Pages

Monday, March 14, 2011

வாசனைகளை கையாள்வது....



अतीतानागतं स्वरूपतोऽस्त्यध्वभेदाद्धर्माणाम् ।।12।।
அதீதாநாக³தம்° ஸ்வரூபதோ'ஸ்த்யத்⁴வபே⁴தா³த்³த⁴ர்மாணாம் || 12||

அதீத =இறந்த கால; அநாக³தம்° = வரப்போகின்ற; ஸ்வரூபத: = (சக்தி) ரூபமாக; அஸ்தி = இருக்கிறது; அத்⁴வ பே⁴தா³த்³ = (முக்காலத்திலும்) அவஸ்தைகள் ஒவ்வொரு வஸ்துவிலும் தனித்தனியே அனுபவிக்கப்படுவதால்; த⁴ர்மாணாம்= கார்யமாகிய தர்மங்களுக்கு;

இல்லாதது உண்டாவதில்லை; இருப்பது அழிவதில்லை என்று கீதை வாக்கியப்படி (நாஸதோ வித்3யதே பா4வ: நாபா4வோ வித்3யதேஸத: ) இருக்கும் போது எப்படி வாசனைகள் அழியக்கூடும்?
சத்தான வஸ்துக்களுக்கு இல்லாமை என்பது சம்பவிக்க முடியது என்பது சரியே.
ஒரு காரியத்துக்கு காலத்தை ஒட்டி நிலைகள் 3 இருக்கிறது. அது வெளிப்பட்டு மறையும். அதற்கு இறந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம். இந்த 3 காலங்களில் ஏதோ ஒன்றில் எல்லாமே இருந்து தீர வேண்டும்.
"வேதா3ஹம் ஸமதீதாநி வர்த்தனமானாநி ச அர்ஜுன ப4விஷ்யாணி ச பூதாநி" - மூன்று அவஸ்தைகளிலும் வஸ்துக்களை நான் சாக்ஷாத்காரம் செய்கிறேன் என்று ஸ்ரீக்ருஷ்ணன் சொன்னபடி...

காரியம் நடப்பில் இருக்கும்போது நமக்கு தெரிகிறது. உண்டாகும் முன்னும் நடந்த பின்னும் அது சக்தி ரூபமாக இருக்க வேண்டும். அப்போதுதானே அது சாக்ஷாத்கரிக்கப்பட முடியும்? சக்தி வடிவமாக காரணத்தில் ஒடுங்கி இருக்கும் இதைத்தான் பரிணாம-த்ரய ஸம்யமாத். .. (விபூதி பாதம், 16) என்று யோகிகள் சாக்ஷாத்காரம் செய்கின்றனர்.

வாசனைகள் ஸத்காரிய வஸ்துக்கள்; அவை முற்றும் நாசமாகா. இருந்தாலும் அவை நிகழ்காலத்தில்தானே நமக்கு வெளிப்படுத்திக் கொள்ளுகின்றன? அப்படி வெளிப்படுத்திக்கொண்டு கணக்கில்லா பரிமாணங்களை அடைகின்றன. இதுவே பந்தம் அல்லது சம்சாரம் எனப்படும்.
தத்துவ க்ஞானத்தால் "சரி, நடந்தது நடந்துவிட்டது, விடு" என்று அவற்றை இறந்த காலத்துக்கு தள்ளிவிட்டால் பந்தம் போய் விடுவதால் அவை நம்மை பாதிக்கமாட்டா. விவேகக்யாதி அடைந்த சித்தமுள்ளவனுக்கு இந்த வாசனைகள் மீண்டும் வெளிப்படா.
மோக்ஷ நிலையில் இருப்பவனுக்கு வாசனைகள் சக்தி ரூபமாகவே இருந்துவிடும்; பந்தகம் ஆவதில்லை.

முக்காலங்களிலும் எல்லா வஸ்துக்களும் ஸ்வரூபத்தால் இருக்குமெனில் 'இறந்த' மற்றும்  'வரும்' காலங்களில் அவற்றின் ஸ்வரூபம் என்ன?

2 comments:

Geetha Sambasivam said...

முக்காலங்களிலும் எல்லா வஸ்துக்களும் ஸ்வரூபத்தால் இருக்குமெனில் இறந்த வரும் காலங்களில் அவற்றின் ஸ்வரூபம் என்ன?//

இது புரிஞ்சதேனு நினைச்சால், கடைசியில் புரியலையே?? இறந்த வரும் காலங்கள்????? அது என்ன???

திவாண்ணா said...

hihihi 'இறந்த' க்கு அப்புறம் கமா விட்டுப்போச்சு!