Pages

Wednesday, February 16, 2011

விவேகஜ ஞானத்தால்...



 जातिलक्षणदेशैरन्यतानवच्छेदात्तुल्ययोस्ततः प्रतिपत्तिः ।।53।।
ஜாதிலக்ஷணதே³ஶைரந்யதாநவச்சே²தா³த்துல்யயோஸ்தத​: ப்ரதிபத்தி​: || 53||

ஜாதி = பசு முதலிய ஜாதி; லக்ஷண = கருப்பு வெளுப்பு முதலிய லக்ஷணம்; தே³ஶைர் = முன் பின் முதலிய தேசம் (இவற்றால்) அந்யதா = வேறாக; நவச்சே²தா³த் = நிச்சயம் சம்பவிக்காதாகையால்; துல்யயோ = ஜாதி, லக்ஷணம், நேரம் ஆகியவற்றால் ஒத்திருக்கும் இரண்டு; தத​: = க்ஷண ஸம்யமத்தால் உண்டாகிற விவேகஜ ஞானத்தால்தான்; ப்ரதிபத்தி = பேத க்ஞானம் உண்டாகிறது.​
சுலபமாக புரிந்து கொள்ள :
பசுவும் கவயம் என்ற மிருகமும் பார்க்க ஒரே மாதிரி இருக்கும். ஒரே இடத்திலும் இருக்கலாம். இவை வேறானவை என்று அவற்றின் ஜாதியால்தான் தெரியும்.
இரண்டு பசுக்கள் ஓரிடத்தில் இருக்க வெள்ளைப்பசு, கருப்பு பசு என்ற ரீதியில்தான் வேறுபடுத்தி பார்க்க முடியும்.
நெல்லி மரத்தில் உள்ள நெல்லிக்காய்கள் பார்க்க ஒரே மாதிரித்தான் இருக்கும். இந்த இடத்தில் முன் உள்ளது பின் உள்ளது என்றே அவற்றை வேறுபடுத்தி பார்க்க இயலும்.
இரண்டு இடங்களில் நெல்லிக்காய் வைத்து இருக்கிறது. பார்க்க ஒரே மாதிரி இருக்கிறது. யாரோ ஒருவர் நாம் பார்க்காத சமயம் முதல் இடத்தில் இருந்து நெல்லிக்காயை எடுத்து இரண்டாம் இடத்தில் வைத்துவிட்டு, அங்கிருந்ததை நீக்கிவிட்டால் பிறகு பார்க்கும் நாம் முதல் இடத்தில் இருந்த நெல்லிக்காய் காணவில்லை என்று நினைப்போம். ஆனால் நடந்தது வேறு என்று க்ஷணம் - கிரமத்தில் ஸம்யமம் செய்த யோகி இந்த க்ஷணத்தில் இந்த இடத்துக்கு சம்பந்தம் ஏற்பட்டது என அறிவதால் அவனுக்கு நடந்தது சரியாகத் தெரியும்.


3 comments:

Geetha Sambasivam said...

நெல்லிக்காய் உதாரணம் மட்டும் புரியுது. பசுவும், கவயம்??? புதுப் பேரா இருக்கு. இது கொஞ்சம் குழப்பம்! :(

திவாண்ணா said...

கவயம் (p. 208) [ kavayam ] , கவயமா, கவயல், s. a wild cow, bos gavoeus.
http://tinyurl.com/66x29lw

Geetha Sambasivam said...

பார்த்தேன், wild cow புரிஞ்சுக்க முடியுது. நன்றி.