Pages

Monday, December 20, 2010

ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள்:



त्रयमन्तरङ्गं पूर्वेभ्यः ।।7।।

த்ரயமந்தரங்க³ம்° பூர்வேப்⁴ய​: || 7||

த்ரயம் = (தாரணை, த்யானம், ஸமாதி இந்த) மூன்றும்; அந்தரங்க³ம்° = (ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அவசியமான) அந்தரங்க சாதனங்களாகும். = பூர்வேப்⁴ய​: = முன் சொன்னவற்றைக் காட்டிலும் (யமம் முதலானவை)
முன் சொன்ன யமம் முதலானவற்றைக் காட்டிலும் ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு தாரணை, த்யானம், ஸமாதி இந்த மூன்றும் அவசியமான அந்தரங்க சாதனங்களாகும்.

அஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள்:

 तदपि बहिरंङ्गं निर्बीजस्य ।।8।।

தத³பி ப³ஹிரம்°ங்க³ம்° நிர்பீ³ஜஸ்ய || 8||

தத³பி = (தாரணை முதலான) அவையே; ப³ஹிரம்°ங்க³ம்° = பகிரங்கமானவை; நிர்பீ³ஜஸ்ய = நிர்பீஜ ஸமாதிக்கு.

தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன ஸம்ப்ரக்ஞாத ஸமாதிக்கு அந்தரங்க சாதனங்கள் ஆனாலும் அவை அஸம்ப்ரக்ஞாத பிரக்ஞாத நிர்பீஜ ஸமாதிக்கு பகிரங்க சாதனங்கள் ஆகும்.


ப்ரக்ஞை இருக்கும் போது உண்டாவது ஸம்ப்ரக்ஞாத ஸமாதி. அதனால் அப்போது சித்தத்தின் பரிணாமம் என்ன என்று தெரிகிறது. அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் ப்ரக்ஞை இல்லை. அதனால் சித்தத்தின் பரிணாமம் அப்போது என்ன என்று தெரிவதில்லை; தெரிவதில்லை என்பதால் பரிணாமம் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. தாரணை, த்யானம், ஸமாதி ஆகியன சித்தத்தின் நிலை என்பதால் அவை அஸம்ப்ரக்ஞாத ஸமாதியில் உள்ளே இருப்பதாக – அந்தரங்கமானதாக – சொல்ல முடியாது.

3 comments:

sury siva said...

அஸம்ப்ரஞாத நிலைக்கு ஸம்ப்ரஞாத நிலையிலிருந்துதானே செல்ல இயலும் .
பிரக்ஞை இருக்கிறது என்பது மனசுக்குப் புரிகிறது.
பிரக்ஞை போகும்பொழுது, அது போகிறது , அடுத்த அஸம்ப்ரஞாத நிலைக்குச்
செல்கிறோம் என்பதை சித்தம் உணர்கிறதா ?

The thinner demarcation line may please be elucidated and enlightened.

சுப்பு ரத்தினம்.

திவாண்ணா said...

ம்ம்ம்ம்ம்ம்... வாங்க சூரிசார், வாங்க! ரொம்ப நாள் கழிச்சு வரீங்களோ? வந்ததுமே டமால்ன்னு பயங்கர கேள்வி போட்டுட்டீங்க! :-))
யோசிச்சு பாத்தா, லாஜிகலா - அப்படி சித்தம் உணராது. உணர்ந்தா பிரக்ஞை போனதாக ஆகாதே? அனுபவப்பட்டவரே பதில் சொல்ல முடியும்.
இருந்தாலும் அஸம்ப்ரக்ஞாத ஸமாதி பத்தி முன்னே எழுதினதை படிச்சு பார்க்கலாம். http://anmikam4dumbme.blogspot.com/2010/08/18-18.html

Geetha Sambasivam said...

அட? நான் கேட்க நினைச்சதை சூரி சார் கேட்டுட்டார். நன்றி இருவருக்கும்.