Pages

Tuesday, February 15, 2011

விவேகஜ ஞானம் உண்டாக இன்னொரு உபாயம்:



  क्षणतत्क्रमयोः संयमाद्विवेकजं ज्ञानम् ।।52।।

க்ஷணதத்க்ரமயோ​: ஸம்°யமாத்³விவேகஜம்° ஜ்ஞாநம் || 52||

க்ஷணம் தத் க்ரமயோ​: = க்ஷணமும் அதன் கிரமுமான காலம்; ஸம்°யமாத்³ = இதில் ஸம்யமம் செய்ய; விவேகஜம்° = எல்லா வஸ்துக்களையும் பகுத்தறிவதை முன்னிட்ட; ஜ்ஞாநம் = ஞானம் (உண்டாகிறது)

க்ஷணம் என்பது ஒரு காலநிலை. ஆங்கிலத்தில் இன்ஸ்டன்ட் என்பது. அதில் முன்பாகம் பின்பாகம் என்றெல்லாம் இருக்க முடியாத அளவு நுண்ணியது. க்ஷணம் அடுத்த க்ஷணம் என்று தொடர்ந்து வரும் பிரவாகம் கிரமம். க்ஷணம் அடுத்த க்ஷணத்தில் மறைந்துவிடுகிறது. க்ஷணங்களின் சமுதாயம் நிமிஷம், மணி, வருஷம் போன்றவை. க்ஷணமும் உண்மையானதல்ல; ஆகவே அதன் சமுதாயமும் உண்மையானதல்ல. (நிரந்தரமல்ல என பொருள் கொள்க. எது நிரந்தரம் இல்லையோ அது உண்மையல்ல. தற்காலிகமே.) ஒவ்வொரு க்ஷணமும் ஒவ்வொரு வஸ்துவும் மாறிக்கொண்டே இருப்பதால், இந்த க்ஷணத்திலும் அதன் கிரமத்திலும் ஸம்யமம் செய்து சாக்ஷாத்கரித்தால் எல்லா வஸ்துக்களையும் அவற்றின் எல்லா விசேஷங்களும் உட்பட அறியப்படுகிறது. இதுவே ஸர்வக்ஞதை. இதனால் இவை எல்லாவற்றிலும் புருஷன் வேறுபட்டவன் என்ற ஞானமும் உண்டாகிறது.

3 comments:

Geetha Sambasivam said...

அப்பாடா, திறக்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுத்து!

முதல் பிரதம கல்பிகன் மட்டுமே ஓகே, கொஞ்சம் புரியறாப்போல் இருக்கு, மத்தது சுத்தம்! :( இதை இன்னும் கொஞ்சம் எளிமையாப் புரியறாப் போல் சொல்லி இருக்கலாமோ?? ம்ம்ம்ம்ம்ம்??? முக்கியமா மது தீபிகன்.

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம்ம் மாத்தி வந்திருக்கு! :( இணையம் செய்த கோலம்! :P

திவாண்ணா said...

:-)))