Pages

Monday, January 31, 2011

ஆகாயத்தில் பறத்தல்:



Patanjali yoga sutra

  कायाकाशयोः सम्बन्धसंयमालघुतूलसमापत्तेश्चाऽऽकाशगमनम् ।।42।।

காயாகாஶயோ​: ஸம்ப³ந்த⁴ஸம்°யமாலகு⁴தூலஸமாபத்தேஶ்சா''காஶக³மநம் || 42||

காய ஆகாஶயோ​: = உடல் ஆகாசம் இவற்றின்; ஸம்ப³ந்த⁴ = சம்பந்த; ஸம்°யமாத் = ஸம்யமம் செய்வதாலும்; லகு⁴ தூல ஸமாபத்தேஶ்ச = மிக மெல்லிய பஞ்சு முதலானவற்றில் தாரணா-த்யான ஸமாதிகளாலும்; ஆகாஶ க³மநம் = ஆகாயத்தில் சஞ்சரித்தல் (உண்டாகிறது)
ஒரு இடைவெளி இருக்குமிடத்தில்தான் சரீரம் இருக்க முடியும். ஆகாசமோ எங்கும் வியாபித்து இருக்கிறது. சரீரம் இருக்குமிடத்தில் ஆகாசம் இருக்கவே இருக்கும். இந்த சம்பந்தத்தில் தாரணா, த்யானம் செய்து ஸாக்ஷாத்கரித்துவிட்டால் ஒருவனுக்கு பக்ஷிகள் போல வானத்தில் பறக்கும் சக்தி உண்டாகிறது. அல்லது பஞ்சு முதல் பரமாணு வரை உள்ள மிக நுண்ணிய லகுவான பொருட்களில் ஸம்யமம் செய்து லகுத்வம் என்ற குணத்தை ஸாக்ஷாத்கரித்துவிட்டால் ஆகாயத்தில் சஞ்சரிக்கும் சக்தி கிடைக்கிறது.


3 comments:

Geetha Sambasivam said...

ஆகாயத்தில் சஞ்சரித்தல், இது தான் நான் சொல்ல வந்த சக்கரத்தம்மாள் செய்தது. நான் தப்பாய் ஆகாயத்தில் செல்லும் தன்மை என்பதில் பின்னூட்டம் இட்டிருக்கேன். அவங்களைப்பத்தி எழுதி வச்சதைக் காணோம், :( வேறொருத்தர் எழுதி இருக்கார். அதன் சுட்டிதரேன்.

திவாண்ணா said...

ஓ! ;-))

vijayaragavan said...

/* காயாகாஶயோ​: */
It is காயாகாஸ not Aagaaya.