிதர்களில் வேற்றுமை இருக்கிறது. அதனால் வெவ்வேறான விளைவுகள் உண்டாகின்றன.
ஒரு பெண் இருக்கிறாள். அவளைப்பற்றி அவளது கணவனுக்கு ஏற்படுவது ஸுக ஞானம். அவளது குழந்தைக்கு ஏற்படுவது பாசம். அவளது சக்களத்திமார்களுக்கு ஏற்படுவது துக்கம். அவளிடம் ஆசை கொண்ட ஒருவனுக்கு உண்டாவது மோஹம். சம்பந்தமில்லாத மூன்றாம் மனிதன் ஒருவனுக்கு ஏற்படுவது உதாசீனம். இப்படி அறியப்பட்டது ஒன்றாயிருக்க உண்டாகும் அறிவின் தன்மை வெவ்வேறாக இருக்கலாம்.
ஆகவே ஞானத்தால் அறியப்பட்டதும் ஞானமும் ஒன்று என்பது பொருத்தமில்லை. அறிவோர் இடத்து முக்குணங்களில் எது தலை தூக்குகிறது என்பதைப்பொறுத்து ஞானம் அமையும்.

3 comments:

Jayashree said...

இதுக்கு அடுத்த பதிவில் கேட்ட கேள்விக்கு இங்க பதில் இருக்கு . கீழேந்து படிக்காம மேலேந்து படிச்சா!! சரி முதல்ல முன் பதிவுகளை படிச்சுட்டு இங்கே வறேன்:))

திவாண்ணா said...

:-))) வாங்கோ வாங்கோ!

Geetha Sambasivam said...

அப்பாடா, இது புரியறது!